பு. உ. சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 73: வரிசை 73:


[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
[[பகுப்பு:1916 பிறப்புகள்]]
[[பகுப்பு:1916 பிறப்புகள்]]

15:40, 14 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

பி. யூ. சின்னப்பா

இயற் பெயர் சின்னசாமி
பிறப்பு (1916-05-05)மே 5, 1916
புதுக்கோட்டை சமத்தானம், பிரித்தானிய இந்தியா
இறப்பு செப்டம்பர் 23, 1951(1951-09-23) (அகவை 35)
புதுக்கோட்டை, சென்னை மாகாணம்,  இந்தியா
வேறு பெயர் நடிகர் மன்னர்
துணைவர் ஏ. சகுந்தலா
பிள்ளைகள் ராஜா பகதூர்
பெற்றோர் உலகநாதன் பிள்ளை
மீனாட்சி அம்மாள்

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, (P. U. Chinnappa, மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

1916 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி.[1] புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். இவருக்குப் பின் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார்.[1]

சின்னப்பா புதுக்கோட்டையில் நொண்டி வாத்தியார் பள்ளிக்கூடத்தில் நான்கைந்து ஆண்டுகள் படித்தார். சின்னப்பாவுக்கு இசையில் பெரும் ஆர்வம் இருந்தது. தகப்பனார் மேடையில் பாடும் பாடல்களைக் கேட்டுத் தானும் பாடுவார். கோவில்களில் நடக்கும் கூட்டு வழிபாடுகளில் பாடுவதற்கு இவரை அழைப்பார்கள். இதனால் இவருக்கு படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டு விலகி சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.[1] குடும்ப நிதி நிலை மோசமடையவே, சின்னப்பா நூல் கடை ஒன்றில் பணியில் அமர்ந்தார். சில நாட்களில் அவ்வேலை பிடிக்காமல், நாடக நிறுவனமொன்றில் சேர முயற்சி செய்தார்.

நாடகங்களில் பாடி நடிப்பு

டி. டி. சங்கரதாஸ் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். இக்கம்பெனியில் தான் டி. கே. எஸ். சகோதரர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். சின்னப்பாவிற்கு சிறு சிறு வேடங்களே கொடுக்கப்பட்டன.[1] மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரங்கில் தங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பிரகதாம்பாள் தியேட்டரின் முதலாளி நாராயணன் செட்டியார் சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டிருக்கிறார். அவரின் சிபாரிசில் பாய்சு கம்பனி முதலாளி பழனியப்பா பிள்ளை சின்னப்பாவை 15 ரூபாய் சம்பளத்தில் தனது நாடகக் கம்பனியில் சேர்த்துக் கொண்டார். அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார்.[1] மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் பி. ஜி. வெங்கடேசன், எம். ஜி. இராமச்சந்திரன், எம். கே. ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இசைக்கச்சேரி

தனது 19வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரந்தூக்குவதில் இவருக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. எஸ். ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

திரைப்படங்களில் நடிப்பு

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே.[2] படம் பெரு வெற்றி பெற்றது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார். 1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற பெயரில் ஒரு மகனும் உண்டு.

ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே.. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.

மறைவு

சின்னப்பா 1951 செப்டம்பர் 23 அன்று இரவு தனது 35ஆவது வயதில் புதுக்கோட்டையில் காலமானார்.[3][4] படம் இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

  1. ராஜமோகன் (1937)
  2. சந்திரகாந்தா (1937)
  3. அனாதைப் பெண் (1938)
  4. பஞ்சாப் கேசரி (1938)
  5. யயாதி (1938)
  6. மாத்ரு பூமி (1939)
  7. உத்தம புத்திரன் (1940)
  8. ஆர்யமாலா (1941)
  9. தயாளன் (1941)
  10. தர்மவீரன் (1941)
  11. கண்ணகி (1942)
  12. மனோன்மணி (1942)
  13. பிருத்விராஜன் (1942)
  14. குபேர குசேலா (1943)
  15. ஹரிச்சந்திரா (1944)
  16. ஜகதலப் பிரதாபன் (1944)
  17. மகாமாயா (1944)
  18. அர்த்தனாரி (1946)
  19. துளசி ஜலந்தர் (1947)
  20. பங்கஜவல்லி (1947)
  21. கிருஷ்ண பக்தி (1949)
  22. மங்கையர்க்கரசி (1949)
  23. ரத்னகுமார் (1949)
  24. சுதர்சன் (1951)
  25. வனசுந்தரி (1951)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 கே. ஜகந்நாத் (மார்ச் 1951). "புதுக்கோட்டை உ. சின்னப்பா". பேசும் படம்: பக். 14-33. 
  2. தமிழ்த்திரையின் முழுமையான முதல் ஹீரோ- பி.யூ.சின்னப்பா
  3. "பி. யு. சின்னப்பா". பேசும் படம்: பக். 9-10. அக்டோபர் 1951. 
  4. "நட்சத்திரம் வீழ்ந்தது". குண்டூசி: பக். 124-125. அக்டோபர் 1951. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._உ._சின்னப்பா&oldid=2656475" இலிருந்து மீள்விக்கப்பட்டது