உள்ளடக்கத்துக்குச் செல்

பில் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில் மக்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
              குஜராத்3,441,945 [1]
              மத்தியப் பிரதேசம்4,619,068 [2]
              மகாராஷ்டிரம்1,818,792 [3]
              இராஜஸ்தான்2,805,948 [4]
பாகிஸ்தான்382,000
மொழி(கள்)
பில் மொழிகள்
சமயங்கள்
இந்து, கிறித்தவம்

பில் மக்கள் அல்லது பீல் மக்கள் (Bhils or Bheel) மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் ஆவர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் தார்பர்க்கர் மாவட்டத்திலும் பில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இந்திய-ஆரிய மொழிகளின் ஒரு கிளை மொழியான பில் மொழியை இப்பழங்குடி மக்கள் பேசுகின்றனர்.

2001-ஆம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகையில் கோண்டு பழங்குடி மக்களுக்கு அடுத்து பில் பழங்குடி மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.[5]

இந்திய அரசு பில் மக்களை பட்டியல் பழங்குடி மக்களாக வகைப்படுத்தியுள்ளதால்; கல்வி; வேலைவாய்ப்பு; அரசியல் வளர்ச்சியில் பில் மக்களுக்கு அரசு முன்னுரிமை வழங்குகிறது.

வாழிடங்கள்

[தொகு]

பில் பழங்குடி மக்கள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4,619,068 மக்களும்; இராஜஸ்தான் மாநிலத்தில் 2,805,948 மக்களும்; குஜராத் மாநிலத்தில் 34,41,945 மக்களும்; மற்றும் மகாராஷ்டிரம் மாநிலத்தில் 1,818,792 மக்களும், மலைகள் சூழ்ந்த பகுதிகளில் வாழ்கின்றனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தார்பர்க்கர் மாவட்டத்தில் 3,82,000 பில் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

படக்காட்சியகம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat: Data Highlights the Scheduled Tribes" (PDF). Census of India 2001. Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-03-31.
  2. "Madhya Pradesh: Data Highlights the Scheduled Tribes" (PDF). Census of India 2001. Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-03-06.
  3. "Maharashtra: Data Highlights the Scheduled Tribes" (PDF). Census of India 2001. Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-03-31.
  4. "Rajasthan: Data Highlights the Scheduled Tribes" (PDF). Census of India 2001. Census Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2008-03-31.
  5. Demographic Status of Scheduled Tribe Population of India, Minitry of Tribal Affairs, India [1]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhil people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_மக்கள்&oldid=3686850" இலிருந்து மீள்விக்கப்பட்டது