உருய் உலோப்பசு
நகர்வுகள் | 1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5 |
---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | சி60–சி99 |
தோற்றம் | கோட்டிங்கென் ஓலைச் சுவடி, 1490 |
பெயரிடப்பட்டது | ருய் லோபஸ் டெ செகுரா, லிப்ரோ டெல் அஜெட்ரெழ், 1561 |
மூலம் | திறந்த விளையாட்டு |
ஏனைய சொற்கள் | எசுப்பானிய முன்நகர்வு, எசுப்பானிய விளையாட்டு |
Chessgames.com opening explorer |
உருய் உலோப்பசு (ஆங்கிலம்: Ruy Lopez, எசுப்பானியம்: apertura Ruy López) என்பது ஒரு சதுரங்க முன்நகர்வு ஆகும்.[1] இது எசுப்பானிய முன்நகர்வு அல்லது எசுப்பானிய விளையாட்டு எனவும் அழைக்கப்படும்.[2] இந்த முன்நகர்வு பின்வருமாறு தொடங்கும்.
1.e4 e5
2.Nf3 Nc6
3.Bb5[3]
ருய் லோபஸ் என்பது பிரபலமான சதுரங்க முன்நகர்வுகளுள் ஒன்றாகும்.[4] சதுரங்க முன்நகர்வுகளுக்கான கலைக் களஞ்சியத்தில் சி60இலிருந்து சி99 வரையான இடம் ருய் லோபசிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[5]
வரலாறு[தொகு]
எசுப்பானியப் பாதிரியாரான ருய் லோபஸ் டெ செகுராவால் இந்த முன்நகர்வு பற்றியும் ஏனைய முன்நகர்வுகள் பற்றியும் லிப்ரோ டெல் அஜெட்ரெழ் என்ற 150 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்று 1561ஆம் ஆண்டு எழுதப்பட்டது.[6] அதன் பின்னரே ருய் லோபஸ் என்று இந்த முன்நகர்வுக்குப் பெயர் சூட்டப்பட்டது.[7] ஆனாலும் இந்த முன்நகர்வு ஏற்கனவே 1490இல் எழுதப்பட்ட கோட்டிங்கென் ஓலைச் சுவடியில் உள்ளடக்கப்பட்டிருந்தது.[8]
அடிப்படை[தொகு]
பாரம்பரிய முறைப்படி, ருய் லோபஸ் முன்நகர்வை மேற்கொள்ளும் வெள்ளையின் குறிக்கோள் கறுப்பின் சிப்பாய்களின் கட்டமைப்பைக் குலைப்பதேயாகும். வெள்ளையினுடைய மூன்றாவது நகர்வு e5 சிப்பாயை f3 குதிரையின் தாக்குதலிலிருந்து காக்கும் குதிரையைத் தாக்குவதாக அமையும். e5 சிப்பாயைத் தாக்கும் 4.Bxc6 dxc6 5.Nxe5 என்பது ஏமாற்றம் விளைவிக்கக்கூடியது. ஏனெனில், கறுப்பின் 5...Qd4 என்ற நகர்வு குதிரையையும் e4 சிப்பாயையும் கவை செய்வதாக அமையும். அல்லது 5...Qg5 என்பது குதிரையையும் g2 சிப்பாயையும் கவை செய்வதாக அமையும். இவற்றுள் ஏதாவது ஒன்றின் மூலம் கறுப்பு இழந்த காயைத் திரும்பப் பெறுவதுடன் நல்ல ஒரு நிலையையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனாலும் கூட வெள்ளையின் 3.Bb5 என்பது ஒரு சிறந்த நகர்வு ஆகும். ஏனெனில், அதன் மூலம் கோட்டை கட்டுதலுக்குத் தயாராகவும் கறுப்பின் ராஜாவுக்குப் பிணை ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறினையும் பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும் வெள்ளையின் மூன்றாவது நகர்வு எந்த உடனடி அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை. ஆகவே, கறுப்பு பல்வேறு விதங்களில் அதனை எதிர்கொள்ள முடியும்.
கறுப்பின் மூன்றாவது நகர்வு[தொகு]
ருய் லோபஸ் முன்நகர்வில் பெரும்பாலும் கறுப்பின் மூன்றாவது நகர்வு 3...a6 என அமையும்.[9] அதைத் தவிரவும் செய்யப்படும் வேறு நகர்வுகள் கீழே தரப்படுகின்றன.
- 3...g6
- 3...Nge7
- 3...Nd4
- 3...d6
- 3...Nf6
- 3...Bc5
- 3...a5
- 3...b6
- 3...Na5
- 3...Nb8
- 3...d5
- 3...Qe7
- 3...Be7
- 3...Bb4
- 3...f6
- 3...g5
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ["ருய் லோபஸ் அல்லது எசுப்பானிய முன்நகர்வு (ஆங்கில மொழியில்)". 2012-03-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-25 அன்று பார்க்கப்பட்டது. ருய் லோபஸ் அல்லது எசுப்பானிய முன்நகர்வு (ஆங்கில மொழியில்)]
- ↑ "ருய் லோபஸ்: அனைத்து வேறுபாடுகளும் (ஆங்கில மொழியில்)" (PDF). 2011-12-16 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-02-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ருய் லோபஸ்-தொடக்க நிலை (ஆங்கில மொழியில்)". 2012-03-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ருய் லோபஸ் (ஆங்கில மொழியில்)
- ↑ ருய் லோபச் (ஆங்கில மொழியில்)
- ↑ "எசுப்பானிய விளையாட்டைப் புரிந்து கொள்தல் (ருய் லோபஸ்) (ஆங்கில மொழியில்)". 2011-10-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ றுய் லோபஸ் (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஒரு கற்றுக்குட்டியின் சதுரங்க முன்நகர்வுகளின் தோட்டம் (ஆங்கில மொழியில்)". 2005-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-25 அன்று பார்க்கப்பட்டது. ஒரு கற்றுக்குட்டியின் சதுரங்க முன்நகர்வுகளின் தோட்டம் (ஆங்கில மொழியில்)]
- ↑ ருய் லோபஸ்-பிரபல்யமான சதுரங்க முன்நகர்வு உத்தி (ஆங்கில மொழியில்)