பிரான்சிய மேற்கோட்குறி
பிரான்சிய மேற்கோட்குறி அல்லது கில்லெமெட்டு (Guillemet) என்பது நிறுத்தக்குறிகளில் ஒன்றாகும்.[1]
«, », ‹, › ஆகிய குறியீடுகள் பிரான்சிய மேற்கோட்குறிகள் என அழைக்கப்படும். சில மொழிகளில் உரையைக் குறிப்பதற்குப் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சிய மேற்கோட்குறிகள் பார்ப்பதற்கு <, > போன்ற கணிதக் குறியீடுகளைப் போலிருந்தாலும் அவை இவற்றிலிருந்து வேறுபட்டவை.
சொற்பிறப்பியல்
[தொகு]பிரான்சிய நாட்டவரான குயள்ளுமே லெ பே என்பவரின் பெயரில் குயள்ளுமே என்ற பகுதியிலிருந்து கில்லெமெட்டு என்ற பெயர் பெறப்பட்டது.[2]
பயன்பாடுகள்
[தொகு]உரை
[தொகு]«உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- அல்பானியம்
- அரபு
- அருமேனியம்
- பெலருசியம்
- பிரித்தானி
- பல்கேரியம் (அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது.)
- காட்டலான்
- சீனம் (நூல், தொகுப்பு என்பனவற்றின் தலைப்பைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.)
- எசுத்தோனியம்
- அருபிதம்
- பிரான்சியம் (« உரை » என்றவாறு இடைவெளி விட்டுப் பயன்படுத்தப்படுகின்றது.)
- கலீசியம்
- கிரேக்கம்
- இத்தாலியம்
- கெமர்
- வட கொரியம் (தென்கொரியாவில் " பயன்படுத்தப்படுகின்றது.)
- இலத்துவியம்
- இலித்துவானியம்
- நோர்வேசியம்
- பாரசீகம்
- போர்த்துகேயம் (இப்போது பெரும்பாலும் மேற்கோட்குறிகளே பயன்படுத்தப்படுகின்றன.)
- போலியம் (பொதுவாக மேற்கோளுள் உள்ள மேற்கோளைக் காட்டப் பயன்படுத்தப்படுகின்றது.)
- உருமானியம் (மேற்கோளுள் உள்ள மேற்கோளைக் காட்ட மட்டும் பயன்படுத்தப்படுகின்றது.)
- உருசியம்
- எசுப்பானியம் (எசுப்பானியாவிற்கு வெளியில் பிரான்சிய மேற்கோட்குறியின் பயன்பாடு பெரிதாக இல்லை.)
- சுவிட்சர்லாந்து மொழிகள்
- துருக்கியம்
- உக்குரேனியம்
- வியட்நாமியம்
»உரை« என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்குப் பின்வரும் மொழிகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
- குரோவாசியம் (அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றது.)
- செக்கு
- தேனியம்
- இடாய்ச்சு (சுவிட்சர்லாந்தைத் தவிர)
- அங்கேரியம்
- செருபியம்
- சுலோவாக்கியம்
- சுலோவேனியம்
- சுவீடியம்
»உரை» என்ற வடிவத்தில் உரையைக் காட்டுவதற்கு பின்னிய மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
திசை
[தொகு]தொலைக் கட்டுப்படுத்திகளில் வேகமாய் முன்நகர்த்தல், வேகமாய் மீள்சுற்றல் ஆகியவற்றுக்கான விசைகளில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கணினியியல்
[தொகு]பெர்ல் 6 கணினி மொழியில் பிரான்சிய மேற்கோட்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒருங்குறி
[தொகு]ஒருங்குறியில் U+00AB, U+00BB என்பன பிரான்சிய மேற்கோட்குறிகளை உள்ளிடப் பயன்படுத்தப்படுகின்றன.[3]