உள்ளடக்கத்துக்குச் செல்

காலாள் (சதுரங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலாள் (ஆங்கிலம்: pawn) அல்லது சிப்பாய் என்பது சதுரங்கத்தில் உள்ள ஒரு காய் ஆகும்.[1] சிப்பாய்கள் அதிகமாக இருந்தாலும் (பெரும்பாலும்) அவை பலவீனமானவை ஆகும்.[2] சிப்பாய்கள் வரலாற்று ரீதியாக, காலாட் படையைக் குறிக்கின்றன.[3] சதுரங்கத்தில் இரு போட்டியாளர்களிடமும் தலா எட்டுச் சிப்பாய்கள் வீதம் மொத்தம் 16 சிப்பாய்கள் காணப்படும்.[4] போட்டியின் ஆரம்பத்தில் வெள்ளைச் சிப்பாய்கள் a2, b2, c2, d2, e2, f2, g2, h2 ஆகிய பெட்டிகளிலும் கறுப்புச் சிப்பாய்கள் a7, b7, c7, d7, e7, f7, g7, h7 ஆகிய பெட்டிகளிலும் வைக்கப்படும்.[5]

தனிச் சிப்பாய்கள் அவை உள்ள நிரலின் மூலம் அடையாளப்படுத்தப்படும். உதாரணமாக வெள்ளையின் f-சிப்பாய் என்பதைக் கூறலாம்.[6] இது வெள்ளை ராஜாவின் மந்திரிச் சிப்பாய் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால், இவ்வாறு பயன்படுத்தப்படுவது குறைவு. கோட்டைச் சிப்பாய் (a அல்லது h நிரல்), குதிரைச் சிப்பாய் (b அல்லது g நிரல்), மந்திரிச் சிப்பாய் (c அல்லது f நிரல்), ராணிச் சிப்பாய் (d நிரல்), ராஜாச் சிப்பாய் (e நிரல்), நடுச் சிப்பாய் (d அல்லது e நிரல்) என்றும் சிப்பாய்களை அழைப்பதுண்டு.

நகர்வு

[தொகு]
abcdefgh
8
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
8
77
66
55
44
33
22
11
abcdefgh
சிப்பாய்களின் ஆரம்ப நிலை
abcdefgh
8
g7 black pawn
a6 black pawn
g6 black circle
a5 black circle
c5 white circle
g5 black circle
c4 white pawn
e4 white circle
e3 white circle
e2 white pawn
8
77
66
55
44
33
22
11
abcdefgh
சிப்பாயின் நகர்வு இங்கே விளக்கப்பட்டுள்ளது. சிப்பாயால் அதற்கு முன்னுள்ள பெட்டிக்கு நகர முடியும். ஆனால், தொடக்கப் புள்ளியில் உள்ள சிப்பாயால் அதற்கு முன் இரண்டு பெட்டிகள் நகர முடியும்.

சிப்பாய்கள் ஏனைய காய்களை விட நகர்வில் வித்தியாசமானவை. ஏனைய காய்களைப் போல், சிப்பாய்களால் பின்புறமாக நகர முடியாது. சாதாரணமாக, ஒரு சிப்பாயால் அதற்கு முன்னே ஒரு பெட்டி நகர முடியும். ஆனாலும் ஒரு சிப்பாயின் முதல் நகர்வில் அதனால் இரண்டு பெட்டிகள் முன்னே செல்ல முடியும். ஆனால், சிப்பாய்க்கு முன்னுள்ள இரண்டு பெட்டிகளில் ஏதேனும் ஒன்றிலாவது ஏதேனுமொரு காய் இருப்பின் சிப்பாயை இரண்டு பெட்டிகள் முன்னே நகர்த்த முடியாது. மேலுள்ள படத்தில் c4இலுள்ள சிப்பாய் c5இற்குச் செல்ல முடியும். ஆனாலும் e2இலுள்ள சிப்பாய் e3இற்கோ e4இற்கோ செல்ல முடியும்.[7]

கைப்பற்றுதல்

[தொகு]
abcdefgh
8
c6 black rook
d6 black bishop
e6 black knight
d5 white pawn
8
77
66
55
44
33
22
11
abcdefgh
d5இலுள்ள வெள்ளைச் சிப்பாய் c6இலுள்ள கறுப்புக் கோட்டையையோ e6இலுள்ள கறுப்புக் குதிரையையோ கைப்பற்ற முடியும். ஆனால், d6இலுள்ள மந்திரியைக் கைப்பற்ற முடியாது. அது சிப்பாயின் பாதையைத் தடுக்கின்றது.

