உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி(III) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(III) புளோரைடு
வேறு பெயர்கள்
வெள்ளி முப்புளோரைடு
அர்ஜெண்டிக் புளோரைடு
இனங்காட்டிகள்
91899-63-7 Y
ChemSpider 65322083
InChI
  • InChI=1S/Ag.3FH/h;3*1H/q+3;;;/p-3
    Key: PGGQSYHSNJQLOQ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139031062
  • [F-].[F-].[F-].[Ag+3]
பண்புகள்
AgF3
வாய்ப்பாட்டு எடை 164.86 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


வெள்ளி(III) புளோரைடு (Silver(III) fluoride) என்பது AgF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிலைப்புத்தன்மையற்ற இச்சேர்மம் பிரகாசமான சிவப்பு நிறத்தில் எதிர்காந்தப்பண்பு கொண்டதாகவும், வழக்கத்திற்கு மாறாக வெள்ளி +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகிறது. வெள்ளி(III) புளோரைடின் படிகக் கட்டமைப்பு தங்கம்(III) புளோரைடின் கட்டமைப்பை ஒத்தகட்டமைப்பாகும். இது புளோரோ பாலங்களால் சங்கிலிகளாக இணைக்கப்பட்ட செவ்வக AgF4 அலகுகளைக் கொண்ட ஒரு பலபடியாகும்.[1]

தயாரிப்பு

[தொகு]

டெட்ராபுளோரோ அர்ஜெண்டேட்டு (III) அயனிகள் உள்ள கரைசலை நீரற்ற ஐதரசன் புளோரைடு மற்றும் போரான் முப்புளோரைடு ஆகியவற்றைச் சேர்த்து சூடுபடுத்தி AgF3 தயாரிக்கப்படுகிறது.[2] விகிதவியல் அளவுகளில் பொட்டாசியம், வெள்ளி நைட்ரேட்டுகளை புளோரின் வாயு நிரப்பப்பட்ட மூடிய அழுத்தக் கொள்கலனில் 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் இரண்டு முறை 24 மணி நேரத்திற்கு சூடுபடுத்தி பொட்டாசியம் டெட்ராபுளோரோ அர்ஜெண்டேட்டு தயாரிக்கப்படுகிறது. நீரற்ற ஐதரசன் புளோரைடில் கரைக்கப்பட்டால் இது அறைவெப்பநிலையில் தன்னிச்சையாக சிதைவடைந்து ஒரே இரவில் Ag3F8 உருவாகும். கோட்பாடுகளில் விவரிக்கப்பட்டுள்ள உயர்-இணைதிற வெள்ளி சேர்மங்கள் அவற்றின் பல்வேறு வண்ணங்களுக்கு குறிப்பிடத்தக்கவையாக உள்ளன: KAgF4 பிரகாசமான ஆரஞ்சு, AgF3 பிரகாசமான சிவப்பு, AgFAsF6 ஆழ்ந்த நீலம், Ag3F8 ஆழ்ந்த செம்பழுப்பு, Pd(AgF4)2 எலுமிச்சம் பச்சை.

தொடக்ககால வெள்ளி(III) புளோரைடு தயாரிப்புகள் மிகவும் தீவிர வினைகள் கொண்டவையாகும். கிரிப்டான் இருபுளோரைடை புளோரினேற்றும் முகவராகப் பயன்படுத்துவதுடன் அம்முறைகள் சம்பந்தப்பட்டிருந்தன. கலப்பு இணைதிற Ag3F8 உற்பத்திக்கும் அவை வழிவகுத்தன. இதில் வெள்ளி(II) டெட்ராபுளோரோ அர்ஜெண்டேட்டு(III);Ag2F5 போன்றவை கலந்திருப்பதாக கருதப்பட்டது. AgF3 உடன் AgFAsF6 சேர்த்து வினைப்படுத்தி (AgF)+AgF4 உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zemva, Boris; Lutar, Karel; Jesih, Adolf; Casteel, William J.; Wilkinson, Angus P.; Cox, David E.; von Dreele, Robert B.; Borrmann, Horst et al. (1991). "Silver Trifluoride: Preparation, Crystal Structure, Some Properties, and Comparison with AuF3". J Am Chem Soc 113 (11): 4192–4198. doi:10.1021/ja00011a021. 
  2. Casteel, William (September 1992). The Synthesis and Structural Characterization of Novel Transition Metal Fluorides (PhD).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி(III)_புளோரைடு&oldid=3386639" இலிருந்து மீள்விக்கப்பட்டது