சுக்சுவாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுக்சுவாங் ("நகர்த்துவதற்கான கட்டாயம்" என்பதற்கான் செருமனிச் சொல், pronounced [ˈtsuːktsvaŋ]) என்பது சதுரங்கம் மற்றும் வேறு சில ஆட்டங்களிலும் வரும் ஓர் நிலையாகும். இந்த நிலையில் ஓர் ஆட்டக்காரர் நகர்த்துவதற்கான வாய்ப்பை கடத்த அல்லது நகர்த்தாமல் இருக்க விரும்பும்போது, நகர்த்தவேண்டும் என்ற கட்டாயத்தின் மூலம் செய்யப்படும் ஒரு நகர்த்தல் அவருக்கு நட்டத்தை ஏற்படுத்தும். "சுக்சுவாங்கில் உள்ளார்" என எந்தவொரு சாத்தியமான நகர்த்தலும் நிலையை மோசமாக மாற்றும் எனும் நிலையில் இருக்கும் ஆட்டக்காரர் குறிப்பிடப்படுவார்.[1]

"சுக்சுவாங்" எனும் பதம் செருமனில் 1858 அல்லது அதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே சதுரங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.[2] இப்பதம் ஆங்கிலத்தில் முதலாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் இம்மானுவேல் இலாசுக்கரால் 1905 இல் பயன்படுத்தப்பட்டது.[3]

சுக்சுவாங்குடனான நிலைகள் இறுதியாட்டங்களில் அதிகமாக இடம்பெறுகின்றன. ஜான் நண்ணின் கூற்றுப்படி, தலைகீழ் சுக்சுவாங் உடனான நிலைகள் இறுதியாட்டப் பகுப்பாய்வில் முக்கிய இடம்பெறுகின்றன.[4][5]


வரலாறு[தொகு]

சுக்சுவாங்கின் எண்ணக்கரு, சுக்சுவாங் எனும் சொல் அறியப்படாமல் இருந்திருந்தாலும், பலநூற்றாண்டுகாலமாக ஆட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசனும் கோட்டையும் எதிர் அரசன் இறுதியாட்டங்களை வெற்றிபெற சுக்சுவாங் முக்கியமானது.[6] அரசனும் கோட்டையும் (அல்லது ஒரே ஆற்றல் கொண்ட வேறு பெயருடைய காய்கள்) சதுரங்க ஆட்டத்தின் ஆரம்ப நிலைகளிலேயே பயன்பாட்டில் இருந்துள்ளது.[7]

கதாய், 9ஆம் நூற்றாண்டு
abcdefgh
8
c5 black king
e5 white king
d3 white rook
e2 black knight
8
77
66
55
44
33
22
11
abcdefgh
வெள்ளை நகர்த்தி ஆட்டத்தை வெற்றிகொள்ளும்

அடிப்படையான இறுதி முற்றுகைகள் தவிர்ந்த ஏனைய நிலைகளில் ஆரம்ப காலத்தில் சுக்சுவாங் பயன்படுத்தப்பட்டமை சைராப்பு கதாய் என்பவரின் முற்கால சதுரங்க வகையான சதிராஞ்சு என்பதின் மேலான இந்த ஆய்விலாக இருக்கலாம். இது 813 மற்றும் 833ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம்.

1. Re3 Ng1
2. Kf5 Kd4
3. Kf4

ஆகிய நகர்த்தல்களின் பின்னர் கருப்பானது சுக்சுவாங் நிலைக்குத் தள்ளப்படுகிறது. 3... Kc4 4. Kg3 Kd4 5. Re1 ஆகிய நகர்த்தல்களின் பின்னர் வெள்ளை வெற்றிகொள்கிறது.[8]


  1. Soltis 2003a, ப. 78
  2. Winter 1997
  3. Winter 2008
  4. Nunn 1995, ப. 6
  5. Nunn 1999, ப. 7
  6. Soltis 2003a, ப. 79
  7. Davidson 1981, ப. 21–22,41
  8. Soltis 2009, ப. 15
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்சுவாங்&oldid=3759416" இலிருந்து மீள்விக்கப்பட்டது