பிரம்மகுப்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரம்ம குப்தன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Brahmagupta
பிறப்பு 598 CE
இறப்பு 670 CE
அறியப்படுவது Zero

பிரம்மகுப்தர் (598-668) ஓர் இந்தியக் கணிதவியலாளர். அவர் உஜ்ஜயினியின் வான ஆய்வகத்தின் இயக்குனராக இருந்தவர். பிரம்மஸ்புட சித்தாந்தம் (628), மற்றும் கண்டகாத்யகம் (665) என்ற இரண்டும் அவரால் இயற்றப்பட்ட சிறப்பு பெற்ற நூல்கள்.

பிரம்மஸ்புடசித்தாந்தத்தில் தான் முதன்முதல் சூனியம் என்பதை ஓர் எண்ணாகவும், அது எந்த எண்ணிலிருந்தும் அதையே கழித்தால் வரக்கூடிய எண்ணென்றும் சொல்லப் பட்டது.

ax^2 + bx = c என்ற இருபடிச் சமன்பாட்டிற்குத் தீர்வும் கொடுக்கப்பட்டிருப்பது இந்நூலில்தான்.

பிரம்மகுப்தர் வானியல் கணிப்புகளுக்கு இயற்கணிதத்தைப் பயன்படுத்திய முதல் கணிதவியலர்.

ஓராண்டின் காலத்தை 365 நாட்கள், 6 மணி, 5 நிமிடம், 19 செகண்டு கள் என்று முதல் நூலிலும் இரண்டாவது நூலில் 365-6-12-36 என்றும் கணக்கிட்டிருக்கிறார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மகுப்தர்&oldid=1767760" இருந்து மீள்விக்கப்பட்டது