முகம்மது ஆசிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகம்மது ஆசிப்
Mohammad Asif.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது ஆசிப்
பிறப்பு 20 திசம்பர் 1982 (1982-12-20) (அகவை 36)
பாக்கித்தான்
உயரம் 1.86 m (6)
வகை பந்து வீச்சு
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தேர்வுஒ.நாT20I
ஆட்டங்கள் 22 38 11
ஓட்டங்கள் 140 34 9
துடுப்பாட்ட சராசரி 6.55 3.77 7.38
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் புள்ளி 29 6 5*
பந்துவீச்சுகள் 4,997 1,941 257
விக்கெட்டுகள் 105 46 13
பந்துவீச்சு சராசரி 23.18 33.13 26.38
5 விக்/இன்னிங்ஸ் 7 0 0
10 விக்/ஆட்டம் 1 0 0
சிறந்த பந்துவீச்சு 6/41 3/28 4/18
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 5/– 3/–

ஆகத்து 21, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

முகம்மது ஆசிப் (Mohammad Asif, பிறப்பு: திசம்பர் 20, 1982),[1] ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2005 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.[2]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2005 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சனவரி 2 இல் சிட்னியில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் இவர் அறிமுகமானார்.[3]

இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 16 ஓவர்கள் வீசி 72 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் இலக்குகளைக் கைப்பற்றவில்லை. இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். 24 பந்துகளை சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.பின் 87 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12* ஓட்டங்கள் எடுத்தார்.இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]

2010 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதன் இரண்டாவது போட்டியில் 34 ஓவர்கள் பந்துவீசி யுவராஜ் சிங்கின் இலக்கினை வீழ்த்தினார். பின் மூன்றாவது போட்டியில் 78 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ராகுல் திராவிட் உட்பட 4 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் வீரேந்தர் சேவாக், லட்சுமணன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் இலக்கினைக் கைப்பற்றினார். [5] இந்தத் தொடரை பாக்கித்தான் அணி வென்றது. இதன் பின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரை இந்திய அணி வென்றது.

2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதன் நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆகஸ்டு 26, இலண்டனில் நடைபெற்றது [6].இந்தப் போட்டியில் 5 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சுவானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 29 ஓவர்கள் வீசி 97 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 ஓவர்களை மெய்டனாக வீசினார். 1 இலக்கினைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 11 பந்துகளில் ஒரு ஓட்டம் எடுத்து மீண்டும் சுவானின் பந்துவீச்சிலாட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 225 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

2005 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்தது. டிசம்பர் 21, ராவல் பிண்டியில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர்[8]. இந்தப் போட்டியில் 7 ஒவர்கள் வீசி 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். இவரின் பந்துவீச்சு சராசரி 2.00 ஆகும். இதில் இங்கிலாந்து அணி 6 இலக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]

பின் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பைத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு [10]எதிரன ஐந்தாவது போட்டியில்10 ஓவர்கள் வீசி 60 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[11]

சான்றுகள்[தொகு]

 1. Mohammad Asif, http://www.espncricinfo.com/ci/content/player/41411.html, பார்த்த நாள்: 2018-05-26 
 2. Mohammad Asif, http://www.espncricinfo.com/ci/content/player/41411.html, பார்த்த நாள்: 2018-05-26 
 3. Mohammad Asif, http://www.espncricinfo.com/ci/content/player/41411.html, பார்த்த நாள்: 2018-05-26 
 4. 3rd Test, Pakistan tour of Australia at Sydney, Jan 2-5 2005 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/14926/scorecard/64115/australia-vs-pakistan-3rd-test-pakistan-tour-of-australia-2004-05/, பார்த்த நாள்: 2018-05-26 
 5. யூடியூபில் Muhammad Asif Destroys Indian Batting, 3rd Test Karachi 2006
 6. Mohammad Asif, http://www.espncricinfo.com/ci/content/player/41411.html, பார்த்த நாள்: 2018-05-26 
 7. 4th Test, Pakistan tour of England at London, Aug 26-29 2010 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/13222/scorecard/426416/england-vs-pakistan-4th-test-pakistan-tour-of-england-2010/, பார்த்த நாள்: 2018-05-26 
 8. Mohammad Asif, http://www.espncricinfo.com/ci/content/player/41411.html, பார்த்த நாள்: 2018-05-26 
 9. 5th ODI (D/N), England tour of Pakistan at Rawalpindi, Dec 21 2005 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/14738/scorecard/226356/pakistan-vs-england-5th-odi-england-tour-of-pakistan-2005-06/, பார்த்த நாள்: 2018-05-26 
 10. Mohammad Asif, http://www.espncricinfo.com/ci/content/player/41411.html, பார்த்த நாள்: 2018-05-26 
 11. 5th Match (D/N), Asia Cup at Dambulla, Jun 21 2010 | Match Summary | ESPNCricinfo, http://www.espncricinfo.com/series/8532/scorecard/455235/bangladesh-vs-pakistan-5th-match-asia-cup-2010/, பார்த்த நாள்: 2018-05-26 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_ஆசிப்&oldid=2530864" இருந்து மீள்விக்கப்பட்டது