பயனர் பேச்சு:Aathavan jaffna/தொகுப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Aathavan jaffna, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:04, 18 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Aathavan jaffna/தொகுப்பு!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 06:48, 24 மார்ச் 2013 (UTC)

பெயர் மாற்றம்[தொகு]

விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை பக்கத்தின் இறுதியில் உங்கள் வேண்டுகோளை முன்வையுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 06:04, 25 மார்ச் 2013 (UTC)

பதக்கத்துக்கு நன்றி[தொகு]

வணக்கம், ஆதவன். நீங்கள் தந்த பதக்கம் மிகவும் உற்சாகமூட்டுகிறது. எவ்வாறு புதுப்பயனர்களின் பங்களிப்புகளை ஈர்க்கலாம், கூட்டலாம் என்பதே எனது அண்மைக்கால விக்கி ஈடுபாடாக இருக்கிறது. எனவே, இது தொடர்பாக உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:58, 29 மார்ச் 2013 (UTC)

பதிப்புரிமை[தொகு]

வணக்கம் ஆதவன், பொதுவாக பதிப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அந்த வகையில், அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம் பற்றிய படிமம் நீக்கப்பட்டுள்ளது. கட்டுரையும் விக்கி நடைப்படி மாற்றி அமைத்துள்ளேன். மூலக் கட்டுரையை மேற்கோள் காட்டி விக்கி நடையில் கட்டுரைகள் எழுதினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். முழுவதுமே மூலக் கட்டுரையைப் படி எடுத்து எழுதுவது உடனடியாகவே நீக்கப்படும் அபாயம் உள்ளது. புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 22:15, 31 மார்ச் 2013 (UTC)

சரத்சந்திரர் கட்டுரைக்கு நீங்கள் தரவேற்றிய படிமம் நீக்கப்பட்டுள்ளது. விக்கி பொதுவில் அவரது படிமம் ஒன்றுள்ளதால் நீங்கள் தரவேற்றியதை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:01, 31 மார்ச் 2013 (UTC)

ஆலோசனை[தொகு]

வணக்கம், இலங்கை பற்றிய கட்டுரைகள் எழுதிவருவது கண்டு மகிழ்ச்சி. கட்டுரைகளை சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுவதால் இவ்வாறு உசாத்துணை சேர்ப்பது முறை. இல்லாவிட்டால், கேள்விக்குட்படுத்தவோ அல்லது நீக்கப்படவோ வாய்ப்புள்ளது. எனவே, கட்டுரைகளில் முடிந்தளவு உசாத்துணைகளைச் சேர்த்துவிடுங்கள்.

மேலும், கண்டி இராச்சிய மன்னர், கண்டியின் பூகோள அமைப்பு ஆகிய கட்டுரைகளை கண்டி இராச்சியம் கட்டுரையில் உசாத்துணையுடன் சேர்ப்பது பொருத்தம் என நினைக்கிறேன். நாற்று மேடை நுட்பங்கள் என்ற கட்டுரையும் அவ்வாறே. --Anton (பேச்சு) 12:12, 4 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி,அன்டன்,நீங்கள் கூறுவது விளங்கவில்லை.உசாத்துணை,மேற்கோள் என்றால் என்ன என்று விரிவாக கூறவும்.நன்றி.--Aathavan jaffna (பேச்சு) 14:05, 4 ஏப்ரல் 2013 (UTC)--நி.ஆதவன் 08:35, 8 ஏப்ரல் 2013 (UTC)

மற்றும் நான் ஆரம்பித்த கட்டுரைகள் நான் படிக்க தேவைப்படும் என விக்கியில் தேடிப்பார்த்தேன்.கிடைக்கவில்லை.ஆதலால் நான் படித்த சில விடயங்களையே எழுதியுள்ளேன். பிழைகளை திருத்தியுதவவும்.--Aathavan jaffna (பேச்சு) 14:05, 4 ஏப்ரல் 2013 (UTC)

