உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எஸ். ஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. எஸ். ஞானம் (P. S. Gnanam, இறப்பு: மே 1962, அகவை 41) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.[1] குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவர். இல்லறமே நல்லறம், சபாஷ் மீனா, யார் பையன், வள்ளியின் செல்வன், பாசமலர் உட்பட ஐம்பதிற்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.

பொள்ளாச்சி எஸ். ஞானம் என்ற இயற்பெயரைக் கொண்ட பி. எஸ். ஞானம்[2] 1937 ஆம் ஆண்டில் வெளிவந்த மைனர் ராஜாமணி என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்துப் பாராட்டுப் பெற்றார். பாசமலர் திரைப்படத்தில் கதாநாயகி சாவித்திரியை கொடுமைப்படுத்தும் வில்லி வேடத்தில் நடித்தார்.[2]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

மறைவு

[தொகு]

பி. எஸ். ஞானம் வாகனம் ஒன்றில் செல்லும் போது திருத்தங்கல் என்னும் ஊரில் விபத்துக்குள்ளானதில் தலை நசுங்கி மரணமானார். இறக்கும் போது அவருக்கு வயது 41.[1][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "கார் விபத்தில் சிக்கி நடிகை மரணம்". புதினம். மே 20 1962. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1962.05.20. 
  2. 2.0 2.1 "P.S.Gnanam". Antru Kanda Mugam. பார்க்கப்பட்ட நாள் 23 நவம்பர் 2016.
  3. Sachi Sri Kantha (7-05-2015). "MGR Remembered – Part 27". Ilankai Tamil Sangam. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._ஞானம்&oldid=4083816" இலிருந்து மீள்விக்கப்பட்டது