காட்டலான் மொழி
காட்டலான் (Catalan language) என்பது ஒரு உரோமானிய மொழி. இது அந்தோராவின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். மேலும் பாலேயாரிக் தீவுகளிலும் காட்டலோனியாவிலும் இணை ஆட்சி மொழியாகவும் உள்ளது.
வரலாறு
[தொகு]காட்டலான் மொழி வல்கர் இலத்தீனிலிருந்து பைரெனி மலைத்தொடர்களின் கிழக்கு பகுதியிலிருந்து பேசப்படத் துவங்கியது. இது கால்லோ-உரோமானியம், ஐபெரோ-உரோமானியம் மற்றும் கால்லோ-இத்தாலியம் போன்ற மொழிகளை ஒத்தது.
வகைப்படுத்துதல்
[தொகு]- இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
- இத்தாலிய மொழிக்குடும்பம்
- உரோமானிய மொழிக்குடும்பம்
- இத்தாலிய-மேற்கு மொழிக்குடும்பம்
- மேற்கு இத்தாலிய-மேற்கத்திய மொழிக்குடும்பம்
- கால்லோ-ஐபீரிய மொழிக்குடும்பம்
- ஐபீரிய-உரோமானிய மொழிக்குடும்பம்
- கிழக்கு ஐபீரிய மொழிக்குடும்பம்
- ஐபீரிய-உரோமானிய மொழிக்குடும்பம்
- கால்லோ-ஐபீரிய மொழிக்குடும்பம்
- மேற்கு இத்தாலிய-மேற்கத்திய மொழிக்குடும்பம்
- இத்தாலிய-மேற்கு மொழிக்குடும்பம்
- உரோமானிய மொழிக்குடும்பம்
- இத்தாலிய மொழிக்குடும்பம்
மொழியின் நிலப்பரப்பு
[தொகு]காட்டலான் பேசப்படும் இடங்கள்:
- காட்டலோனியா, எசுப்பானியா.
- பெரும்பாலான வாலென்சிய சமுதாயம், எசுப்பானியா.
- ஆரகோனிலுள்ள சில இடங்கள், எசுப்பானியா.
- பாலேயாரிக் தீவுகள், எசுப்பானியா.
- அந்தோரா
- வட காட்டலோனியா, பிரான்சு.
- அல்கேரோ நகரம், சார்தீனியா, இத்தாலி.
- கார்சே எனப்படும் மூர்சியாவிலுள்ள ஒரு சிறு இடம், எசுப்பானியா.
காட்டலான் பேசுவோரின் எண்ணிக்கை
[தொகு]காட்டலான் ஆட்சி மொழியாக (அல்லது இணை ஆட்சி மொழியாக) உள்ள இடங்கள்
[தொகு]இடம் | புரிந்துகொள்ளக் கூடியவர்கள் | பேசக்கூடியவர்கள் |
காட்டலோனியா (எசுப்பானியா) | 6,949,195 | 6,043,088 |
பாலேயாரிக் தீவுகள் (எசுப்பானியா) | 931,989 | 746,792 |
வாலென்சிய சமுதாயம் (வாலேன்சியன் என) (எசுப்பானியா) | 3,648,443 | 2,547,661 |
அந்தோரா | 75,407 | 61,975 |
வட காட்டலோனியா (பிரான்சு) | 203,121 | 125,622 |
மொத்தம் | 11,808,155 | 9,525,138 |
மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.
மற்ற இடங்கள்
[தொகு]இடம் | புரிந்துகொள்ளக் கூடியவர்கள் | பேசக்கூடியவர்கள் |
அல்கேரோ நகரம் (சார்தீனியா, இத்தாலி) | 20,000 | 17,625 |
ஆரகோனிலுள்ள சில இடங்கள் | 47,250 | 45,000 |
கார்சே (மூர்சியா) | சரியாக தெரியவில்லை | சரியாக தெரியவில்லை |
உலகின் மற்ற இடங்களில் | சரியாக தெரியவில்லை | 350,000 |
மொத்தம் | 67,250 | 412,625 |
மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.
உலகளவில்
[தொகு]இடம் | புரிந்துகொள்ளக் கூடியவர்கள் | பேசக்கூடியவர்கள் |
காட்டலான் பேசப்படும் இடங்கள் (ஐரோப்பா) | 11,875,405 | 9,587,763 |
உலகின் மற்ற இடங்களில் | 362,000 | 350,000 |
மொத்தம் | 12,237,405 | 9,937,763 |
மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.
குறிப்பு: மேற்கண்ட பட்டியல்களில், புரிந்துகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை பேசக்கூடியவர்களின் எண்ணிக்கையையும் தன்னுள்ளடக்கியதே.
