பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 4

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்[தொகு]

வணக்கம் Theni.M.Subramani/தொகுப்பு 4 அவர்களே , விக்கிப்பீடியா:பிறந்தநாள் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்  !
--மதனாஹரன் 10:56, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். --மதனாஹரன் 10:56, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

வாழ்த்துக்கு நன்றி மதனாஹரன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:10, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!--மணியன் 12:07, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
நன்றி. மணியன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:37, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
இப்போதுதான் பார்க்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் தேனியாரே. அண்மையில் பல பள்ளிகளையும் கல்வி நிறுவனங்களையும் பற்றி எழுதுவருவதைக் கண்டேன். மகிழ்ச்சி. -- சுந்தர் \பேச்சு 10:25, 24 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
சுந்தர், செல்வா தங்களது வாழ்த்துக்கு நன்றி .--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:27, 24 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

பயனரைத் தடை செய்வது பற்றி[தொகு]

அண்மையில் நீங்கள் ஒரு பயனரை (Ar.vijayan) தடை செய்து இருந்தீர்கள் (அவர் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி வழியாக மொழிபெயர்த்து ஒரு கட்டுரையை (வெப்பநிலை) இட்டார் என). இவர் புதுப்பயனர் என நினைக்கின்றேன். இவர் அறியாது செய்திருக்கலாம். எனவே, கட்டுரையை நீக்கிவிட்டு அவர் பேச்சுப்பக்கத்தில் ஒரு குறிப்பை இடுவது நல்லது. பயனரைத் தடை செய்வது தேவையில்லை. இது புதுப்பயனர்களுக்கு ஊக்கம் குன்றச் செய்யலாம். (அவருக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்). தடை செய்வதை, பெயர் அறிவிக்காமல் ஐ.பி முகவரியோடு வந்து, மிகவும் நச்சுத்தனமாக செய்யும் பதிவுகளைத் தடுக்கப் பயன்படுத்துங்கள். பதிவு செய்த பயனர்களாகட்டும் பதிவு செய்யாத பயனர்களாகட்டும், எடுத்த எடுப்பிலேயே சிறு பிழைகளுக்குத் தடை செய்ய வேண்டாம். --செல்வா (பேச்சு) 19:28, 12 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

தங்கள் விளக்கத்திற்கு நன்றி. அந்தப் பயனருக்கான தடை நீக்கப்பட்டுவிட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:39, 13 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]
ஆனால் செல்வா அந்த பயனருக்கு நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.. கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரையை சேர்க்க வேண்டாம் என்று... ஆனால் அவர் அதற்குப்பிறகும் 5 கட்டுரைகளை சேர்த்தார்.. அதன் பிறகே தேனி.எம்.சுப்பிரமணி அவரை தடை செய்தார் :)...--shanmugam (பேச்சு) 02:00, 13 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

விக்கிப்பீடியா:பயனர் கணக்குத் தடை கொள்கை பார்த்து தேவையான மேம்பாடுகளைச் செய்யலாம். நன்றி--இரவி (பேச்சு) 05:10, 13 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி[தொகு]

சுப்பிரமணி, தங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். இந்த வேளையில், தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஊடகங்களில் விழிப்புணர்வு கூட்டுவது தொடர்பான ஒரு செயல்திட்டத்தை முன்னெடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். கடந்த ஆண்டு விக்கிப்பீடியாவுக்கு நன்கொடை வழங்கியதில் இந்தியா முன்னணி இடம் வகித்தது. இச்செய்தியைப் பல ஆங்கில ஊடகங்கள் கவனித்து வெளியிட்டன. இது போல, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டும் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து உலகளாவிய விக்கிமீடியா நிறுவனம் தொடர்பான செய்திகளைத் தமிழாக்கி அளித்து வரலாம் என நினைக்கிறேன். பார்க்க: http://wiki.wikimedia.in/Announcements/Formation_of_Communications,_PR_%26_Media_Relations_Team --இரவி (பேச்சு) 10:04, 14 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

மிக்க நன்றி![தொகு]