ஆதவன், நீங்கள் உருவாக்கிய இரண்டு குறுங்கட்டுரைகளும் கண்டி இராச்சியம் என்ற தாய்க்கட்டுரையில் சேர்க்கப்படக் கூடியவை. ஒன்றிரண்டு வரிகளுக்காகப் புதிய கட்டுரைகள் உருவாக்கத் தேவையில்லை. இப்போதுள்ள கண்டி இராச்சியம் கட்டுரையிலும் அதிகத் தகவல்கள் இல்லை. கண்டி இராச்சியம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அக்கட்டுரையிலேயே எழுதுங்கள். உங்கள் தகவல்களை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதைக் கட்டுரையிலேயே தரவேண்டும். இதனையே உசாத்துணை அல்லது மேற்கோள் எனக் கூறுவோம். நூல் ஒன்றில் இருந்து எடுத்திருந்தால், நூலாசிரியர், நூலின் பெயர், வெளியீடு போன்ற விபரங்கள், இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் இணைய முகவரி, தலைப்பு போன்ற விபரங்களும் மேற்கோளில் சுட்ட வேண்டும். உதவிக்கு விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:28, 4 ஏப்ரல் 2013 (UTC)
எ-கா: தமிழ் கட்டுரையில் 1997ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ் என்பதற்கு சான்று சேர்க்கப்பட்டுள்ளதைப்போன்று முக்கிய தகவல்களுக்கு சான்று அல்லது உசாத்துணை தரப்பட வேண்டும். --Anton (பேச்சு) 00:48, 5 ஏப்ரல் 2013 (UTC)

வட்டு எறிதல் தலைப்பு மாற்றம்[தொகு]

ஆதவன், நீங்கள் வட்டு எறிதல் கட்டுரையில் தலைப்பை மாற்றக் கோரியுள்ளீர்கள். விளக்கத்தை அதன் உரையாடல் பகுதியில் தர வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 02:12, 7 ஏப்ரல் 2013 (UTC)

இன்னும் ஒரு மாணவப் பயனர்[தொகு]

வணக்கம் ஆதவன், உங்கள் பயனர் பக்கத்தை இப்போது தான் பார்க்கக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து இன்னும் ஒரு இளம் மாணவரை விக்கியில் காண்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களைப் போன்ற இளையோர்களின் பங்களிப்பில் விக்கி இன்னும் பல முன்னேற்றங்களைக் காணும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பாடசாலை பற்றிய விபரங்களையும் தாருங்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 09:58, 10 ஏப்ரல் 2013 (UTC)
மிக்க நன்றி கனக்ஸ்,நான் யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன்.--aathavan jaffna (பேச்சு) 01:05, 11 ஏப்ரல் 2013 (UTC)


ஆதவன், இள வயதில் உங்கள் எழுத்துத்திறன் சிறப்பாக உள்ளது. விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் என்ற பக்கத்தைத் தொடங்குவது நல்ல எண்ணம். சில எடுத்துக்காட்டுக்கள் (en:Wikipedia:Assignments for student editors) ஆங்கில விக்கியில் உள்ளன. --Natkeeran (பேச்சு) 00:40, 11 ஏப்ரல் 2013 (UTC)
உருவாக்கி விட்டால் நன்றாக இருக்கும்--aathavan jaffna (பேச்சு) 01:05, 11 ஏப்ரல் 2013 (UTC)
  1. வழிமாற்று குறித்த பக்கம்

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ஆதவன், வணக்கம்! தங்களின் பாடசாலைக் கல்வி பாதிக்காதவகையில், தங்களின் பங்களிப்பினை இங்கு தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 11 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


நன்றி செல்வகுருனாதன் அவர்களே. மிக அழகான பதக்கத்தை எனக்கு தந்து உற்சாக மூட்டியதற்கு மிக்க நன்றி.:) --aathavan jaffna (பேச்சு) 06:09, 11 ஏப்ரல் 2013 (UTC)

சில பரிந்துரைகள்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் சிறந்த முறையில் கட்டுரைகளை எழுதிடவும் / விரிவுபடுத்தவும் உங்கள் முன் நான் வைக்கும் சில பரிந்துரைகள்:

  1. நீங்கள் ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரைகளில் மேலும் உள்ளடக்கங்களைச் சேர்த்து தங்களால் முடிந்த அளவிற்கு அக்கட்டுரைகளை முழுமையாக்குங்கள்; அதன்பிறகு புதிய கட்டுரைகளை எழுத ஆரம்பிக்கவும்.
  2. தங்களின் கட்டுரைகளில் பிற பயனர்கள் செய்யும் முன்னேற்றங்களைக் கவனியுங்கள். இதன் மூலம் நீங்கள் கற்று, புதிய கட்டுரைகளை சிறப்பாக படைக்க இயலும்.
  3. கட்டுரையை எழுதிவிட்டு ஒருமுறை முழுமையாக படித்துப் பாருங்கள். எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் இருப்பின் உடனடியாக திருத்தவும்.

