பாபி ஃபிஷர்
பாபி ஃபிஷர் | |
---|---|
முழுப் பெயர் | ராபர்ட் ஜேம்ஸ் ஃபிஷர் |
நாடு | அகூநா, ஐஸ்லாந்து |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் |
உலக வாகையாளர் | 1972-1975 (பிடே) |
உச்சத் தரவுகோள் | 2785 (ஜூலை 1972) |
பாபி ஃபிஷர் (Robert James "Bobby" Fischer, மார்ச் 9, 1943 – ஜனவரி 17, 2008) [1][2]அமெரிக்காவில் பிறந்த சதுரங்க மேதை ஆவார். இவர் இறக்கும்போது ஐஸ்லாந்தின் குடிமகனாக இருந்தார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வாகையாளர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரே அமெரிக்கர் இவராவார். 1972 இல் உலக வாகையாளரான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக வாகையாளர் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது வாகையாளர் பட்டமும் பறிபோனது. இருந்தாலும் இவர் சதுரங்க ஆட்ட வரலாற்றிலேயே மிகப்பெரும் ஆட்டக்காரர்களில் ஒருவராகக்கருதப்படுகிறார்.
1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்பவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார்[3][4]. இவரது கடைசிக் காலங்களில் இவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்தமைக்காக பிரபலம் அடைந்திருந்தார்[5]. இவரது தாயார் ஒரு யூதர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chess Champion Bobby Fischer Has Died". The Post Chronicle. 2008-01-17. http://www.postchronicle.com/news/original/article_212125300.shtml. பார்த்த நாள்: 2008-01-17.
- ↑ "பொபி பிஷ்சர் ஆட்டத்திறனும் இயல்புகளும". பிபிஸி. 2008-01-17. http://www.postchronicle.com/news/original/article_212125300.shtml. பார்த்த நாள்: 23 ஜனவரி 2008.
- ↑ "Chess Champion Bobby Fischer Has Died". The Post Chronicle. 2007-01-17. http://www.postchronicle.com/news/original/article_212125300.shtml. பார்த்த நாள்: 2007-01-17.
- ↑ Chess legend Fischer dies at 64, பிபிசி News, 2008-01-18
- ↑ Bobby Fischer interviewed by Pablo Mercado, Radio Bomba, September 12 2001, accessed September 2 2006
வெளி இணைப்புகள்
[தொகு]- ஃபிஷரின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2008-01-21 at the வந்தவழி இயந்திரம்