டேவிசுக் கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிசுக் கோப்பை
டேவிசுக் கோப்பை
விளையாட்டுடென்னிசு
நிறுவல்1900
அணிகள் எண்ணிக்கை16 (உலகக் குழு)
137 (2007 மொத்தம்)
நாடு(கள்)ITF உறுப்பினர் நாடுகள்
மிக அண்மைய சாதனையாளர்(கள்) எசுப்பானியா

டேவிசுக் கோப்பை (டேவிஸ் கோப்பை, Davis Cup) ஆண்கள் டென்னிசு விளையாட்டில் ஓர் முதன்மையான பன்னாட்டு அணி விளையாட்டுப் போட்டி ஆகும். இதனை பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு (ITF) நடத்துகிறது. இப்போட்டி இக்கூட்டமைப்பின் அங்கத்தினர் நாடுகளுக்கிடையே தோல்வியுறுவி வடிவத்தில் நடைபெறுகிறது. இது துவக்கத்தில் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அணிகளிடையே சவால் போட்டியாக 1900ஆம் ஆண்டு யடைபெற்றது. 2005ஆம் ஆண்டில் 134 நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. இப்போட்டியின் வரலாற்றில் கூடுதலாக வெற்றி பெற்ற நாடுகள் ஐக்கிய அமெரிக்க நாடு (32 முறை கோப்பையை வென்றும் 29 முறை இரண்டாவது நிலையிலும்) மற்றும் ஆத்திரேலியா (28 முறை வென்றும், நான்கு முறை நியூசிலாந்துடன் இணைந்து ஆத்திரேலேசியா என வென்றது உட்பட, 19 முறை இரண்டாவது நிலையிலும்) ஆகும். தற்போதைய வெற்றியாளராக ஸ்பெயின் விளங்குகிறது.

இதற்கு இணையான பெண்களுக்கான கோப்பை பெட் கோப்பை என வழங்கப்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிசுக்_கோப்பை&oldid=3917876" இலிருந்து மீள்விக்கப்பட்டது