நன்றி
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! Anton (பேச்சு) 06:01, 31 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]தாங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உண்மையில் வெற்றிபெற்றது நீவீர்தான். முனைப்பாக செயல்பட்டு ஊடப்போட்டியை வெற்றிகரமாக முடித்துள்ளீர்கள். இப்படியான போட்டியை முன்னெடுத்து சென்று மதிப்புள்ள பல படங்களை கொணர்ந்ததற்கு உங்களுக்கும், ஊடகப் போட்டிக் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் பல. உண்மையில் இது ஒரு நல்ல தொடக்கம். தமிழகம் குறித்த அனைத்து கட்டுரைகளும் இனி புகைப்படம் தாங்கி சிறப்பிக்கும் என்று எதிர்பார்கிறேன். நன்றிகள் தேனியாருக்கு. --எஸ்ஸார் (பேச்சு) 15:37, 31 மார்ச் 2012 (UTC)Reply[பதில் அளி]

அன்பர் சுப்பிரமணி அவர்களே,

தாங்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் கணினியியல் விருது பெற்றமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

--விக்கியில்பாபுவெல்க தமிழ்! 13:03, 10 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]

மிகவும் இனிய செய்தி. நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !!--மணியன் (பேச்சு) 14:04, 10 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]
அருமையான செய்தி, பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.  :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 17:03, 10 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]

மதுரையில் தமிழ் விக்கி பட்டறை?[தொகு]

மதுரை காமராஜர் பல்கலையில் மலையாள விக்கி நண்பர்கள் நடத்திய பட்டறையை தவிர வேறு ஏதும் நடைபெற்றுள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. மதுரையில் கல்லூரிகளின் எண்ணிக்கை ஓரளவு கணிசமாக உள்ளது. சென்னை, கோவையை தவிர மதுரையிலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பட்டறைகள் நடத்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. கருமாத்தூர் அருளனந்தர் கல்லூரியில் தமிழ் பேராசிரியர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டேன். அவர் வேண்டிய உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். முதலில் அங்கு ஒரு பட்டறை நடத்தி அதன் பின் கற்றுக்கொள்ளும் படங்களை வைத்து இன்னும் சில கல்லூரிகளில் முயற்சி செய்யலாம். உங்கள் உதவியும் கருத்தும் தேவை. --எஸ்ஸார் (பேச்சு) 15:03, 10 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:59, 11 ஏப்ரல் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டதுReply[பதில் அளி]

இணைப்பு தேவை[தொகு]

நீங்கள் முதல்வரிடம் பெற்ற பரிசுக்கான இணைப்பு ஏதும் இருந்தால் தெரிவிக்கவும். புகைப்படம் இருந்தாலும் தரவேற்றவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:33, 14 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]

வாழ்த்துக்கள்.......[தொகு]

தமிழக அரசின் விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.னிறைய எழுதுங்கள்.--Chandrasekarankavin (பேச்சு) 17:03, 23 ஏப்ரல் 2012 (UTC)Reply[பதில் அளி]

ஐயம்[தொகு]

வணக்கம் ஐயா,

எனக்கு ஒரு ஐயம், ஆங்கில விக்கி இல் உள்ளதைப்போல, முகப்பு பக்கத்தில் சிறப்பு கட்டுரை, மற்றும் உங்களுக்குத் தெரியுமா?,சிறப்புப் படம் ஆகியவை தினம் தோறும் புதியதாக இடம் செய்ய முடியாதா? கார்த்தி கரூர். karthim02

நாள்தோறும் இற்றைப்படுத்த தேவையான செறிவான கட்டுரைகளும் இற்றைப்படுத்துவதற்கான ஆள் பலமும் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை என்பதே காரணம்--இரவி (பேச்சு) 07:23, 10 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி ஐயா, தாங்கள் அடிக்கடி விக்கி இல் இணைந்துள்ள பயனர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தால் அவர்கள் ( நான் கூட) போதுமே!, செய்து விடலாமே.. கார்த்தி, karthim02

