முகம்மது ஆமிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகம்மது ஆமிர்

محمد عامر
Mohammad Amir.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது ஆமிர்
பிறப்பு 13 ஏப்ரல் 1992 (1992-04-13) (அகவை 27)
பாக்கித்தான்
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை இடதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 194) சூலை 4, 2009: எ இலங்கை
கடைசித் தேர்வு ஆகத்து 18, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 173) சூலை 30, 2009: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 24, 2010:  எ ஆத்திரேலியா
சட்டை இல. 90
தரவுகள்
தேர்வுஒ.நாT20முதல்தர
ஆட்டங்கள் 14 15 18 28
ஓட்டங்கள் 278 167 39 508
துடுப்பாட்ட சராசரி 12.63 20.87 9.75 14.11
100கள்/50கள் 0/0 0/1 0/0 0/0
அதிகூடியது 30* 73* 21* 44*
பந்துவீச்சுகள் 2,867 789 390 4991
விக்கெட்டுகள் 51 25 23 120
பந்துவீச்சு சராசரி 29.09 24.00 19.86 21.48
5 விக்/இன்னிங்ஸ் 3 0 0 7
10 விக்/ஆட்டம் 0 0 0 1
சிறந்த பந்துவீச்சு 6/84 4/28 3/23 10/97
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 6/– 3/– 5/0

ஆகத்து 29, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

முகம்மது ஆமிர் (Mohammad Amir,உருது: محمد عامر பிறப்பு:ஏப்ரல் 13 1992, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இடதுகை விரைவு வீச்சாளரான இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2009 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடி வருகின்றார். சுமாராக மணிக்கு 140 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில்பந்துவீசும் திறன் பெற்றவர் ஆவார்.2007 ஆம் ஆண்டிலிருந்து முதல் தரத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடி வருகிறார். 2009 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தனது 17 ஆவது வயது முதல் விளையாடி வருகிறார். 2009 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தார்.[1][2] இவருக்கு அணியின் முன்னாள் விரைவு வீச்சாளர் மற்றும் பயிற்சியாளரான வசீம் அக்ரம் சிலநுனுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.[3] இவரின் 18 ஆவது வயதில் இவர் வசீம் அக்ரமை விட அறிவாளியாக உள்ளதாக முன்னாள் வீரர்களான வசீம் அக்ரமும் , ரமீஸ் ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.[3]

ஆகத்து 29, 2010 ஆம் ஆண்டில் இவர் சூதாட்டப் புகாரில் சிக்கினார். இவரின் மீதான புகார் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து இவருக்கு ஐந்து ஆண்டுகள் துடுப்பாட்டம் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின் இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையிடம் பொதுமன்னிப்பு கேட்டார்.[4] இவரின் வயதைக் காரணம் காட்டி இவருக்கு ஐந்து ஆண்டுகள் தடையும் இவருடன் புகாரில் சிக்கிய சல்மான் பட் 7 ஆண்டுகளும் மற்றும் முகம்மது ஆசிப்பிற்குப் பத்து ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்ட்டது.[5]

இவரின் தடைக்காலம் செப்டம்பர் 2, 2015 இல் முடிவிற்கு வருவதால் இவர் உள்ளூர்ப் போட்டிகளில் ஈடுபட இருப்பதாக சனவரி 29, 2015 இல் தகவல் வெளியானது.[6] 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவரை சிட்டகாங் வைக்கிங்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. 2016 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[7]

நிறைய போட்டிகளில் விளையாடிய பிறகே தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட கேட்சைப் பிடித்தார். அக்டோபர் 31, 2016 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது 20 ஆவது தேர்வுப் போட்டியில் டேரன் பிராவோ அடித்த பந்தை அற்புதமாகப் பிடித்து அவரை வீழ்த்த உதவினார்.[8] 2010 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் வீசிய ஒரே ஓவரில் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டியில் ஒரு ஓவரில் அதிக இலக்குகள் வீழ்த்தி சாதனை படைத்தனர்.[9][10]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

முகமது ஆமிர் ஏப்ரல் 13, 1992 இல் பாக்கித்தானில் பிறந்தார்.[11] ஏழு குழந்தைகளில் இவர் தான் இளையவர். தனக்கு வசீம் அக்ரமை மிகவும் பிடிக்கும் என்றும் அவர்தான் தனது ஆதர்சன குரு என்றும் அவரைத் தொலைக்காட்சிகளில்பார்க்கும் போது அவர் எவ்வாறு பந்துவீசுகிறார் என்பதை நுனுக்கமாகப் பார்த்து அவர்போல் பந்துவீசியதாகவும் கூறினார்.[12]

சான்றுகள்[தொகு]

 1. "Two rookies included in Pakistan T20 Squad". ESPNcricinfo. பார்த்த நாள் 4 November 2011.
 2. "Mohammad Aamer Cricinfo Profile". ESPN cricinfo.com. http://www.cricinfo.com/Pakistan/content/player/290948.html. பார்த்த நாள்: 11 November 2009. 
 3. 3.0 3.1 "Aamer 'cleverer than I was at 18': Wasim". Dawn.com. http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/cricket/12-aamer%20cleverer%20than%20i%20was%20at%2018-wasim--bi-05. பார்த்த நாள்: 4 August 2010. 
 4. Samiuddin, Osman. "Amir handed five-year ban, to appeal sentence in front of CAS in Geneva, Switzerland". Spot-Fixing Saga. ESPNCricinfo. பார்த்த நாள் 5 February 2011.
 5. "Pakistan cricketers guilty of betting scam". BBC. பார்த்த நாள் 1 November 2011.
 6. "OUTCOMES FROM ICC BOARD AND COMMITTEE MEETINGS". ICC (29 January 2015). மூல முகவரியிலிருந்து 2 February 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 January 2015.
 7. "Pakistan win Amir's comeback game".
 8. "Mohammad Amir's dubious record". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/pakistan-v-west-indies-2016-17/content/story/1064129.html. 
 9. "Pakistan 5 Wicket Team Over – Greatest 40 Moments | Official Tickets, Live cricket scores & news | ICC World Twenty20 India 2016".
 10. Scorecard Cricinfo. Retrieved 15 Dec 2016.
 11. "Mohammad Amir". Pakistan / Players. ESPN Sports Media. பார்த்த நாள் 16 November 2013.
 12. [1]. Retrieved 30 August 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_ஆமிர்&oldid=2714437" இருந்து மீள்விக்கப்பட்டது