குதிரை (சதுரங்கம்)

குதிரை (Knight) என்பது சதுரங்கத்தில் ஒரு காய் ஆகும்.[1] இக்காயானது குதிரையினது தலையினதும் கழுத்தினதும் வடிவமைப்பைக் கொண்டது. போட்டியின் ஆரம்பத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு குதிரைகள் வீதம் கொண்டிருப்பர்.[2] சதுரங்கத்தின் ஆரம்பத்தில் வெள்ளைக் குதிரைகள் b1, g1 ஆகிய கட்டங்களிலும் கறுப்புக் குதிரைகள் b8, g8 ஆகிய கட்டங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்.[3]
நகர்வு
[தொகு]a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்கக் காய்கள் | ||
---|---|---|
![]() |
அரசன் | ![]() |
![]() |
அரசி | ![]() |
![]() |
கோட்டை | ![]() |
![]() |
அமைச்சர் | ![]() |
![]() |
குதிரை | ![]() |
![]() |
காலாள் | ![]() |
சதுரங்கக் காய்களுள் குதிரையின் நகர்வானது வேறுபாடு மிக்கது. குதிரையானது இரண்டு கட்டங்கள் கிடையாக நகர்ந்து ஒரு கட்டம் செங்குத்தாக நகரும். அல்லது இரண்டு கட்டங்கள் செங்குத்தாக நகர்ந்து ஒரு கட்டம் கிடையாக நகரும்.[4] இந்த நகர்வு டகரத்தை (ஆங்கிலத்தில் பேரெழுத்து L) ஒத்தது.[5] குதிரை மட்டுமே ஏனைய காய்களைப் பாய்ந்து கடக்கக்கூடியது.[6]
a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
குதிரையின் நகர்வுக் கோலத்தின் காரணமாக, குதிரையானது கவையொன்றை மேற்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானது.
a | b | c | d | e | f | g | h | ||
8 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | 8 | |||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
வலப்பக்கமுள்ள படத்தில் சதுரங்கப் பலகையில் f5இல் உள்ள குதிரையொன்று ஏனைய கட்டங்களைச் சென்றடைவதற்குத் தேவையான நகர்வுகளின் எண்ணிக்கை காட்டப்பட்டுள்ளது.
பெறுமானம்
[தொகு]குதிரையானது ஏறத்தாழ அமைச்சரின் வலிமையையும் பெறுமானத்தையும் உடையது. அமைச்சரானது நீண்ட வீச்சைக் கொண்டிருந்தாலும் சதுரங்கப் பலகையின் அரைப் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், குதிரையானது ஏனைய காய்களைக் கடந்து செல்லக்கூடியது. மூடிய நிலையிலுள்ள ஆட்டத்தின்போது குதிரை மிகவும் பயன் மிக்கதாய் அமையும்.
குறியீடு
[தொகு]இயற்கணிதக் குறியீட்டு முறையில் குதிரைக்கு N எனுங்குறியீடு (K என்பது அரசனைக் குறிப்பதால்) வழங்கப்படுகிறது.[7]
ஒருங்குறி
[தொகு]ஒருங்குறியில் குதிரைக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன.
♘ U+2658-வெள்ளைக் குதிரை[8]
♞ U+265E-கறுப்புக் குதிரை[9]
இதையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ["சதுரங்கக் காய்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. சதுரங்கக் காய்கள் (ஆங்கில மொழியில்)]
- ↑ சதுரங்கக் காய்களின் பட்டியல்
- ↑ "குதிரைகளை வைத்தல் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
- ↑ ["குதிரை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. குதிரை (ஆங்கில மொழியில்)]
- ↑ ["காய்கள் & நகர்வு-அமைச்சர், குதிரை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. காய்கள் & நகர்வு-அமைச்சர், குதிரை (ஆங்கில மொழியில்)]
- ↑ ["குதிரையின் நகர்வு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01. குதிரையின் நகர்வு (ஆங்கில மொழியில்)]
- ↑ "இயற்கணிதச் சதுரங்கக் குறியீட்டை வாசிப்பதும் எழுதுவதும் எப்படி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-28. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
- ↑ U+2658: வெள்ளைச் சதுரங்கக் குதிரை (ஆங்கில மொழியில்)
- ↑ ஒருங்குறி வரியுரு 'கறுப்புச் சதுரங்கக் குதிரை (U+265E)' (ஆங்கில மொழியில்)