மோனோசோடியம் பாசுபேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டையைதரசன் பாசுபேட்டு
| |
வேறு பெயர்கள்
ஒற்றைக்கார சோடியம் பாசுபேட்டு;
சோடியம் டையைதரசன் பாசுபேட்டு; சோடியம் பைபாசுபேட்டு | |
இனங்காட்டிகள் | |
7558-80-7 | |
ChEBI | CHEBI:37585 |
ChEMBL | ChEMBL1368 |
ChemSpider | 22626 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24204 |
| |
UNII | KH7I04HPUU |
பண்புகள் | |
NaH2PO4 | |
வாய்ப்பாட்டு எடை | 119.98 கி/மோல் |
தோற்றம் | வெண்மை தூள் முதல் படிகம் வரை |
அடர்த்தி | 2.36 கி/செ.மீ3 (நீரிலி) |
59.90 கி/100 மி.லி (0°செ) | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | மோனோபொட்டாசியம் பாசுபேட்டு மோனோவமோனியம் பாசுபேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மோனோசோடியம் பாசுபேட்டு (Monosodium phosphate) என்பது சோடியம் டையைதரசன் பாசுபேட்டு (H2PO4−) எதிர்மின் அயனியுடன் சேர்ந்திருக்கும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை ஒற்றைக்கார சோடியம் பாசுப்பேட்டு, சோடியம் டையைதரசன் பாசுபேட்டு மற்றும் எம்.எசு.பி என்ற சுருக்கப் பெயர்களாலும் அழைப்பர். அறியப்படுகின்ற பல சோடியம் பாசுபேட்டுகளுள் ஒன்றான இதுவும் பொதுவான தொழிற்சாலை பயன்பாட்டு வேதிப்பொருளாகும். நீரிலி வடிவத்திலும் ஒற்றை மற்றும் இருநீரேற்று வடிவபாசுபேட்டுகளாகவும் மோனோசோடியம் பாசுபேட்டு காணப்படுகிறது [1].
தயாரிப்பு
[தொகு]பாசுபாரிக் அமிலத்தை பகுதி நடுநிலையாக்கல் வினையின் மூலம் மோனோசோடியம் பாசுபேட்டு தயாரிக்கப்படுகிறது. இச்சேர்மத்தின் காடித்தன்மை எண் (pKa) மதிப்பு 6.8-7.2 என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மதிப்பு pKa வை உறுதிப்படுத்தும்போது காணப்படும் இயற்பிய வேதியியல் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டதாகும் [2].
169 °செல்சியசு வெப்பநிலைக்கு மேலாக மோனோ சொடியம் பாசுபேட்டை சூடுபடுத்தும்போது தொடர்புடைய சோடியம் அமில பைரோபாசுபேட்டு உருவாகிறது
- 2 NaH2PO4 → Na2H2P2O7 + H2O
பயன்கள்
[தொகு]உணவுகளிலும் நீரை தூய்மையாக்கும் செயல்முறையிலும் பாசுபேட்டுகள் பயன்படுகின்றன. இவ்வுப்பு போன்ற பல்வேறு வகையான சோடியம் பாசுபேட்டு கலவைகளை பயன்படுத்துவதன் மூலம் pH மதிப்பு பொதுவாகச் சரிசெய்யப்படுகிறது[1]. சோடியம் குளோரைடு சமான அல்லது இ-மதிப்பு 0.49 என்றும் 4.5 பகுதி தண்ணீரில் இவ்வுப்பு கரையுமென்றும் கூறப்படுகிறது.
உணவு சேர்பொருள்
[தொகு]விலங்கு உணவுப் பொருள்கள், பற்பசைகள், ஆவியாக்கப்படும் பால் ஆகியவற்றில் மோனோ சோடியம் பாசுபேட்டு உணவு சேர் பொருளாகப் சேர்க்கப்படுகிறது. பாகுமை மிகுத்தல் முகவராகவும், பால்மமாக்கியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
மக்னீசியம் கண்டறிதல்
[தொகு]உப்புகளில் மக்னீசியம் உள்ளதாவென கண்டறியும் சோதனைகளில் மோனோ சோடியம் பாசுபேட்டு பயன்படுகிறது. மக்னீசியம் கலந்துள்ள ஓர் உப்புடன் அமோனியம் குளோரைடு, அமோனியம் ஐதராக்சைடு, மோனோசோடியம் பாசுபேட்டு ஆகியவற்றை நீரிய அல்லது நீர்த்த ஐதரோ குளோரிக் அமிலக் கரைசலுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் வெண்மை நிற வீழ்படிவு தோன்றும். இவ்வாறு வீழ்படிவு தோன்றுவது மக்னீசிய அயனிகளின் இருப்பை தெரிவிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Klaus Schrödter, Gerhard Bettermann, Thomas Staffel, Friedrich Wahl, Thomas Klein, Thomas Hofmann "Phosphoric Acid and Phosphates" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2008, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a19_465.pub3
- ↑ Salaun, F.: "Influence of mineral environment on the buffering capacity of casein micelles" பரணிடப்பட்டது 2012-03-13 at the வந்தவழி இயந்திரம், "Milchwissenschaft", 62(1):3