உள்ளடக்கத்துக்குச் செல்

மேல் சுபன்சிரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் சுபன்சிரி மாவட்டம்
மேல் சுபன்சிரிமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்டபொரிஜோ
பரப்பு7,032 km2 (2,715 sq mi)
மக்கட்தொகை83,448 (2011)
படிப்பறிவு64.0%
பாலின விகிதம்982
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மேல் சுபன்சிரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். 1987 ஆம் ஆண்டு சுபன்சிரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது உருவாக்கப்பட்டவையே கீழ் சுபன்சிரி மாவட்டம், மேல் சுபன்சிரி மாவட்டம் என்பன.

அமைப்பு

[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக டபொரிஜோ நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 7032 சதுர கிலோமீடராகும். இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு டபொரிஜோ, டும்பொரிஜோ, தலிஹா, நாசோ, சியும் மற்றும் மாரோ. இந்த மாவட்டம் நான்கு சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது.

மக்கள்

[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான டகின், மலை மிரி, மற்றும் காலோ இனத்தை சேர்ந்தவர்கள்.

மொழி

[தொகு]

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_சுபன்சிரி_மாவட்டம்&oldid=3890770" இலிருந்து மீள்விக்கப்பட்டது