வட்டார மொழி வழக்குகள்
[தொகு]- கிழக்கு காட்டலான்
- மேற்கு காட்டலான்
வாலேன்சியன்
[தொகு]மொழியோலியும் எழுதுமுறையும்
[தொகு]மையக் கட்டுரை: காட்டலான் எழுத்து
இலக்கணம்
[தொகு]மையக் கட்டுரை: காட்டலான் இலக்கணம்
காட்டலான் பெயர்கள்
[தொகு]காட்டலான் பெயரிடும் வழக்கங்கள் எசுபானியாவிலுள்ள பெயரிடும் வழக்கங்களைத் தழுவியே வரும். ஒரு நபருக்கு இரண்டு இறுதிப்பெயர்கள் வைக்கப்படுகிறது. அந்நபரின் தந்தையினுடைய பெயர் ஒன்று, தாயினுடைய பெயர் மற்றொன்று. அவ்விரு இறுதிப்பெயர்கலும் "i" (பொருள்: மற்றும்) என்ற எழுத்தால் பிரித்தெழுதப்படுகிறது. (எசுப்பானியத்தில் இதற்கு இணையான எழுத்து "y" ஆகும். ஆனால், அநேகநேரங்களில் இது எழுதப்படுவதில்லை; தவிர்க்கப்படுகிறது.)
- (எ-டு) Antoni Gaudíயின் முழுப்பெயர் Antoni Gaudí i Cornet என அவர் பெற்றோரின் பெயர்களைத் தழுவியே வருகிறது. அவரது தந்தையின் பெயர்: Francesc "Gaudí" i Serra ; அவரது தாயாரின் பெயர்: Antònia "Cornet" i Bertran.
எடுத்துக்காட்டுகள்
[தொகு]காட்டலோனியாவில் பொதுவாக பேசப்படும் சில வார்த்தைகள் (மத்திய வட்டார மொழி வழக்கின்படியான உச்சரிப்பு - பார்செலோனிய (Barcelona) மற்றும் புறநகரம்).
- காட்டலான்: Català [kətəˈla]
- வணக்கம்: hola [ˈɔlə]
- சென்றுவருகிறேன்: adéu [əˈðew]; adéu siau [əˈðew siˈaw]
- தயவு செய்து: si us plau [sisˈplaw]
- நன்றி: gràcies [ˈɡɾasiəs]; mercès [məɾˈsɛs]
- மன்னிக்கவும்: perdó [pəɾˈðo], em sap greu [əmsabˈɡɾew]
- இது: aquest [əˈkɛt] (masc.); aquesta [əˈkɛstə] (fem.)
- எவ்வளவு?: quant val? [ˈkwamˈbal]; quant és? [ˈkwanˈtes]
- ஆம்: sí [ˈsi]
- இல்லை: no [ˈno]
- எனக்கு புரியவில்லை: no ho entenc [ˈnow ənˈteŋ]
- கழிவறை எங்கு உள்ளது?: on és el bany? [ˈoˈnezəlˈβaɲ]; on és el lavabo? [ˈoˈnezəlˈləˈβaβu]
- பொதுவாக மது அருந்தும் பொழுது: salut! [səˈlut];
- நீங்கள் காட்டலான் பேசுவீர்களா?: Parles català? [ˈpaɾləs kətəˈla]
சில உபயோகமான வாலேன்சிய வாக்கியங்கள். (ஸ்டாண்டர்டு வாலேன்சியன் உச்சரிப்பு.)
- வாலேன்சியன்: valencià [valensiˈa]
- வணக்கம்: hola [ˈɔla]
- சென்றுவருகிறேன்: adéu [aˈðew]
- தயவு செய்து: per favor [peɾ faˈvoɾ]
- நன்றி: gràcies [ˈɡɾasies]
- மன்னிக்கவும்: perdó [peɾˈðo]; ; ho sent [uˈsent] or ho lamente [ˈu laˈmente]
- எவ்வளவு?: quant val? [ˈkwanˈval]; quant és? [ˈkwanˈtes]
- ஆம்: sí [si]
- இல்லை: no [no]
- எனக்கு புரியவில்லை: no ho entenc [ˈnowanˈteŋ]
- கழிவறை எங்கு உள்ளது?: on és el bany? [ˈon ezˈ elˈβaɲ]
- பொதுவாக மது அருந்தும் பொழுது: Jesús [dʑeˈzus]; salut [saˈlut]
- நீங்கள் வாலேன்சியன் பேசுவீர்களா?: parles valencià? [ˈpaɾlez valensiˈa]