உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்செலோ மத்தியூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஞ்செலோ மாத்தியூஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஞ்ஜெலா டேவிஸ் மாத்யூஸ் (பிறப்பு: சூன் 2, 1987, கொழும்பு) அல்லது சுருக்கமாக அஞ்ஜெலா மாத்யூஸ், இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரர். அனைத்து வகைத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் தலைவராக இருந்துள்ளார்.[1][2] 2004 ஆம் ஆண்டு ஹராரே யில் நடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, பஸ்னாஹிர துடுப்பாட்ட அணி, கொல்கத்தா நைட்ரைடர் அணி, இலங்கை ஏ அணி, கோல்ட் அணி, ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

செப்டம்பர், 2005 இல் கொழும்பின் போலீஸ் பார்க் மைதானத்தில் நியூசிலாந்து ஏ -க்கு எதிராக இலங்கை 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மேத்யூஸ் அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான துடுப்பாட்ட கோப்பையில் இவர் இலங்கை அணியின் தலைவராக இருந்தார். 2006 ஆம் ஆண்டு கொழும்பு துடுப்பாட்ட சங்கத்தின் சார்பாக முதல் முதல் தர போட்டியில் விளையாடினார்.[3]

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில், 2017 இந்தியன் பிரீமியர் லீக் பருவத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் பிரீமியர் லீக் உலகில் மிகவும் விரும்பப்பட்ட வீரர்களில் ஒருவராக இருந்தார். இவரை, புனே வாரியர்ஸால் 950,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்துல் எடுத்தது.[4]

மார்ச் 2018 இல், அவர் 2017–18 சூப்பர் ஃபோர் மாகாண போட்டிகளுக்கான தொடரில் இவர் கண்டி அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[5][6] அந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் மூலம் அதற்கு அடுத்த மாதம், 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கண்டியின் அணியின் கேப்டனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.[7]

ஆகஸ்ட் 2018 இல், 2018 எஸ்.எல்.சி இருபது 20 லீக் ட்க் தொடரிலும் இவர் கண்டியின் அணியின் தலைவரகத் தேர்வு செய்யப்பட்டார்.[8]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

மேத்யூஸ் 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கினார்.முதலில் சகலத் துறையராக இருக்க வேண்டும் என எண்ணிய இவர் ஆனால் அதன் பின்னர் அவரது மட்டையாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதன் மூலம் தனது பணிச்சுமையைக் குறைக்கவும், காயங்களைத் தவிர்க்கவும் நினைத்தார்., தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளை விட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறார். இவரின் ச்டிரைக் ரெட் 84.06 என்று உள்ளது.[4][9]

நவம்பர் 2008 இல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமான இவர் , ஜூலை, 2009 இல் காலியில் பாகிஸ்தானுக்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]

2009 ஆம் ஆண்டு பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்த டெஸ்ட் அப்துர் ரவூப், முகமது அமீர் மற்றும் சயீத் அஜ்மல் ஆகியோருக்கும் அறிமுகப் போட்டியாக இருந்தது. கொழும்பின் சிங்கள விளையாட்டு சங்க மைதானத்தில் தொடரின் மூன்றாவது போட்டியில் தனது முதல் தேர்வு போட்டிகளில் அரைசதம் அடித்தார். இதே மைதானத்தில் 2011 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[10] ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பான மட்டையாட்ட சராசரியினைக் கொண்டுள்ளார். உள்நாட்டிலும், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட் போன்ற நாடுகளிலும் இவர் சிறப்பான மட்டையாட்ட சராசரிகளைக் கொண்டுள்ளார். அவரது நான்கு நூறுகளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரைக் கொண்ட சிறப்பான வேகப் அப்ந்துவீச்சளர்களைக் கொண்ட இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது ஆகும்.


வெளியிணைப்புகள்

[தொகு]
  1. "Mathews takes over as Sri Lanka's T20 captain". Wisden India. 24 October 2012 இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131016130436/http://www.wisdenindia.com/cricket-news/mathews-takes-sri-lankas-t20-captain/32025. 
  2. "Angelo Mathews reappointed limited-overs captain". ESPN Cricinfo. 9 January 2018. http://www.espncricinfo.com/story/_/id/22010288/angelo-mathews-reappointed-sri-lanka-limited-overs-captain. பார்த்த நாள்: 9 January 2018. 
  3. Gunaratne, Rochelle Palipane (1 September 2009). "Angelo Mathews – A phenomenal inspiration!" (PDF). The Island இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140103171803/http://pdfs.island.lk/2009/09/01/p15.pdf. பார்த்த நாள்: 30 March 2013. 
  4. 4.0 4.1 Angelo Mathews (Player Profile) பரணிடப்பட்டது 2014-09-20 at Archive.today Cricket Australia
  5. "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. பார்த்த நாள்: 27 March 2018. 
  6. "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018. 
  7. "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. பார்த்த நாள்: 27 April 2018. 
  8. "SLC T20 League 2018 squads finalized". The Papare. http://www.thepapare.com/slc-t20-league-2018-squads-finalized/. பார்த்த நாள்: 16 August 2018. 
  9. Angelo Mathews (Player Profile)- ESPN Cricnifo
  10. "Batting records - Test matches - Cricinfo Statsguru - ESPN Cricinfo". Cricinfo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்செலோ_மத்தியூஸ்&oldid=3611271" இலிருந்து மீள்விக்கப்பட்டது