வாழ்த்துகள், நன்றி! -அன்புடன்,--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:39, 11 ஏப்ரல் 2013 (UTC)

தங்கள் அறிவுரைக்கு இணங்க நான் உருவாக்கிய கட்டுரைகளை முடிந்தளவு முழுமையாக்குவேன். சில வார்ப்புருக்களை சேர்க்க உதவுங்கள். நன்றி.--aathavan jaffna (பேச்சு) 07:13, 11 ஏப்ரல் 2013 (UTC) முடிந்தளவு எனது கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன்.மேலும் தவறுகள் இருந்தால் அருள்கூர்ந்து கூரியுதவவும்.நன்றி--aathavan jaffna (பேச்சு) 07:13, 11 ஏப்ரல் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த யோசனைக்கான பதக்கம்
விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் பக்கத்தை உருவாக்கியமைக்காக மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். பள்ளி மாணவர்கள் எவற்றைத் தேடுவார்கள், அவர்கள் தேடும் கட்டுரையில் எளிய நடை, பள்ளி மாணவர்கள் எழுதக் கூடிய கட்டுரைகள், ஊக்கப்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றையும் யோசித்து மேம்படுத்துமாறு வேண்டுகிறேன். ஆங்கில விக்கியில் இத்தகைய பக்கங்கள் நிறைய உள்ளன. மேம்படுத்த வாழ்த்தும் வேண்டுதலும். :) தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:01, 11 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


தமிழ்க்குரிசில் அவர்களே, உங்கள் பதக்கத்திற்கு மிக்க நன்றி.இது எனக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது.நன்றி--aathavan jaffna (பேச்சு) 15:36, 11 ஏப்ரல் 2013 (UTC)

ஒரே கட்டுரைகள், பெயர்[தொகு]

கட்டுரைகள் எழுத தொடங்கு முன் ஆங்கில விக்கியிலிருந்து தமிழுக்கு இணைப்பு உள்ளதா எனவும், வேறு பெயர்களில் தமிழ் விக்கியில் தேடிவிட்டுத் தொடங்குவது கட்டுரை நீக்கப்படவோ அல்லது உழைப்பு விரையமாவதையோ தடுக்கலாம். எ.கா: டொர்னாடோ => சுழல் காற்று, மின் உயர்த்தி => உயர்த்தி. மேலும் தமிழில் தலைப்புக்கள் (ஒரு சில சந்தர்ப்பம் தவிர) அமைப்பது சிறப்பானது. தலைப்பு குறித்த சந்தேகம் இருப்பின் ஒத்தாசைப் பக்கத்தில் உரையாடுங்கள். முனைப்பான உங்கள் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள். --Anton (பேச்சு) 02:38, 12 ஏப்ரல் 2013 (UTC)

உங்களின் கவனத்திற்கு...[தொகு]

பகுப்பு:இசை மும்மூர்த்திகள் எனும் பகுப்பில் நீங்கள் உரையினை சேர்த்துள்ளீர்கள். இவ்விதம் செய்யவேண்டாம். (தற்போது நான் சரிசெய்துள்ளேன்) பகுப்பில் கட்டுரைத் தலைப்புக்கள் மட்டுமே இருக்கவேண்டும்; இதுவும் தானாக சேர்க்கப்படும் என்பது நீங்கள் அறிந்ததே. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:15, 14 ஏப்ரல் 2013 (UTC)

படிமங்களுக்குப் பெயர் வைத்தல்[தொகு]

நீங்கள் தரவேற்றும் படிமங்களுக்கு முறையான தலைப்பை ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வையுங்கள். படிமம்:DSC01944.JPG என்ற படிமத்திற்கு உதாரணமாக அளவெட்டி_வெளிவயல்_முத்துமாரி.jpg அல்லது Alaveddy_Velivayal_ Muthumari.jpg எனப் பெயர் வைக்கலாம். இவ்வாறான படிமங்களை பொதுவில் தரவேற்றுவது நல்லது. அனைத்து விக்கி மொழிகளிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.--Kanags \உரையாடுக 21:09, 14 ஏப்ரல் 2013 (UTC)

ஆதவனும் மாதவனும்[தொகு]

ஆதவனும் மாதவனும் அண்ணன் தம்பியோ? ஆம் எனில், இவ்வாறு குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களிப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 16:03, 18 ஏப்ரல் 2013 (UTC)

