ஆர்யமாலா
| ஆர்யமாலா | |
|---|---|
| இயக்கம் | பொம்மன் இரானி |
| தயாரிப்பு | கே. எசு. நாராயணன் ஐயங்கார் எசு. எம். சிறீராமுலு நாயுடு கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ |
| கதை | டி. சி. வடிவேலு நாயக்கர் |
| இசை | ஜி. ராமநாதன் |
| நடிப்பு | பு. உ. சின்னப்பா எம். எஸ். சரோஜினி |
| ஒளிப்பதிவு | ருசுத்தம் எம். இரானி |
| படத்தொகுப்பு | எஸ். சூரியா |
| கலையகம் | பட்சிராஜா பிலிம்சு |
| விநியோகம் | நாராயணன் & கம்பனி |
| வெளியீடு | 19 அக்டோபர் 1941 |
| ஓட்டம் | 218 நிமி. |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆர்யமாலா (Aryamala) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சந்தானலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] ஆரியமாலா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சின்னப்பாவை ஒரு பெரும் திரைப்பட நாயகனாக்கியது. இதே நாட்டுப்புறப் புராணக்கதை 1958-இல் காத்தவராயன் என்ற தலைப்பில் மீண்டும் தயாரிக்கப்பட்டது.
திரைக்கதை
[தொகு]தொன்ம நாட்டார் கதையைக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டது. தேவலோகத்தின் நந்தவனத்தைக் காக்க சிவபெருமான் காத்தவராயனை உருவாக்குகிறார். அங்கு வரும் சப்தகன்னியரில் இளங்கன்னி என்ற தேவலோகப் பெண்ணைக் காதலிக்கிறான். அவளைக் காதலிக்க முயற்சிக்கும்போது அவள் தன்னை நீரில் மூழ்கடித்துக் கொள்கிறாள். பின்னர் அவள் மீண்டும் ஆர்யமாலா என்ற பெயரில் இளவரசியாகப் பிறக்கிறாள். காத்தவராயனும் பூவுலகில் பிறந்து வேடர்களால் வளர்க்கப்படுகிறான். காத்தவராயன் ஆர்யமாலாவை காதலிக்கிறான். அவன் கிளியாக மாறி அவளுடயை அரண்மனைக்குச் செல்கிறான். அவள் கிளியை விரும்புகிறாள். ஆனால் அது காத்தவராயன் என்று தெரியும்போது ஆரியமாலா அதிர்ச்சியடைகிறாள். அவள் மீண்டும் தன்னை நீரில் மூழ்க முயலுகையில், விட்டுணு அவளைக் காத்தருளி கல்லாக மாற்றுகிறார். காத்தரவராயன் கல்லைத் தொடும்போது ஆரியமாலா மீண்டும் தன் உருவத்தைப் பெறுகிறாள். ஒருகட்டத்தில் காத்தவராயன் அரசனால் சிறையில் அடைக்கப்பட்டடு, கழுவேற்றப்படுகிறான். இருப்பினும், விட்டுணு தலையிட்டு எல்லாவற்றையும் சுமுகமாகத் தீர்த்து வைக்கிறார். காத்தவராயனும் ஆர்யமாலாவும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதே கதை.[1]
பாத்திரங்கள்
[தொகு]பின்வரும் பட்டியல் திரைப்படத் தலைப்பில் இருந்தும், பாட்டுப் புத்தகத்தில் இருந்தும் எடுக்கப்பட்டது.[2]
|
|
பாடல்கள்
[தொகு]சி. இலட்சுமணதாஸ் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் RCA Photophone இல் பதிவு செய்யப்பட்டது. பின்வரும் பட்டியல் ஆர்யமாலா பாட்டுப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[2]
| எண். | பாடல் | பாடகர்(கள்) | இராகம்/தாளம் |
|---|---|---|---|
| 1 | "ஜெயதேவா சேவை ஆவல் ஆனோம்" | குழுவினர்-சப்த கன்னிகைகள் | |
| 2 | "யாவும் சிவன் செயலென்றே" | பிச்சைக்காரப் பையன் | |
| 3 | "மாமலர்ச் சோலை இதே விவ்ய"" | எம். ஆர். சந்தானலட்சுமி | கரகரப்பிரியா/ஆதி |
| 4 | "மானினியே மையல் ஆனேன்" | பு. உ. சின்னப்பா | குந்தவராளி/ஆதி |
| 5 | "ஆதார தேவனே அருள்பரனே" | எம். ஆர். சந்தானலட்சுமி | ஜகன்மோகினி/ஆதி |
| 6 | "தாவள்ய ரூபனே தாலேதாலோ" | எம். ஆர். சந்தானலட்சுமி | |
| 7 | "தெய்வமே ஒன்றுதான் செய்வதும் நன்றுதான்" | வேடர்கள் (நடனம்) | |
| 8 | "சகிமாரே வருவீர்" | எம். எஸ். சரோஜா | |
| 9 | "சிவக்ருபையால் புவிமேல் மாதாவுனை" | பு. உ. சின்னப்பா | |
| 10 | "ஆரவல்லியே நீயும் வீணா அதைர்யப்படலாமோ" | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் | |
| 11 | "பாக்ய சிலாக்கிய பரவசமே ஆனேன்" | எம். எஸ். சரோஜா | மாண்டு/ஆதி |
| 12 | "ஆயிமகமாயி அவ ஆயிரங் கண்ணுடையா" | டி. ஏ. மதுரம் | |
| 13 | "சிறீமதியே உனைநான் கண்டாவல் கொண்டதினால்" | பு. உ. சின்னப்பா | |
| 14 | "என் மனமே புண்படுதென் செய்வேன்" | எம். எஸ். சரோஜா | சாவேரி/ஆதி |
| 15 | "தேஜசையே சொல்வேன் மானே அவன்" | எம். எஸ். சரோஜா | செஞ்சுருட்டி/ஆதி |
| 16 | "அழகே உருவான பொண்ணு உம்மேலே" | என். எஸ். கிருஷ்ணன், பு. உ. சின்னப்பா | |
| 17 | "ஒரு ஏகாலியைப் போலே" | பு. உ. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் | |
| 18 | "காட்டுக்குள்லே கண்ணி போட்டு" | என். எஸ். கிருஷ்ணன் | |
| 19 | "எந்தன் சிந்தைக்கின்பமே தரும்" | எம். எஸ். சரோஜா, பு. உ. சின்னப்பா | புன்னகவராளி, சாமா, தேசிகதோடி/ஆதி |
| 20 | "வளையல் நல்ல வளையல் மலிவாகவே தருவேன்" | பு. உ. சின்னப்பா | |
| 21 | "மாதவனே கண்ணா மாயா தூயா" | எம். எஸ். சரோஜா | செஞ்சுருட்டி/ஏகம் |
| 22 | "மாதவ மக தேவா" | எம். ஆர். சந்தானலட்சுமி | விஜயநாகிரி/ஆதி |
வெளியீடு
[தொகு]ஆரியமாலா 1941 அக்டோபர் 19 அன்று சென்னை நாராயணன் & கம்பனியினால் வெளியிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 ராண்டார் கை (22 சூலை 2010). "Aryamala (1941)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/aryamala-1941/article528363.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016.
- ↑ 2.0 2.1 Ariyamala (song book). Pakshiraja Films. 1941.
- ↑ "Aryamala". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 19 October 1941. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19411019&printsec=frontpage&hl=en.