மற்றைய காய்களைப் போல் இல்லாமல், சிப்பாயால் அது நகரும் பாதையிலேயே கைப்பற்ற முடியாது. ஒரு சிப்பாயால் குறுக்காகவே கைப்பற்ற முடியும். அதாவது, முன்னே உள்ள பெட்டிக்கு இடது, வலது பக்கங்களில் உள்ள பெட்டிகளில் உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றினையே கைப்பற்ற முடியும். இடப் பக்கம் உள்ள படத்தில் சிப்பாய் கறுப்புக் கோட்டையையோ கறுப்புக் குதிரையையோ கைப்பற்ற முடியும்.[8]

abcdefgh
8
c7 black cross
c6 white circle
c5 black pawn
d5 white pawn
8
77
66
55
44
33
22
11
abcdefgh
வழிமடக்குதல் இங்கே காட்டப்பட்டுள்ளது. கறுப்புச் சிப்பாய் இப்போது தான் c7இலிருந்து c5இற்கு நகர்ந்துள்ளது. வெள்ளைச் சிப்பாய் c6 பெட்டிக்கு நகருமாயிருப்பின், கறுப்புச் சிப்பாய் கைப்பற்றப்படும்.

சிப்பாய் வழிமடக்குதல் மூலமும் போட்டியாளரின் சிப்பாயைக் கைப்பற்ற முடியும். இந்த முறையின்படி கைப்பற்றுவதற்குப் போட்டியாளரின் சிப்பாய் ஒரே நகர்வில் இரண்டு பெட்டிகள் நகர்ந்திருக்க வேண்டும். அந்தச் சிப்பாய்க்கு முன்னேயுள்ள பெட்டி மற்றைய போட்டியாளரின் சிப்பாயின் தாக்குதலுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்போது அடுத்த நகர்விலே மற்றைய போட்டியாளரால் அச்சிப்பாயைக் கைப்பற்ற முடியும். அடுத்த நகர்வில் வழிமடக்குதலைச் செய்யத் தவறினால், பிறகு அதனைச் செய்ய முடியாது.[9]

அதிகார உயர்வு

[தொகு]

சதுரங்கப் பலகையின் எதிர்ப் பக்கத்தின் இறுதி வரிசை (மற்றைய போட்டியாளரின் முதல் வரிசை) வரை செல்லும் சிப்பாய்க்குப் போட்டியாளரின் விருப்பத்துக்கேற்ப அதே நிறத்தில் ராணி, கோட்டை, மந்திரி, குதிரை என்பவற்றுள் ஏதேனுமொன்றாக அதிகார உயர்வு வழங்கப்படும். மற்றைய போட்டியாளரின் அடுத்த நகர்வுக்கு முன்னதாகவே சிப்பாய் இருந்த இடத்தில் புதிய காய் வைக்கப்பட்டு விடும்.[10]

அதிகார உயர்வுக்குக் காய்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த வரையறையும் இல்லை. ஒரு போட்டியாளர் எட்டுச் சிப்பாய்களுக்கும் அதிகார உயர்வை வழங்குவதன் மூலம் பத்துக் குதிரைகளையோ, பத்துக் கோட்டைகளையோ, பத்து மந்திரிகளையோ, ஒன்பது ராணிகளையோ கொண்டிருக்க முடியும். ஆனால், இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.[11] ஆனாலும் 1927இல் ஜொசே ராவுல் காப்பபிளான்காவுக்கும் அலெக்சாண்டர் அலெஹினுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 65ஆவது நகர்விலிருந்து 66ஆவது நகர்வு வரை அவர்கள் இருவருமே தலா இரண்டு ராணிகளை வைத்திருந்தனர்.[12] சில சதுரங்கப் பலகைகள் இன்னுமொரு ராணியை மேலதிகமாகக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான சதுரங்கப் பலகைகள் அவ்வாறு கொண்டிருப்பதில்லை. ஆகவே, சதுரங்கப் பலகையில் இன்னுமொரு ராணியை அதிகார உயர்வின் மூலம் பெற நேரிட்டால் அதற்குப் பதிலாகக் கோட்டையைத் தலைகீழாக வைப்பதுமுண்டு. இந்தப் பிரச்சினை கணினியில் விளையாடும் சதுரங்கத்தில் ஏற்படாது.

வகைகள்

[தொகு]

தனிப்படுத்தப்பட்ட சிப்பாய்

[தொகு]
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
h8 black rook
a7 black pawn
b7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
c5 black bishop
d5 black pawn
e3 white pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கறுப்பு d5இல் ஒரு தனிப்படுத்தப்பட்ட சிப்பாயைக் கொண்டிருக்கின்றது.

