வேட்டைப்பெருமாள் கோயில், புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேட்டைப்பெருமாள் கோயில் புதுக்கோட்டை நகரிலுள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் புதுக்கோட்டையின் பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ளது.

சிறப்புக்கள்[தொகு]

இக்கோயில் பெருமாள் என்ற போர் வீரனின் நினைவாக கட்டப்பட்டது. இவர் வேட்டையாடுதல், போர்த் தந்திரங்களில் சிறந்து விளங்கினார். சிவகங்கை மன்னரின் அரண்மனையிலிருந்து தெட்சிணாமூர்த்தி கடவுள் விக்கிரகத்தை கவர்ந்து வரும்போது எதிரிகளின் விச அம்பு முதுகில் பாய்ந்து வீழ்ந்த இடமே தற்பொழுது கோயில் உள்ள இடமாகும். அவ்வீரனின் நினைவாக புதுக்கோட்டை மன்னர் இக்கோயிலைக் கட்டினார். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் திருவிழா மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் திருவாதிரையையொட்டி விழா நடைபெறுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]