கார்த்தி, விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பக்கத்தில் விவரங்கள் தரப்பட்டுள்ளன. அங்குள்ள பரிந்துரைப்புப் பக்கங்களில் உங்கள் பரிந்துரைகளைச் சேர்த்து, அவற்றைச் செம்மைப்படுத்தவும் உதவுங்கள். போதிய தகுதியான பரிந்துரைகள் இருந்தால் நாள்தோறும் தானியக்கமாகவே இற்றைப்படுத்துவது சாத்தியமே. ஒவ்வொரு நாளும் இடம்பெறும் "இன்றைய நாளில்" பகுதி தானியக்கமாகவே மாற்றப்படுகிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், ஒவ்வொரு முதற்பக்கக் கட்டுரையை உருவாக்கவும் பல மணி நேர கூட்டுழைப்பு தேவைப்படுகிறது. ஆனால், முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தினாலும் ஒவ்வொரு நாளும் அதற்குக் கிடைக்கும் பக்கப் பார்வைகளோ மிகச் சொற்பமே. எனவே, கட்டுரை ஓரளவாவது பரவலான பார்வையைப் பெற்றிட கூடுதல் நாட்களுக்குக் காட்சிப்படுத்துவது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நன்றி--இரவி (பேச்சு) 08:42, 13 மே 2012 (UTC)Reply[பதில் அளி]
அதிகம் பார்வைகள் கிட்டவேண்டும் என்ற நோக்கம் சரி. ஆனால், ஒரு நாள் வந்தவர்கள் மறுநாள், அல்லது சில நாள் கழித்து வரும்போதும் அவர்கள் முன்பே பார்த்து, படித்த கட்டுரை நிலையாக அங்கே காட்சிப் படுத்தப்பட்டிருப்பின் முதல் பக்கத்திற்கு வருபவர்கள் அதை பற்றி எண்ண எண்ணக கூடும் என்பதையும் கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டும். --எஸ்ஸார் (பேச்சு) 13:35, 13 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

கவனிக்க[தொகு]

இப்பக்கத்தை ஒரு முறை பார்த்துத் தெளிவுபடுத்துங்கள். --மதனாகரன் (பேச்சு) 01:37, 13 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

படிமம்:Kalpana.JPG தொடர்பான பிரச்சினை[தொகு]

Image Copyright problem
Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2012 மே 18 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.shanmugam (பேச்சு) 06:51, 18 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

நிர்வாகிகள் பட்டியல்[தொகு]

நிருவாகிகள் பட்டியலில் மாற்றங்கள் செய்துள்ளேன். தற்போது 23 நிருவாகிகளே உள்ளனர். கிஷோர், வினோத், ஸ்ரீநிவாசன் ஆகியோருடைய நிருவாக அணுக்கம் மீளப்பெறப்பட்டுள்ளது. கலையரசியினுடைய பயனர் பக்க இணைப்பும் தவறாக இருந்தது. சரிசெய்துள்ளேன். ஓராண்டு என்று வருவதே பொருத்தமாக இருக்கும். இப்பக்கத்தில் நிருவாகிகளின் பட்டியலைக் காணலாம். --மதனாகரன் (பேச்சு) 11:21, 20 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

உதவி தேவை[தொகு]

வணக்கம் ஐயா, நான் நமது விகில், முதற்பக்க சிறப்பு படம் உருவாக்கலாம் என்று நினைத்தேன். அதன்படி விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/[மாதம் தேதி, ஆண்டு] என்ற இடத்தில மாதம், ஆண்டு கொடுத்தேன். ஆனால் பழுதுள்ள தலைப்பு என்று காட்டுகிறது. உதவ முடிமா?- கார்த்தி கரூர்.(பேச்சு)

அன்புடையீர், விக்கிப்பீடியாவின் முதற்பக்க சிறப்புப் படத்தை நிர்வாகிகள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே சேர்க்க முடியும். தாங்கள் முதற்பக்க சிறப்புப் படமாக்க விரும்பும் படத்தை விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் எனும் பக்கத்தில் படம் மற்றும் அதற்கான முக்கியக் குறிப்புகளுடன் பரிந்துரை செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:54, 20 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

தங்கள் உடனடி பதிலுக்கு நன்றி ஐயா, கார்த்தி கரூர்.

குறித்தகால நீக்கல்[தொகு]

குறித்தகால நீக்கல் வார்ப்புருவில் இன்றைய தேதியை (21 மே 2012 எனச்) சேருங்கள். CURRENTDAY போன்ற வார்ப்புருக்களைச் சேர்க்கும் போது தினமும் நாள் மாறிக் கொண்டிருக்கும்.--Kanags \உரையாடுக 11:07, 21 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி கனக்ஸ். இனி அப்படியே செய்திடுவோம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:22, 21 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி[தொகு]

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:17, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி.--சண்முகம் (பேச்சு) 11:33, 26 மே 2012 (UTC) நிர்வாகித் தேர்வில் ஆதரித்தமைக்கும், தங்கள் கருத்தை பதிவுசெய்தமைக்கும் நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:17, 30 மே 2012 (UTC)Reply[பதில் அளி]

சிங்கிக்குளம்[தொகு]

சிங்கிக்குளம் பக்கத்தினை அழிக்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:38, 7 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