அருகே உள்ள நிரல்களிலுள்ள சிப்பாய்கள் ஒன்றுக்கொன்று தாக்குகையிலும் பாதுகாப்பிலும் ஆதரவு வழங்க முடியும். ஆனால், அருகே உள்ள எந்தவொரு நிரலிலும் தோழமையான சிப்பாய்கள் இல்லாத சிப்பாய் தனிப்படுத்தப்பட்ட சிப்பாய் என அழைக்கப்படும்.

வலது புறத்திலுள்ள படத்தில், கறுப்பு d5இல் ஒரு தனிப்படுத்தப்பட்ட சிப்பாயைக் கொண்டுள்ளது. ராஜாக்களையும் சிப்பாய்களையும் தவிர ஏனைய காய்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டால், ஆட்டத்தின் இறுதியில் தனிப்படுத்தப்பட்ட சிப்பாயைக் கொண்டிருத்தல் கறுப்புக்குப் பாதகமாக அமையும்.[13]

கடந்த சிப்பாய்

[தொகு]
abcdefgh
8
a6 black pawn
e6 black king
b5 black pawn
c5 white pawn
h5 black pawn
b4 white pawn
a3 white pawn
e3 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
வெள்ளையும் கறுப்பும் தலா ஒரு கடந்த சிப்பாயைக் கொண்டிருக்கின்றன.

அதிகார உயர்வுக்கான பாதையில் எந்த எதிரிச் சிப்பாயாலும் தடுக்கவோ கைப்பற்றவோ முடியாத நிலையில் உள்ள சிப்பாய் கடந்த சிப்பாய் எனப்படும்.[14] வலப் பக்கத்திலுள்ள படத்தில் வெள்ளை c5இல் பாதுகாக்கப்பட்ட கடந்த சிப்பாய் ஒன்றைக் கொண்டுள்ளது. ஆனால், கறுப்போ h5 தனிப்படுத்தப்பட்ட கடந்த சிப்பாயைக் கொண்டுள்ளது.

இந்தப் படத்தில் காய்களின் நிலைமை ஏறத்தாழச் சமனாக உள்ளன. இரண்டு போட்டியாளர்களும் தலா ஒரு ராஜாவையும் மூன்று சிப்பாய்களையும் கொண்டுள்ளனர். ராஜாக்களின் நிலையும் சமனாக உள்ளது. ஆனாலும் பாதுகாக்கப்பட்ட கடந்த சிப்பாயின் பலத்துடன் வெள்ளையால் போட்டியில் வெல்ல முடியும். கறுப்பு ராஜாவால் தனிமைப்படுத்தப்பட்ட h-சிப்பாயைக் காக்கவும் வெள்ளையின் c-சிப்பாய் அதிகார உயர்வு பெறுவதைத் தவிர்க்கவும் முடியாது. அவற்றுள் ஏதேனும் ஒன்றை மாத்திரமே செய்ய முடியும். ஆகவே, வெள்ளை h-சிப்பாயைக் கைப்பற்றி வெல்ல முடியும்.

இரட்டடுக்குச் சிப்பாய்

[தொகு]
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black pawn
e5 white pawn
f5 black knight
c3 white knight
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
c1 white bishop
f1 white rook
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
கறுப்பு இரட்டடுக்கு c-சிப்பாய்களைக் கொண்டுள்ளது.

சிப்பாய் மூலம் கைப்பற்றுதலை மேற்கொண்ட பின்னர், ஒரு போட்டியாளர் ஒரே நிரலில் இரண்டு சிப்பாய்களைக் கொண்டிருக்க முடியும். அவ்விரு சிப்பாய்களும் இரட்டடுக்குச் சிப்பாய்கள் எனப்படும். ஓர் இரட்டடுக்குச் சிப்பாய் மற்றைய இரட்டடுக்குச் சிப்பாயைப் பாதுகாத்துக் கொள்ளாது. அத்தோடு, இரண்டு இரட்டடுக்குச் சிப்பாய்களையும் அருகே உள்ள நிரலில் உள்ள சிப்பாயால் பாதுகாக்க முடியாது. மேலும் முன்னே உள்ள இரட்டடுக்குச் சிப்பாய் பின்னே உள்ள இரட்டடுக்குச் சிப்பாயின் முன்னேற்றத்தைத் தடுக்கும். ஆகவே, இரட்டடுக்குச் சிப்பாய்கள் பலவீனமானவை.[15] மிகவும் அரிதாக ஒரே நிரலில் மூன்று சிப்பாய்களும் காணப்படும். அவை மூவடுக்குச் சிப்பாய்கள் எனப்படும்.[16]

