உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்கோ திறப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
g3 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
e2 white pawn
f2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.g3
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் A00
தோற்றம் பால் பெங்கோ எதிர் பாபி பிசர், 1962, பரிந்துரை வீரர்கள் போட்டி, குராகேவோ
பெயரிடப்பட்டது பால் பெங்கோ
மூலம் விலாமடிப்புத் திறப்பு
ஏனைய சொற்கள் அங்கேரியன் திறப்பு
பார்க்சா திறப்பு
பைலக் திறப்பு
அரசரின் விலாமடிப்புத் திறப்பு
Chessgames.com opening explorer

சதுரங்க விளையாட்டில் பெங்கோ திறப்பு ( Benko's Opening ) என்ற சதுரங்கத் திறப்பு அங்கேரியன் திறப்பு என்றும் அரசரின் விலாமடிப்புத் திறப்பு என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது.

இத்திறப்பாட்டம்,

1. g3

என்ற அடையாள நகர்வுடன் ஆரம்பமாகிறது.

வெள்ளை ஆட்டக்காரரின் 1.g3 நகர்வு மிகவும் பிரபலமான முதல் நகர்வு நடவடிக்கை ஆகும்; சாத்தியமான இருபது துவக்க நகர்வுகளில் இந்நகர்வின் செல்வாக்கு ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. வெள்ளை ஆட்டக்காரரின் இதற்கு அடுத்த நகர்வு பொதுவாக 2.Bg2 எனத் தொடர்ந்து விலா மடிப்புத்தேர் உருவாக்கி விளையாடும் நோக்கம் கொண்டதாகும். இவ்வாறான திறப்பாட்டம் கேட்டலான் திறப்பு அல்லது அரசரின் இந்தியத் தாக்குதல் வகைத் திறப்பு அல்லது ஆங்கிலத் திறப்பின் சில வகைகள் என்று நிலை மாறிவிட வாய்ப்பு உண்டு. வெள்ளை ஆட்டக்காரரின் 1. g3 என்ற நகர்வு 1...e5 2.Bg2 d5 3.Nf3 -- 4.0-0 என்ற வரிசை முறையில் விளையாட்டைத் தொடர வழிகோலுகிறது. இவ்வாறு விளையாடினால் வெள்ளையின் ஆட்டத்தில் முன்னேற்றமும் அவருடைய அரசருக்குப் பாதுகாப்பும் கிடைக்கிறது. அதேவேளையில் கருப்பு ஆட்டக்காரரின் d- மற்றும் e சிப்பாய்கள் சதுரங்கப் பலகையின் மையப்பகுதிக்குள் வந்துவிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திறப்பு பால் பெங்கோ என்பவரால் முதன் முதலில் விளையாடப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது. இவர் 1. g3 என்ற நகர்வுடன் விளையாட்டை ஆரம்பித்து விளையாடியே, 1962 ஆம் ஆண்டில் குராக்கேவோவில் நடைபெற்ற பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்கள் போட்டியில் பாபி பிசர் மற்றும் மைக்கேல் தால் இருவரையும் தோற்கடித்தார். 1963 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டியின் சுற்று ஆட்டங்களில் பெங்கோ 11 ஆட்டங்களில் இத்திறப்பிலேயே விளையாடினார்[1] [2]

பொதுவாக எல்லோராலும் ஆடப்படும் மற்ற திறப்புகளைப் போல இது கருதப்பட்டாலும், இத்திறப்பு சதுரங்க முன்நகர்வுகளுக்கான கலைக் களஞ்சியத்தில் A00 என்ற குறியீடு வழங்கப்பட்டு வகைப்படுத்தப் பட்டுள்ளது[3]. இத்திறப்புடன் ஆரம்பமாகும் பெரும்பாலான ஆட்டங்கள் ஆட்டப்போக்கில் மற்ற குறியீடுகளைக் கொண்ட திறப்பாட்டங்களாக மாற்றம் பெற்றுவிடுகின்றன.


கருப்பின் பதில் நகர்வுகள்[தொகு]

1...d5[தொகு]

ஒருவேளை கருப்பு மிகப்பொதுவான நகர்வான 1...d5. என்று விளையாடினால்,

 • வெள்ளையின் ஆட்டம் 2.Nf3 என்று தொடர்ந்து பார்க்சா திட்டம் போல 1.Nf3 d5 2.g3 என மாற்றம் பெறுகிறது. இதைத் தொடர்ந்து கருப்பு 2...Nf6 என்று விளையாடினால் ஆட்டமானது அரசரின் இந்தியத் தாக்குதல் திறப்பு A07 வகைகளுக்கு மாறுகிறது. 1. Nf3 Nf6 2. g3 d5 அல்லது 1. Nf3 Nf6 2. g3 c6
 • வெள்ளை தன்னுடைய இரண்டாவது நகர்வை 2.Bg2 என்று நகர்த்தி விளையாடினால், 1. g3 d5 2. Bg2 Nf6 என ஆட்டம் தொடர்ந்து அரசரின் இந்தியத் தாக்குதல் ஆட்டமும் 1. g3 d5 2. Bg2 e5 என்று தொடர்ந்தால் வழக்கத்துக்கு மாறான திறப்பாட்ட வகையும் விளைகின்றன.

