இந்திய துணைப் பிரதமர்
Appearance
இந்தியா துணை பிரதமர்
Bhārat Ke Upapradhānamantri | |
---|---|
தற்போது காலி 23 மே 2004 முதல் | |
இந்திய அரசு | |
Type | துணை அரசாங்கத் தலைவர் |
பதவி | செயற்குழு துணைத் தலைவர் |
உறுப்பினர் | இந்திய நாடாளுமன்றம் யூனியன் கவுன்சில் ஆஃப் மினிஸ்டர்ஸ் |
அறிக்கைகள் | |
பரிந்துரையாளர் | இந்திய பிரதமர் |
நியமிப்பவர் | இந்திய ஜனாதிபதி |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
முதலாமவர் | வல்லபாய் படேல் |
இறுதியாக | லால் கிருஷ்ண அத்வானி |
இந்திய துணை பிரதமர் இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் ஒரு உறுப்பினர் ஆவார். பொதுவாக ஒரு துணை பிரதமர், உள்துறை அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் போன்ற ஒரு முக்கிய அமைச்சரவையை தன் இலாகாவாக வைத்திருப்பார். துணை பிரதம மந்திரி பதவி அதிகாரப்பூர்வமற்றது, இருப்பினும் இது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் போதும் அல்லது தேசிய அவசர காலங்களிலும், அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]
இந்திய துணைப் பிரதமர்களின் பட்டியல்
[தொகு]எண் | துணை பிரதமர் மற்றும் வகித்த பதவிகள் | படம் | பதவிக்காலம் | கூட்டணி ஆதரவு கட்சிகள் | பிரதமர் | ||
---|---|---|---|---|---|---|---|
1 | வல்லபாய் பட்டேல் | 15 ஆகஸ்ட் 1947 | 15 டிசம்பர் 1950 | இந்திய தேசிய காங்கிரசு | ஜவஹர்லால் நேரு | ||
2 | மொரார்ஜி தேசாய் | 24 ஜனவரி 1967 | 6 டிசம்பர் 1969 | இந்திரா காந்தி | |||
3 | சரண் சிங் | 24 ஜனவரி 1979 | 28 ஜீலை 1979 | ஜனதா கட்சி | மொரார்ஜி தேசாய் | ||
4 | ஜெகசீவன்ராம் | 24 மார்ச் 1977 | 28 ஜீலை 1979 | ||||
5 | யஷ்வந்த்ராவ் சவான் | 28 ஜீலை 1979 | 14 ஜனவரி 1980 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | சரண் சிங் | ||
6 | சவுத்ரி தேவி லால் (விவசாய அமைச்சகம்) | 2 டிசம்பர் 1989 | 1 ஆகஸ்டு 1990 | ஜனதா தளம் (தேசிய முன்னணி) | வி. பி. சிங் | ||
10 நவம்பர் 1990 | 21 ஜீன் 1991 | சமாஜ்வாடி ஜனதா கட்சி | சந்திரசேகர் | ||||
7 | லால் கிருஷ்ண அத்வானி | 29 ஜீன் 2002 | 22 மே 2004 | பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) |
அடல் பிகாரி வாச்பாய் |
வாழும் முன்னாள் துணைப் பிரதமர்கள்
[தொகு]3 சனவரி 2025, இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் ஒருவர் வாழுகின்றார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "துணைப் பிரதமர் பட்டியல்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 21, 2015.