சல்மான் பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சல்மான் பட்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சல்மான் பட்
பிறப்பு 7 அக்டோபர் 1984 (1984-10-07) (அகவை 35)
லாகூர், பாக்கித்தான்
வகை ஆரம்ப துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 178) செப்டம்பர் 3, 2003: எ வங்காளதேசம்
முதல் ஒருநாள் போட்டி (cap 150) செப்டம்பர் 22, 2004: எ மேற்கிந்தியத் தீவுகள்
சட்டை இல. 1
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 33 78 90 149
ஓட்டங்கள் 1,889 2,725 6,232 6,049
துடுப்பாட்ட சராசரி 30.46 36.82 41.00 44.47
100கள்/50கள் 3/10 8/14 17/24 19/29
அதிகூடிய ஓட்டங்கள் 122 136 290 150*
பந்து வீச்சுகள் 137 69 938 535
வீழ்த்தல்கள் 1 0 11 10
பந்துவீச்சு சராசரி 106.00 0 59.36 48.80
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/36 0/11 4/82 2/26
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 12/– 20/– 33/– 39/–

பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சல்மான் பட் (Salman Butt, உருது : سلمان بٹ பிறப்பு: அக்டோபர் 7 1984 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார் 2003 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடி வருகின்றார். பின் சூதாட்டப் புகாரில் 2011 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் துவக்கவீரராக களம் இறங்கினார். செப்டம்பர் 3, 2003 இல் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் செப்டம்பர் 22, 2004 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஜூலை 16, 2010 இல் தேர்வுப் போட்டிகளின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்டு 29, 2010 இல் இவர் சூதாட்டப் புகாரில் சிக்கினார். ஆகஸ்டு 31 இல் இவர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். பின் ஒருநாள்போட்டித் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். 10 ஆண்டுகள் துடுப்பாட்டம் விளையாட தடைவிதிக்கப்பட்டது.[1] நவம்பர் ,2011 இல் முகமது ஆமிர் மற்றும் முகமது ஆசிபுடன் இணைந்து 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.[2] சூன் 21, 2012 இல் இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

செப்டம்பர் 2, 2015 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவர்களை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதித்தது.[3][4]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2003 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . செப்டம்பர் 3 இல் முல்தானில் நடைபெற்ற வாங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் துவக்கவீரராக களம் இறங்கி 14 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து மகமூத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 2 நான்குகளும் அடங்கும்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 34 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தார்.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 1 இலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பின் 2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. ஆகஸ்டு 26, இலண்டனில் நடைபெற்ற நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 58 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்து சுவானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 45 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்து மீண்டும் சுவானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

செப்டம்பர் 22, 2004 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். துவக்க வீரராக களம் இறங்குவதில் கடும் போட்டி நிலவியதால் இவருக்கு அணியில் வாய்ப்பு இடம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற வாகையாளர் கோப்பைத் தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்கள் அடித்தார். நவம்பர் 13, 2004 இல் இந்தியத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 292 ஓட்டங்களை எதிர்த்து விளையாடினார். இவர் சோயிப் மாலிக் மற்றும் இன்சமாம் உல் ஹக் ஆகியோருடன் இணைந்து 113 ஓட்டங்கள் எடுத்தார். காயம் காரணமாக 7 ஓவர்கள் மீதமிருக்கும் போது இந்தப் போட்டியில் இருந்து விலகினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 108* ஓட்டங்கள் எடுத்தார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. "Match-fixer pockets £150k as he rigs England Test at Lord's". News of the World. பார்த்த நாள் 2 October 2010.
  2. "Pakistan cricketers guilty of betting sca". BBC News. 1 November 2011. http://www.bbc.co.uk/news/uk-15538516. பார்த்த நாள்: 1 November 2011. 
  3. Amir, Asif, Butt free to play all cricket from September 2
  4. ICC confirms sanctions against Asif and Butt will expire on 1 September 2015
  5. 4th Test, Pakistan tour of England at London, Aug 26-29 2010 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/13222/scorecard/426416/england-vs-pakistan-4th-test-pakistan-tour-of-england-2010/, பார்த்த நாள்: 2018-05-26 
  6. "Inzamam and Salman Butt sink India!!". YouTube (28 March 2007). பார்த்த நாள் 6 February 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மான்_பட்&oldid=2714361" இருந்து மீள்விக்கப்பட்டது