இந்த வழிமாற்று இருக்கலாம். எச்சிக்கலும் இல்லை. --மதனாகரன் (பேச்சு) 12:03, 7 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊரின் பெயர் சிங்கிகுளம் என்பதுதான் சரி. சிங்கிக்குளம் என்கிற வழிமாற்று தேவையில்லை. தினேஷ்குமார் பொன்னுசாமி வேண்டுகோள்படி சிங்கிக்குளம் நீக்கப்பட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:05, 7 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]
நன்றி தேனி.எம்.சுப்பிரமணி -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:28, 7 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

ஆங்கிலப் பெயர்[தொகு]

வேற்று மொழிப் பெயர்களைத் தமிழில் எழுதும் போது அதன் மூல மொழிப் பெயரையும், அதன் ஆங்கிலப் பெயரையும் தமிழ் விக்கியில் கொடுப்பது கட்டாயமான நடைமுறை. அதற்கேற்பவே தயானந்த ஆங்கிலோ - வேதப் பொதுப் பள்ளி கட்டுரையில் அதன் ஆங்கில மூலப் பெயரையும் முதல் வரிகளில் தந்துள்ளேன். அதனை நீக்குவது முறையில்லை.--Kanags \உரையாடுக 09:27, 30 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

இக்கட்டுரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களிலும் இடம் பெற்றுள்ளது. மேலும், அதற்கான இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இடது புறம் இரு மொழிகளிலும் கட்டுரைக்கான மொழியின் பெயர் இடம் பெற்றுள்ளதால் கட்டுரையில் ஆங்கிலப் பெயர்கள் தேவையில்லை என நினைத்தேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:17, 30 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

translatewiki[தொகு]

இந்த செய்தி தமிழ் விக்கி மட்டுமல்லாமல் மற்ற தளங்களுக்கும் (மீடியாவிக்கி மென்பொருள் பயன்படுத்தும் அனைத்து தளங்களுக்கும்) பொதுவானது. விக்கி செய்தி ,meta போன்ற அனைத்து தளங்களிலும் தமிழ் விக்கிப்பீடியா என உள்ளது. எனவே அதை பழைய நிலைமைக்கு மீளமைத்துள்ளேன். மேலும் இங்கு மாற்றங்கள் நடந்துள்ளமையால் நீங்கள் செய்த மாற்றம் இற்றையாகவில்லை என நினைக்கிறேன். ஆனால் மற்ற தளங்களில் மாறிவிட்டது :). மாற்றங்களை இங்கு செய்து கொள்ளுங்கள். அல்லது பொதுவாக செய்ய வேண்டும் எனில் (தமிழ் விக்கி என குறிப்பிடாமால்)அங்கேயே செய்யலாம் --சண்முகம்ப7 (பேச்சு) 15:48, 6 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி. தமிழ் விக்கியிலேயே செய்யப்பட்டு விட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:37, 6 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

சிறப்பு: பிற மொழி இணைப்பற்ற பக்கங்கள்[தொகு]

இது தானாக இற்றைப்படுத்தப்படுமா? நீங்கள் செய்வீர்களா? சில பக்கங்களுக்கு பிற விக்கி இணைப்பு கொடுத்துவிட்டு, இப்பக்கத்தை மறுநினைவேற்றம் செய்தேன். அப்படியே தான் உள்ளது. தயவு செய்து இற்றைப்படுத்தவும். மறுமொழியிடவும் நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:42, 15 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

அது தானியங்கியாக இற்றைப்படுத்தப்படும். ஓரிரு நாட்கள் எடுக்கும். சிலவேளை ஒரு வாரமும் எடுக்கலாம்.--Kanags \உரையாடுக 07:46, 15 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

ஆங்கில மொழிபெயர்ப்பு[தொகு]

ஆழ்மனப்பதிவறிவு[1] என்பதற்கான ஆங்கில சொற்கள் என்ன? தெரிந்தால் இதை அப்பக்கத்துடன் இணைத்துவிடவும். நன்றி--தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:07, 15 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

தகவல் தேவை....[தொகு]

வணக்கம், தேனியாரே!
உங்களின் 'தமிழ் விக்கிபீடியா குறித்த நூலினை' சென்னையில் உடனடியாக பெற விரும்புகிறேன். எந்தக் கடையில் கிடைக்கும் என சொல்ல முடியுமா? நண்பர்களுக்கு படிக்கக் குடுத்து பரப்புரை செய்ய எண்ணம்.
('அவ்வையார் வழிபாடு' கட்டுரையை சீரிய முறையில் விரிவாக்கம் செய்தமைக்கு என்னுடைய நன்றி!) நேசத்துடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:00, 22 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

