திவான் பகதூர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவான் பகதூர்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைஎம். ஹரிதாஸ்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
வி. எம். ஏழுமலை
காளி என். ரத்தினம்
கே. கே. பெருமாள்
ஜே. சுசீலா
பி. எஸ். சிவபாக்கியம்
சி. டி. ராஜகாந்தம்
பி. எஸ். ஞானம்
வெளியீடுஅக்டோபர் 28, 1943
நீளம்19940 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திவான் பகதூர் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3] "என் உள்ளமதை கொள்ளை கொண்ட..." என்ற நகைச்சுவைப் பாடல் பிரபலம்.

திரைக்கதை[தொகு]

பிரித்தானிய இந்தியாவில் குடியேற்ற அரசாங்கத்தால் திவான் பகதூர் என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்ட ரங்கநாத முதலியார் (கே. கே. பெருமாள்) என்ற ஒரு படிப்பறிவற்ற பணக்காரரைப் பற்றிய கதை. இப்படிப்பட்டவர்களை விமர்சிப்பவர் டி. ஆர். ராமச்சந்திரன். அப்படிப்பட்டவர்கள் கௌரவிக்கப்படுவதை எதிர்த்து அவர் ஆங்கிலத்தில் கூட்டங்களில் உரையாற்றுகிறார்.[3]

நடிகர்கள்[தொகு]

இப்பட்டியல் திவான் பகதூர் பாட்டுப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[4]

நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
டி. ஆர். ராமச்சந்திரன் கேசவன்
கே. கே. பெருமாள் திவான்பகதூர் ரங்கநாத முதலியார்
காளி என். ரத்தினம் ராமாபுரம் ஜமீன்தார்
எம். ஈ. மாதவன் நமசிவாய முதலியார்
ஈ. ஆர். சகாதேவன் சிங்கார கிராமணி
பபூன் சண்முகம் மாமா
அசுவத்தாமன் ஓட்டல் பையன்
வி. எம். ஏழுமலை கோபாலன்
வி. குமார் மலையாளி
நடிகைகள்
ஜே. சுசீலா கமலா
பி. எஸ். சிவபாக்கியம் ராஜம்மா
சி. டி. ராஜகாந்தம் தாசி
பி. எஸ். ஞானம் தாசி
பி. ஆர். மங்களம் குடித்தனக்காரி
டி. என். ராஜலட்சுமி நடனமாது

தயாரிப்பு[தொகு]

படத்தை மாடர்ன் தியேட்டர்சு டி. ஆர். சுந்தரம் இயக்கித் தயாரித்திருந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் எம்.ஹரிதாஸ். டபிள்யூ. ஆர். சுப்பாராவ் ஒளிப்பதிவு செய்ய, டி. துரைராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஒலிப்பதிவு செய்தவர் ஆர். ஜி. பிள்ளை. அமைப்புகளையும் வடிவமைப்பையும் ஏ. ஜே. டொமினிக், பி. பி. கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். படத்தின் தலைப்புகளில் எந்த ஒரு இசையமைப்பாளரும் குறிப்பிடப்படவில்லை. டி. ஆர். ராமச்சந்திரன் ஆங்கில மொழியைக் கற்றதில்லை. ஆனால் அவரது பேச்சு, உச்சரிப்பு மற்றும் உச்சரிப்பு சரியாக இருந்தது. இங்கிலாந்தில் படித்த டி. ஆர். சுந்தரம், டி.ஆர்.ராமச்சந்திரனின் ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு வியந்தார். அவர் நடிகரின் நடிப்பைப் பாராட்டி, வெகுமதியும் வழங்கினார்.[3]

பாடல்கள்[தொகு]

டி. ஏ. கல்யாணம் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கே. வி. மகாதேவன் இசையமைப்பில் உதவியாளராகப் பணியாற்றினார். பாடல்களை எழுதியவர்: வேல்சாமிக் கவி. இப்பட்டியல் திவான் பகதூர் பாட்டுப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[4]

திவான் பகதூர் திரைப்படப் பாடல்கள்
எண் பாடல் பாடியோர் இராகம்-தாளம் குறிப்பு
1. மனம்போல் ஜெக வாழ்வு எஸ். டி. சுப்பையா செஞ்சுருட்டி வானொலிப் பாடல்
2. ஆண்களே ஆண்களே அரிதா? ஜே. சுசீலா ஹானுமே என்ற மெட்டு
3. மானிட தர்மத்தை மறந்திடும் பி. எஸ். சிவபாக்கியம் மாயாமாளவகௌளை
4. மையல் மிகவும் மிஞ்சுதே டி. என். ராஜலட்சுமி தோடி நாட்டியப் பதம்
5. எந்தன் உயிர்க் காதலா ஜே. சுசீலா, டி. ஆர். ராமச்சந்திரன் -
6. என் உள்ளமதே நீ கொள்ளை கொண்டாயே ஜே. சுசீலா, டி. ஆர். ராமச்சந்திரன் -
7. புத்தியிது மகளே பி. எஸ். சிவபாக்கியம் செஞ்சுருட்டி
8. காதலை இழந்த பாவி போல நான் ஜே. சுசீலா -
9. பாக்யமே பாக்யமே ஜே. சுசீலா -
10. ஆகா என் ஜானகியை ஐயோ ஜானகியை அசுவத்தாமன் சோகம் ஓட்டல் பையன் பாடல்
11. என்னைக் கண்டதும் சொரி நாயும் குலைப்பதென்ன அசுவத்தாமன் சிங்காரம்
12. ஜென்ம பூமிக்கே நன்மை தேடுவோம் மாதர்கள் - குழுப்பாடல்
13. தெரியுமா என்னைத் தெரியுமா காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம்
14. சுகமிது போலே யினியேது ஜோர் தருதே குழுவினர் - கள்ளுக்கடைப் பாடல்
15. வருவீர் வருவீர் எனதாசைக் கனியே ஜே. சுசீலா, டி. ஆர். ராமச்சந்திரன் -
16. எல்லாம் அவன் செயல் குழுவினர் -

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 590. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 
  2. "Diwan Bahadur 1943". cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  3. 3.0 3.1 3.2 கை, ராண்டார் (18 சூன் 2015). "Played many parts". தி இந்து. Archived from the original on 15 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  4. 4.0 4.1 "திவான் பகதூர்" பாட்டுப்புத்தகம், 1943