ஒருங்குறியில் சதுரங்க காய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒருங்குறியில் சதுரங்க காய்கள் அங்கமாக உள்ளன. சதுரங்கக் காய்களை குறிக்க படிமங்களைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக ஒருங்குறி வரியுருத் தொகுதியிலேயே அவை இடம் பெற்றுள்ளன. இதனால்:

  • அட்சர சதுரங்க குறியீட்டில், காயைக் குறிக்கும் எழுத்துக்கு மாற்றாக இந்த வரியுரு பயனாகிறது; காட்டாக Nc6 என்று குறிப்பதற்கு மாற்றாக ♞c6 இடலாம். இதனால் சதுரங்க நகர்த்தல்களை மொழித்தளையின்றி படிக்க இயலும். (பல மொழிகளிலும் சதுரங்கக் காய்களின் பெயர்களும் எழுத்துக் குறியீடுகளும் வெவ்வேறாக உள்ளன.)
  • ஓர் வரைபடத் தொகுப்பியைக் கொண்டில்லாமல் வழமையான உரைத் தொகுப்பி அல்லது சொற்செயலி மூலமாக சதுரங்க ஆட்டங்களை விவரிக்கலாம்.

இவற்றைக் கணித்திரையில் காட்டவும் அச்சிடவும் நல்ல ஒருங்குறி ஆதரவளிக்கும் எழுத்துருக்களைக் கொண்டிருக்க வேண்டும்.[1]

ஒருங்குறி குறியெண்ணும் மீயுரை குறியீட்டு மொழியும்[தொகு]

சதுரங்க காய்கள் ஒருங்குறியின் இதர குறியீடுகள் தொகுதியில் உள்ளன.

சதுரங்கக் காய்கள் Symbols
Unicode.org chart (PDF)
பெயர் காய் குறியெண் எச்டிஎம்எல்
வெள்ளை சதுரங்க அரசன் U+2654 ♔
வெள்ளை சதுரங்க அரசி U+2655 ♕
வெள்ளை சதுரங்க கோட்டை (யானை) U+2656 ♖
வெள்ளை சதுரங்க மந்திரி] U+2657 ♗
வெள்ளை சதுரங்க குதிரை U+2658 ♘
வெள்ளை சதுரங்க படைவீரன் U+2659 ♙
கருப்பு சதுரங்க அரசன்}) U+265A ♚
கருப்பு சதுரங்க அரசி U+265B ♛
கருப்பு சதுரங்க கோட்டை (யானை) U+265C ♜
கருப்பு சதுரங்க மந்திரி U+265D ♝
கருப்பு சதுரங்க குதிரை U+265E ♞
கருப்பு சதுரங்க படைவீரன் U+265F ♟

ஒருங்குறி குறியீடுகளாலான சதுரங்கப் பலகை[தொகு]

8
7
6
5
4
3
2
1
a b c d e f g h

மேற்கோள்கள்[தொகு]

  1. "Test for Unicode support in Web browsers".

புற இணைப்புகள்[தொகு]

  • http://js1k.com/2010-first/demo/750 Playable chess in 1024 bytes of javascript. Entry in JS1k competition by Óscar Toledo G. Usage of Unicode Chess symbols enables a playable design and keep the code less than 1024 bytes.