தமிழ் விக்கிப்பீடியா நூல் அச்சிட்ட பிரதிகள் அனைத்தும் தீர்ந்து போய் விட்டதாகப் பதிப்பகத்தார் தெரிவிக்கின்றனர். மெய்யப்பன் பதிப்பகத்தின் தலைமை அலுவலகமான மணிவாசகர் நூலகம், சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108 முகவரியில் ஒன்றிரண்டு பிரதிகள் கிடைக்கலாம். பதிப்பகத் தொலைபேசி எண் 044 -25380396 வழியாகத் தொடர்பு கொண்டு பாருங்கள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 22 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]
நூல் தீர்ந்து போனது மகிழ்ச்சியான விசயம். அடுத்த சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு அடுத்த பதிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாமா? ஆங்கில நூல்களில் திருத்திய மற்றும் விரிவாக்கிய பதிப்பு என்று வருவது போல் தமிழ் பதிப்புத் துறையில் செய்ய இயலுமா?--இரவி (பேச்சு) 05:37, 27 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நூலகங்களுக்குப் புதிதாக நூல்கள் எதையும் வாங்காமல் இருப்பதால், பதிப்பகங்கள் அச்சிடும் நூல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றன. பெரிய பதிப்பகங்கள் கூட 300 முதல் 500 பிரதிகள் மட்டுமே அச்சிடுவதாகத் தெரிகிறது. (இவர்கள் 1000க்கு மேல் அச்சிட்டிருப்பதாகச் சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை) அது விற்பனையாகி விட்டால் அடுத்த பதிப்புகளில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ்நாடு அரசு நூலகங்களுக்குத் தேவையான நூல்களை வாங்க அனுமதித்தால் இந்நூல் அதிகப் பிரதிகள் அச்சிடக் கூடும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:56, 27 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]
இன்று தான் இம்மறுமொழியைக் கண்டேன். தாமதமான பதிலுக்குப் பொறுக்கவும். தமிழகத்தின் பதிப்பக / நூலகச் சூழல் கவலை அளிக்கிறது. இதனாலேயே பல அருமையான நூல்கள் மறுபதிப்பு காணாமல் முடங்கி உள்ளன. தரமான பல நூல்களைப் பதிப்பிக்கத் தயங்கும் போக்கும் இருக்கிறது. விரைவில் உங்கள் நூல் மறுபதிப்பு காண வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்--இரவி (பேச்சு) 06:54, 4 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

தொடுப்பிணைப்பி[தொகு]

உங்கள் தொடுப்பிணைப்பி இங்கு சுட்டியவாறு வருகிறதா? --இரவி (பேச்சு) 05:37, 27 சூலை 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம், சேலம், செப்டம்பர் 11, 2012 சிறப்புற வாழ்த்து விடுத்தமைக்கு நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:03, 9 செப்டெம்பர் 2012 (UTC)

பொன்னியின் செல்வன்[தொகு]

வணக்கம். பொன்னியின் செல்வன் புதினத்தின் கதை மாந்தர்களுக்கென தனிப்பகுப்பு உருவாக்கியது குறித்து மகிழ்ச்சி. அக்கதை மாந்தர்களின் தனிக் கட்டுரைகளின் பகுப்புகளில் கதை மாந்தர் என்ற தாய்ப்பகுப்பினை மட்டும் நீக்கலாம், ஆனால் பொன்னியின் செல்வன் என்பது கட்டுரைக்குச் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பகுப்பு என்பதால் அதனை நீக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp (பேச்சு) 03:24, 3 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]

Booradleyp, வணக்கம். பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் அனைவரையும் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் பகுப்பில் சேர்த்துவிட்டு, பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் பகுப்பை பொன்னியின் செல்வன் பகுப்பிலும் சேர்த்துள்ளேன். மேலும் ஒவ்வொரு கட்டுரையிலும் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களுக்கான வார்ப்புரு இடம் பெற்றுள்ளது. எனவே பொன்னியின் செல்வன் பகுப்பு தேவையில்லை என கருதுகிறேன். தேவையற்ற பகுப்புகள் பார்வையாளர்களுக்கு குழப்பத்தை விளைவிக்கலாம். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:40, 3 அக்டோபர் 2012 (UTC)Reply[பதில் அளி]