அரசி (சதுரங்கம்)

அரசி (Queen) என்பது சதுரங்கத்தில் மிக வலிமையான காய் ஆகும்.[1] அரசி, கிடையாகவே செங்குத்தாகவோ குறுக்காகவோ எத்தனை கட்டங்கள் வேண்டுமானாலும் (தடையில்லாவிட்டால்) நகரக்கூடியது.[2] ஒவ்வொரு போட்டியாளரும் போட்டியின் ஆரம்பத்தில் ஓர் அரசி வீதம் கொண்டிருப்பர்.[3] சரியான முறையில் வைக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் வெள்ளையரசி வெள்ளைக் கட்டத்திலும் கறுப்பரசி கறுப்புக் கட்டத்திலும் அமைந்திருக்கும்.[4]
நகர்வு[தொகு]
சதுரங்கக் காய்கள் | ||
---|---|---|
![]() |
அரசன் | ![]() |
![]() |
அரசி | ![]() |
![]() |
கோட்டை | ![]() |
![]() |
அமைச்சர் | ![]() |
![]() |
குதிரை | ![]() |
![]() |
காலாள் | ![]() |
அரசி, கிடையாகவோ செங்குத்தாகவோ குறுக்காகவோ சதுரங்கப் பலகையின் எல்லைக்குள் எவ்வளவு கைப்பற்றப்படாத கட்டங்கள் வேண்டுமானாலும் நகரலாம்.[5] கோட்டையினதும் அமைச்சரினதும் இணைப்பாக அரசியைக் கூற முடியும். எதிரியின் காயுள்ள இடத்துக்குச் செல்வதன் மூலம் அக்காயை அரசி கைப்பற்றிக் கொள்ளும்.
ஒரு போட்டியாளர் ஓர் அரசியை மட்டுங்கொண்டு போட்டியை ஆரம்பித்தாலுங்கூட, காலாளை நிலை உயர்வுக்கு ஆளாக்குவதன் மூலம் அரசி உள்ளடங்கலாக ஏனைய காய்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.[6]
பெறுமானம்[தொகு]
பொதுவாக அரசியானது ஒரு கோட்டையையும் ஒரு அமைச்சரையும் விடச் சிறிதளவு வலிமை கூடியதாக இருந்தாலும் இரண்டு கோட்டைகளை விடச் சிறிதளவு வலிமை குன்றியது. எதிரியின் அரசி தவிர்ந்த எந்தவொரு காய்க்கும் பதிலாக அரசியை மாற்றீடு செய்வது பேரிடரை விளைவிக்கலாம்.
பொதுவாக அரசியானது ஒன்பது புள்ளிகளை உடையது.[7] ஆன்சு பெர்லினர் என்பவர் அரசியின் பெறுமானமாக 8.8 புள்ளிகளைக் கொடுத்துள்ளார்.[8]
ஒருங்குறி[தொகு]
ஒருங்குறியில் அரசிக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.
♕ U+2655-வெள்ளையரசி[9]
♛ U+265B-கறுப்பரசி[10]
இதையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சதுரங்க அரசிகளின் ஆற்றல் மிக்க நகர்வுகளைக் கற்றல் (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ["அரசியின் நகர்வு (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120619025346/http://www.learnchessrules.com/queens.htm. அரசியின் நகர்வு (ஆங்கில மொழியில்)]
- ↑ சதுரங்கக் காய்களின் பட்டியல் (ஆங்கில மொழியில்)
- ↑ "அரசிகளை வைத்தல் (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2013-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130329014435/http://chess.about.com/od/rulesofchess/ss/Boardsetup_5.htm.
- ↑ ["அரசி (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120626050857/http://chess-poster.com/english/learn_chess/queen/learn_the_queen.htm. அரசி (ஆங்கில மொழியில்)]
- ↑ சதுரங்கத்தின் விதிகள்: காலாட்கள் அகேகே (ஆங்கில மொழியில்)
- ↑ சதுரங்கக் காய்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ பூனைகளும் நாய்களும் (ஆங்கில மொழியில்)
- ↑ ஒருங்குறி வரியுரு 'வெள்ளைச் சதுரங்க அரசி (U+2655)' (ஆங்கில மொழியில்)
- ↑ ஒருங்குறி வரியுரு 'கறுப்புச் சதுரங்க அரசி (U+265B)' (ஆங்கில மொழியில்)