தவறான கோட்டைச் சிப்பாய்

[தொகு]
abcdefgh
8
a8 black king
e7 white bishop
a6 white pawn
b6 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
தவறான கோட்டைச் சிப்பாய்

சதுரங்க விளையாட்டின் இறுதிக் கட்டத்தில் ராஜாவுடன் கோட்டைச் சிப்பாயையும் மந்திரியையும் மாத்திரம் கொண்டிருக்க முடியும். கோட்டைச் சிப்பாய் அதிகார உயர்வுக்காகச் செல்ல வேண்டிய பெட்டியை மந்திரியால் தாக்குகைக்கு உட்படுத்த முடியாமல் போனால், போட்டி சமநிலையில் முடிவதற்கான வாய்ப்பும் உண்டு. அவ்வாறான சிப்பாய் தவறான கோட்டைச் சிப்பாய் எனப்படும்.[17]

மேற்கோள்

[தொகு]
  • சதுரங்கத்தின் ஆத்மா சிப்பாயாகும்.-ஃபிராங்கொயிஸ்-டானிகன் பில்லிடார்[18]

ஒருங்குறி

[தொகு]

ஒருங்குறியில் சிப்பாய்க்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.

  • U+2659-வெள்ளைச் சிப்பாய்
  • U+265F-கறுப்புச் சிப்பாய்

மேற்கோள்கள்

[தொகு]
  1. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] பொதுவான சதுரங்கக் காய்களின் ஒரு பட்டியல் (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ["பலகையும் காய்களும் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-01. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02. பலகையும் காய்களும் (ஆங்கில மொழியில்)]
  3. சதுரங்கத்துக்கான மென்சா வழிகாட்டி (ஆங்கில மொழியில்)
  4. சிப்பாய் சதுரங்கக் காய் (ஆங்கில மொழியில்)
  5. "சிப்பாய்களை வைத்தல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-29. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02.
  6. f-சிப்பாய், பகுதி 4: அது தவறாகச் செல்லும்போது என்ன செய்ய வேண்டும் (ஆங்கில மொழியில்)?
  7. ["சிப்பாய் நகர்வு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02. சிப்பாய் நகர்வு (ஆங்கில மொழியில்)]
  8. ["சிப்பாய் எப்படி நகரும் மற்றும் கைப்பற்றும் (ஆங்கில மொழியில்)?". Archived from the original on 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02. சிப்பாய் எப்படி நகரும் மற்றும் கைப்பற்றும் (ஆங்கில மொழியில்)?]
  9. சதுரங்கத்தின் விதிகள்: வழிமடக்கிக் கைப்பற்றுதல் அகேகே (ஆங்கில மொழியில்)
  10. அதிகார உயர்வு சதுரங்க நகர்வு (ஆங்கில மொழியில்)
  11. செய்நிரலாக்கல் புதிர்கள், சதுரங்க நிலைகள் மற்றும் ஹஃப்மன் குறிமுறை (ஆங்கில மொழியில்)
  12. ஜொசே ராவுல் காப்பபிளான்கா எதிர் அலெக்சாண்டர் அலெஹின் (ஆங்கில மொழியில்)
  13. தனிப்படுத்தப்பட்ட சிப்பாய் (ஆங்கில மொழியில்)
  14. ஒரு கடந்த சிப்பாயை உருவாக்குதல் (ஆங்கில மொழியில்)
  15. ["இரட்டடுக்குச் சிப்பாய்கள் பலமும் பலவீனமும் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02. இரட்டடுக்குச் சிப்பாய்கள் பலமும் பலவீனமும் (ஆங்கில மொழியில்)]
  16. ["மூவடுக்குச் சிப்பாய்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02. மூவடுக்குச் சிப்பாய்கள் (ஆங்கில மொழியில்)]
  17. ["மந்திரியும் தவறான கோட்டைச் சிப்பாயும் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-01. பார்க்கப்பட்ட நாள் 2012-03-02. மந்திரியும் தவறான கோட்டைச் சிப்பாயும் (ஆங்கில மொழியில்)]
  18. சதுரங்கத்தின் ஆத்மாவை ஆழமாகப் பார்க்கவும் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலாள்_(சதுரங்கம்)&oldid=3731417" இலிருந்து மீள்விக்கப்பட்டது