உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றாலை உத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சதுரங்க விளையாட்டில் காற்றாலை உத்தி (Windmill) என்பது திட்டமிட்டு தாக்குதல் நிகழ்த்தும் ஒருவகையான சதுரங்க உத்தி வகையாகும். இவ்வுத்தியில் முற்றுகையும் வெளிப்படும் முற்றுகையும் இணைந்து ஒன்றன் பின் ஒன்றாக ஓயாமல் முற்றுகையிட்டு எதிரியின் மீது தாக்குதல் நிகழ்த்தும். பொதுவாக ஒரு யானையும் ஒரு அமைச்சரும் இணைப்பு நகர்வுகள் மூலமாக எதிரியின் கோட்டைக்குள் நுழைந்து மிகப் பெரிய வெற்றிகளை அளிக்கின்றன. சில நேரங்களில் இந்த உத்தி சாய்ந்தாடி உத்தி என்றும் அழைக்கப்படுகிறது[1]


.

உதாரணம்

[தொகு]
டார்ரே ரெபெட்டோ எதிர் லாசுக்கர், மாசுக்கோ 1925
abcdefgh
8
a8 black rook
e8 black rook
f8 black knight
g8 black king
a7 black pawn
b7 black bishop
f7 black pawn
g7 black pawn
d6 black pawn
e6 black pawn
h6 black pawn
b5 black queen
g5 white bishop
h5 white queen
b4 white pawn
d4 white pawn
e3 white knight
g3 white rook
a2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
e1 white rook
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
வெள்ளை 25.Bf6!, விளையாடுகிறார். இராணியைத் தியாகம் செய்து காற்றலை உத்திக்கு திட்டமிடுகிறார்.முடிவில் வெற்றி கிட்டுகிறது.

வலது பக்கமுள்ள படத்தில் உள்ள போட்டியில்[2] கார்லோசு டார்ரே ரெபெட்டோ காற்றாலை உத்தியை இமானுவேல் லாசுக்கருக்கு எதிரான ஆட்டத்தில் பயன்படுத்தி இரண்டு சிப்பாய்களையும் ஒரு அமைச்சரையும் கைப்பற்றி வெற்றியை நோக்கிச் செல்கிறார். வெள்ளைக் காய்களுடன் ஆடுபவர் 25. Bf6! என்று நகர்த்தி வெள்ளை இராணியை பாதுகாப்பு ஏதுமில்லாமல் தனியாக விட்டு காற்றாலை உத்திக்கு திட்டமிடுகிறார். வெள்ளை தன் இராணியை தியாகம் செய்வதை கருப்பு கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியும் இல்லை. வெள்ளையின் காற்றாலை உத்தியைத் தடுக்க ஏதாவது முயற்சி மேற்கொள்ள நினைத்தால் கருப்பு தன் இராணியை இழக்க நேரிடும். எனவே 25. ... Qxh5 26. Rxg7+ Kh8 27. Rxf7+ என்று ஆட்டம் தொடர்கிறது. 27 ஆவது நகர்த்தலில் வெள்ளை அமைச்சரால் வெளிப்படும் முற்றுகையும் யானையால் நேரடி முற்றுகையும் மாறிமாறி தாக்குதல் தொடர்கிறது. 27. ...Kg8 28. Rg7+ Kh8 29. Rxb7+ Kg8 30. Rg7+ Kh8 31. Rg5+ Kh7 32. Rxh5. கருப்பின் காய்கள் அனைத்தும் கருப்பு இராணி உட்பட ஒன்றன் பின் ஒன்றாக வெள்ளையால் கைப்பற்றப்படுகின்றன. ஆட்டத்தின் முடிவு வெள்ளைக்கு சாதகமாக முடிகிறது.

நூற்றாண்டின் சிறந்த ஆட்டமாக கருதப்படும் பாபி பிசர் ஆட்டமும் ஒரு சிறந்த உதாரணமாகும். 18 முதல் 23 நகர்வுகள் வரை காற்றாலை உத்தி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் ஒரு அமைச்சரும் ஒரு குதிரையும் காற்றாலைத் தாக்குதலில் ஈடுபடுகின்றன.


காற்றாலை உத்தியைச் சித்தரிக்கும் விளக்கமான அமைப்புநிலை கீழே சித்தரிக்கப்பட்டுள்ளது.

மாட்சுகெவிச்சு
abcdefgh
8
f8 black knight
h8 black king
b7 black bishop
c7 black knight
d7 black bishop
e7 black knight
f7 black bishop
g7 white rook
g6 black bishop
h6 black knight
g5 black knight
g4 black bishop
c3 white bishop
g3 black knight
b2 white king
g2 black bishop
a1 black rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
மாதிரி அமைப்பு,வெள்ளை நகர்த்த வேண்டும். (உத்தியின் வலிமையை விளக்கவே கருப்புக்கு கூடுதலாக குதிரை மற்றும் அமைச்சர் காய்கள் உள்ளன)

ஆட்டம் இவ்வாறு தொடர்கிறது.: 1. Rxg6+ Kh7 2. Rg7+ Kh8 3. Rxg5+ Kh7 4. Rg7+ Kh8 5. Rxf7+ Kg8 6. Rg7+ Kh8 7. Rxe7+ Kg8 8. Rg7+ Kh8 9. Rxg4+ Kh7 10. Rg7+ Kh8 11. Rxg3+ Kh7 12. Rg7+ Kh8 13. Rxd7+ Kg8 14. Rg7+ Kh8 15. Rxc7+ Kg8 16. Rg7+ Kh8 17. Rxb7+ Kg8 18. Rg7+ Kh8 19. Rxg2+ Kh7 20. Rg7+ Kh8 21. Kxa1 கருப்பு தோல்வியடைகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. David Hooper and Kenneth Whyld, The Oxford Companion to Chess (2nd ed. 1992), Oxford University Press, p. 363. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866164-9.
  2. Chessgames.com

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றாலை_உத்தி&oldid=2696596" இலிருந்து மீள்விக்கப்பட்டது