1...g6[தொகு]

abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black bishop
h7 black pawn
g6 black pawn
g3 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white bishop
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
1. g3 g6 2. Bg2 Bg7

வெள்ளையின் 1. g3 நகர்வுக்கு சமச்சீராக கருப்பும் 1...g6 என்று விளையாடினால்,

 • வெள்ளை 2.c4 என்ற நகர்வின் மூலம் ஆட்டத்தைத் தொடர்ந்தால் கருப்பின் இரண்டாவது நகர்வைப் பொறுத்து இருவேறு வகைத் திறப்பாட்டங்கள் விளைகின்றன. கருப்பு 2...Bg7 என்று விளையாடினால் 1. c4 g6 2. g3 Bg7 என்ற A10 ஆங்கிலத் திறப்பாட்டமும், 2...Nf6 என்று விளையாடினால் 1. c4 Nf6 2. g3 g6 என்ற A15 வகை ஆங்கிலத் திறப்பாட்டமும் தொடர்கின்றன.
 • வெள்ளையின் 1. g3 மற்றும் 2.Bg2 நகர்வுகளுக்குச் சமச்சீராக கருப்பும் 1...g6 2...Bg7 என்று தொடர்ந்தால் ஆட்டம் 1. g3 g6 2. Bg2 Bg7 என்ற வரிசை முறையில் செல்லும். வெள்ளையின் அடுத்த நகர்வு 3.c4 அல்லது 3.Nf3 என அமைந்து ஆங்கிலத் திறப்புகள் A36, A15 போன்றவையும் அரசரின் இந்தியத் தாக்குதல் A07 அல்லது ரெட்டி A04 திறப்பாட்டமும் தோன்றுகின்றன. மாறாக வெள்ளை தன்னுடைய மூன்றாவது நகர்வை 3.d4 அல்லது 3.e4 என்று நகர்த்தி விளையாடினால் அவை கூடுதலாக சில தனிப்பட்ட வரிசைகளாக மாற்றம் பெறுகின்றன.

1...Nf6[தொகு]

கருப்பின் இந்த நகர்வு வலிமையற்றது. வெள்ளை ஆட்டக்காரர் இந்த நகர்வை தனக்கு விருப்பமான திறப்பாட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளமுடியும்.

 • வெள்ளை 2.Nf3 என்ற நகர்வுக்குச் சென்றால் 1.Nf3 Nf6 2.g3 d5 என்ற சூக்கர்டார்ட் திறப்பாட்ட வகை அல்லது 1. Nf3 Nf6 2. g3 g6 என்ற ரெட்டி திறப்பாட்ட வகை தோன்றுகிறது. இதன் தொடர்ச்சியாக c4 அல்லாத அரசரின் இந்திய விலாமடிப்பு திறப்பாட்டம் A49 அல்லது A15 வகை ஆங்கிலத் திறப்பாட்டம் தொடர்கிறது.
 • வெள்ளை 2.c4 என்ற நகர்வுக்குச் சென்றால் கருப்பின் இரண்டாவது நகர்வைப் பொறுத்து இருவேறு வகைத் திறப்பாட்டங்கள் விளைகின்றன. கருப்பு 2...e5 என்றால் 1. c4 Nf6 2. g3 e5 என்ற A20 வகை ஆங்கிலத் திறப்பாட்டம் அல்லது A22 வகை ஆங்கிலத் திறப்பாட்டம் தொடர்கிறது. கருப்பு தன்னுடைய இரண்டாவது நகர்வை 2...g6 என்று விளையாடினால் 1. c4 Nf6 2. g3 g6 என்ற A15 வகை திறப்பாட்டம் அல்லது E60 வகை அரசரின் இந்தியத் தடுப்பாட்டம் தொடர்கிறது.
 • வெள்ளை 2.Bg2 என்ற நகர்வைச் செய்யும்போது கருப்பு 2...d5 அல்லது 2...e5 நகர்வுடன் ஆட்டத்தைத் தொடரலாம்.

1...e5[தொகு]

கருப்பின் இந்த நகர்த்தல் வீரியம் மிக்க நகர்வு ஆகும். இதனால் வெள்ளை தன்னுடைய அமைச்சரை உடனடியாக நகர்த்தும் எண்ணத்தை தள்ளி வைக்கிறது.

 • இதற்கு வெள்ளை 2.c4 என விளையாடலாம். கருப்பின் இரண்டாவது நகர்வைப் பொறுத்து ஆட்டவகைகள் மாறுகின்றன. கருப்பு 2...Nf6 என்றால் A22 வகை 1. c4 e5 2. g3 Nf6 ஆங்கிலத் திறப்பாட்டமும், கருப்பு 2...Nc6 என்றால் A20 வகை 1. c4 e5 2. g3 Nc6 ஆங்கிலத் திறப்பாட்டமும் தொடர்கின்றன.
 • வெள்ளை 2.Bg2 என்ற நகர்வைச் செய்யும்போது கருப்பு 2...d5 அல்லது 2...Nf6 என்ற நகர்வுடன் ஆட்டத்தைத் தொடரலாம்.


குறிப்புகள்[தொகு]

 1. Mednis, Edmar (1994). How Karpov Wins. Courier Dover Publications.
 2. Timman, Jan (2005). Curaçao 1962: The Battle of Minds that Shook the Chess World. New in Chess. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5691-139-3.
 3. Encyclopaedia of Chess Openings, Volume A, Fourth Edition. Chess Informant.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்கோ_திறப்பு&oldid=3849448" இலிருந்து மீள்விக்கப்பட்டது