போகும்போது பிடித்தல்
சதுரங்கத்தில் போகும்போது பிடித்தல் (பிரெஞ்சு மொழி: En passant, போகும்போது) என்பது சதுரங்க ஆட்டத்தில் ஒரு கைப்பற்றல் நடவடிக்கை ஆகும். ஆட்டத்தின் போது ஒரு சிறப்பு நிகழ்வாக இரு சதுரங்க ஆட்டக்காரர்களும் எதிரியின் சிப்பாயைக் கைப்பற்றுவதற்கென்று வகுக்கப்பட்டுள்ள ஒரு தனி விதி முறையாகும்.[1] இக்கைப்பற்றல் நிகழ்வு சிப்பாய் தன் ஆரம்பநிலையில் இருந்து இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்ந்து எதிரியின் சிப்பாயை கடந்து போகும்போது மட்டுமே ஏற்படும். முன்னேறி வந்துவிட்ட எதிரியின் சிப்பாயுடன் நின்று போரிடாமல் கடந்து போய்விடும் நிகழ்வுகளில் உடனடியாக அடுத்த நகர்வாக இக்கைப்பற்றல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எதிரியின் சிப்பாய் கடந்து போகும் சிப்பாயைக் கைப்பற்றிக் கொண்டு ஒரு கட்டம்தான் முன்னோக்கி நகரும்.
எதிரியின் சிப்பாயைக் கடந்து போகும்போது அதைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கான ஒரே நிபந்தனை, அது எதிரியின் சிப்பாயைக் கடக்கும் போது மட்டுமே உடனடியாக அடுத்த நகர்வில் செய்யப்படுதல் வேண்டும். அடுத்த நகர்வில் செய்யாவிட்டால் பின்னர் அவ்வுரிமையை இழக்கவேண்டும்[2] . சதுரங்க விளையாட்டில் இந்த ஒரு நிகழ்வில் மட்டுமே கைபற்றப்பட்ட காய் இருந்த இடத்திற்கு கைப்பற்றிய காய் சென்று அமர்வதில்லை. மற்ற நகர்வுகள் போல் இல்லாவிட்டாலும் இந்த நகர்வு சதுரங்க விதிகளுக்கு உட்பட்ட நகர்வேயாகும். போகும்போது பிடித்தல் முறையில் காயைக் கைப்பற்றுதல் சதுரங்க விளையாட்டில் பொதுவான ஒரு நடைமுறையாகவே கருதப்படுகிறது.
சிப்பாய்கள் ஆரம்ப நிலையில் இருக்கும்போது மட்டும் ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகரலாம் என்று விதியை அறிமுகம் செய்த 15 ஆம் நூற்றாண்டில் போகும்போது பிடித்தல் விதியும் வகுக்கப்பட்டது. முன்னேறி வந்துவிட்ட எதிரியின் சிப்பாய் வலது அல்லது இடது பக்கக் கட்டத்தில் உள்ளபோது நம்முடைய சிப்பாய் இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்வது தடுக்கப்படுகிறது.
போகும்போது பிடித்தல் விதி
[தொகு]ஐந்தாவது வரிசையில் நிற்கும் ஒரு சிப்பாய் அதற்குப் பக்கவாட்டில் உள்ள வரிசையில் எதிரியின் சிப்பாய் ஒற்றை நகர்வில் இரண்டு கட்டங்கள் நகர்ந்து சென்றால் அதைக் கைப்பற்றலாம். அதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன.
- கைப்பற்றும் சிப்பாய் ஐந்தாவது வரிசைக்கு முன்னேறியிருக்க வேண்டும்.
- கைப்பற்றப்பட வேண்டிய சிப்பாய் ஐந்தாவது வரிசையில் உள்ள சிப்பாய்க்கு பக்கவாட்டில் வலது அல்லது இடது புறத்தில் ஒரே நகர்வில் இரண்டு கட்டங்கள் முன்நகர வேண்டும். ( இரண்டு படி முன்னோக்கிய நகர்வு )
- இவ்வாறு கடந்த சிப்பாயை அடுத்த நகர்வில் உடனடியாக கைப்பற்ற வேண்டும். அப்பொழுதே சிப்பாயைக் கைப்பற்றாவிடில் பின்னர் இந்த போகும்போது பிடித்தல் உரிமையைக் கோரி அந்தச் சிப்பாயை கைப்பற்ற இயலாது
போகும்போது பிடித்தல் என்ற ஒரேயொரு சதுரங்க நிகழ்வில் மட்டுந்தான் கைபற்றும் காய் கைப்பற்றிய காய் இருந்தவிடத்தில் அமராமல் வேறு கட்டத்தில் அமர்கிறது.[3]:463
உதாரணங்கள்
[தொகு]
ஆட்டத்தின் ஆரம்ப நகர்வுகளில்
[தொகு]சதுரங்க ஆட்டத்தின் ஆரம்ப நகர்வுகளில் போகும்போது பிடித்தல் விதிக்கு சில உதாரணங்கள். In this line from பெட்ரோவ் தடுப்பாட்டம்திறப்பு நகர்வு ஆட்டத்தின் வரிசையில் வெள்ளை நிறக்காய்களுடன் விளையாடுபவர் d5 இல் உள்ள கருப்புச் சிப்பாயை தன்னுடைய ஆறாவது நகர்த்தலின் போது போகும்போது பிடித்தல் விதியின் படி கருப்பு நிற சிப்பாயைக் கைப்பற்ற முடியும்.
- 1. e4 e5
- 2. Nf3 Nf6
- 3. d4 exd4
- 4. e5 Ne4
- 5. Qxd4 d5 (படம்)
- 6. exd6e.p.
மற்றொரு உதாரணம்: இந்நிகழ்வு பிரெஞ்சு தடுப்பாட்டம்முறையில் தொடக்க நகர்வு ஆடியபோது நிகழ்ந்தது. 1.e4 e6 2.e5,என்ற நகர்த்தல்களுக்குப் பின்னர்,வில்லெம் சுடெய்ன்சுஅவர்களால் ஒருமுறை இவ்வாறு நகர்த்தப்பட்டது.[4]:2 ஒருவேளை பதிலுக்கு கருப்புச் சிப்பாய் 2...d5 என நகர்த்தினால், வெள்ளைநிறக் காய்களுடன் ஆடுபவர் போகும்போது பிடித்தல் விதியின்படி 3.exd6 எனக் கருப்பு சிப்பாயைக் கைப்பற்றி விளையாடலாம். இதைப்போலவே ப்திலுக்கு 2...f5 என்று நகர்த்தினாலும் வெள்ளை 3.exf6e.p என ஆடலாம்.
இந்த உதாரணம் சுடெய்ன்சு மறும் பெர்னார்டு பிளெய்சிக் இடையிலான ஆட்டத்தில் நிகழ்ந்தது.[5]
- 1. e4 e6
- 2. e5 d5
- 3. exd6e.p.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brace, Edward (1977), "en passant", An Illustrated Dictionary of Chess, Craftwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55521-394-4
- ↑ FIDE rules (En Passant is rule 3.7, part d)
- ↑ Burgess, Graham (2000), The Mammoth Book of Chess (2nd ed.), Carroll & Graf, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7867-0725-6
- ↑ Minev, Nikolay (1998), The French Defense 2: New and Forgotten Ideas, Thinkers' Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-938650-92-0
- ↑ Steinitz vs. Fleissig, 1882