இராசாவின் பலியாட்டம் (King's Gambit) என்பது 1. e4 e5 2. f4 ஆகிய நகர்த்தல்களுடன் ஆரம்பிக்கும் சதுரங்கத்திறப்பாகும். வெள்ளை கருப்பின் சிப்பாயைப் பலியைப் பெற்றுக்கொள்ளச் செய்வதுடன், கருப்பின் இராசாப் பக்கத்தையும் வலுவற்றதாக்க இந்தப் பலியாட்டத்தை ஆடுகிறது. வெள்ளையானது கறுப்பின் மத்தி ஆதிக்கத்தை வலுவற்றதாக்கி f நிரலின் (file) வழியே தாக்குதலுக்கான பாதையை உருவாக்கி f7 ஐத்தாக்கி வெற்றிக்கு வழிவகுக்கும் முறையாகும். [1]
இராசாவின் பலியாட்டமானது ஆவணப்படுத்தப்பட்ட தொன்மையான திறப்பாட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டுள்ளது. இது பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலிய சதுரங்க ஆட்டக்காரரான கியூலியோ பொலேறியோ என்பவரால் ஆராயப்பட்டது.[2]