நோவாக் ஜோக்கொவிச்
| செல்லப் பெயர் | நோல்,[1] த ஜோக்கர்[2] | |
| நாடு | ||
| வசிப்பிடம் | ||
| பிறந்த திகதி | மே 22, 1987 | |
| பிறந்த இடம் | பெல்கிரேட், செர்பியா அப்பொழுது யுகோசிலாவியா |
|
| உயரம் | 1.87 m (6) | |
| நிறை | 80 kg (176 lb; 12.60 st) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 2003 | |
| விளையாட்டுக்கள் | வலது கை; இரட்டை கை பின் அடி | |
| வெற்றிப் பணம் | $ 7,955,470 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 158 - 59 | |
| பெற்ற பட்டங்கள்: | 10 | |
| அதி கூடிய தரவரிசை: | 3 (ஜூலை 9 2007) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | வெற்றி (2008,2011,2012) | |
| பிரெஞ்சு ஓப்பன் | அரையிறுதி (2007, 2008, 2011) | |
| விம்பிள்டன் | அரையிறுதி (2007, 2010), வெற்றி (2011) | |
| அமெரிக்க ஓப்பன் | அரையிறுதி (2008, 2009), இறுதி (2007,2010), வெற்றி (2011) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 15 - 25 | |
| பெற்ற பட்டங்கள்: | 0 | |
| அதிகூடிய தரவரிசை: | 134 (ஆகஸ்ட் 20 2007) | |
நோவாக் ஜோக்கொவிச் (செர்பிய மொழி: Новак Ђоковић, IPA: [ˈnɔvaːk 'ʥɔːkɔviʨ],
கேள், பிறப்பு மே 22, 1987, பெல்கிரேட்) செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆவார். சூலை 4,2011 முதல் டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கத்தின் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளவர் ஆவார்.
ஜனவரி 2008 ஆஸ்திரேலியன் ஓப்பனில் தனது முதலாம் பெருவெற்றி (கிராண்ட் ஸ்லாம்) போட்டியை வென்றுள்ளார். பெருவெற்றித்தொடர் போட்டி ஒன்றில் பட்டம் வென்ற முதல் செர்பிய டென்னிஸ் வீரர் இவரே.இதனை அடுத்து 2011ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் மற்றும் யூ.எசு. ஓப்பன் ஆகிய மூன்று பெருவெற்றிப் போட்டிகளிலும் வென்றுள்ளார். இதனால் ஒரே நாட்காட்டியாண்டில் மூன்று பெருவெற்றித் தொடர் போட்டிகளை வென்ற ஆறாவது விளையாட்டுக்காரராக விளங்குகிறார். 2010ஆம் ஆண்டு டேவிசுக் கோப்பையை வென்ற அணியில் பங்கெடுத்துள்ளார். 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓப்பனில் ரஃபயெல் நதாலை 5-7, 6-4, 6-2, 6-7 (5), 7-5 என்று ஐந்து தொகுப்புகளில் வென்று வெற்றி பெற்றார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "The Official Internet Site of Novak Djokovic". பார்த்த நாள் 2007-08-14.
- ↑ Pearce, Linda (2008-01-12). "The man they call the Djoker". The Age. பார்த்த நாள் 2008-01-31.