இரண்டு பேரும் வரலாற்றில் ஆர்வம் காட்டுவது மேDலும் மகிழ்ச்சி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:02, 27 ஏப்ரல் 2013 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:34, 27 ஏப்ரல் 2013 (UTC)

மிகவும் பிடிக்காத பாடம் என்பதால் அதிக அக்கறையோ எனக்கு என்று எனக்கே தெரியவில்லை.ஆனால் எழுதிய வரலாற்றுக் கட்டுரைகளால் சில நன்மைகளும் இருந்ததாக உணர்ந்தேன்.அதனால்தான்.இதனால் பரீட்சையில் வரலாற்றுக்கு அதிக புள்ளிகள் எடுத்ததால் இன்னும் சில கட்டுரைகளையும் எழுதும் திட்டம் (plan). :D  ;) --ஆதவன் (பேச்சு) 13:54, 29 ஏப்ரல் 2013 (UTC)

நீங்கள் முகநுoலில் எனக்கு அஞ்சல் இட்டிருந்தீர்கள். அதன்பிறகு பதிலையே காணவில்லையே. வேறு யாருக்காவது அனுப்பியது எனக்கு வந்துவிட்டதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:19, 29 ஏப்ரல் 2013 (UTC)

இல்லை உங்களுக்கே அனுபினேன்--ஆதவன் (பேச்சு) 13:26, 30 ஏப்ரல் 2013 (UTC)

//இதனால் பரீட்சையில் வரலாற்றுக்கு அதிக புள்ளிகள் எடுத்ததால் இன்னும் சில கட்டுரைகளையும் எழுதும் திட்டம்//

மிக்க மகிழ்ச்சி. இது பற்றி இன்னும் விளக்கமாக கூற முடியுமா? விக்கிப்பீடியா எப்படிப் பயன்படுகிறது எனவும் மேலும் பல மாணவப் பயனர்களை ஈர்க்கவும் உதவவும். --இரவி (பேச்சு) 15:23, 19 மே 2013 (UTC)[பதிலளி]

புதிய வரியில் பதிலளிக்கவும்[தொகு]

சூரியனே, நீங்கள் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதை ஒட்டியே பதில் அளிக்கிறீர்கள். ஒரு வரி இடைவெளி விட்டு பதிலளிக்கவும். : குறியை பயன்படுத்தினால் சரியாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:09, 5 மே 2013 (UTC)[பதிலளி]

சரி,மிக்க நன்றி--ஆதவன் (பேச்சு) 13:46, 5 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் சைவம்[தொகு]

தாங்கள் மிக ஆர்வத்தோடு விக்கித்தி்ட்டம் சைவத்தில் இணைந்திருப்பதைக் கண்டேன். அதற்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்கு நேரமிருப்பின் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியலை கண்டு, உங்களால் இயன்ற கட்டுரைகளை உருவாக்கி தர வேண்டுகிறேன். அல்லது ஏற்கனவே உள்ள சைவக் கட்டுரைகளை மேம்படுத்தி தர இயலுமென்றால் அதனையும் செய்யலாம். அத்துடன் விக்கித்திட்டம் சைவம் மேலும் வளர்ச்சியடைய தங்களுடைய ஆலோசனைகளை எனது பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம். தங்களின் ஒவ்வொரு பங்களிப்பும் சைவத்தினையும் தமிழினையும் தவறாது வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. மிக்க நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:58, 6 மே 2013 (UTC)[பதிலளி]

செய்தி[தொகு]

தங்களுடைய திருவிளையாடல் புராணம் பற்றிய கேள்விக்கு எனது உரையாடல் பக்கத்தில் விரிவான விளக்கம் உள்ளது நண்பரே. தாங்கள் தமிழுக்கு திருவிளையாடலை தந்திட வாழ்த்துகள் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:23, 6 மே 2013 (UTC)[பதிலளி]

முகத்தல் அளவை[தொகு]

வணக்கம், பேச்சு:முகத்தல் அளவை பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 16:14, 16 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையின் தலைப்பு மாற்றம்[தொகு]

நீங்கள் ஆரம்பித்த இலங்கையின் நீர் வளம் கட்டுரையை இலங்கையின் கடல் வளம் என்ற தலைப்புக்கு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளேன். இது தொடர்பாக பேச்சுப் பக்கத்தில் விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன். பொதுவாக இலங்கையின் நீர் வளம் என்ற புதிய கட்டுரையை எழுதுவதற்கு வசதியாக வழிமாற்றின்றியே கட்டுரைத் தலைப்பை நகர்த்தியுள்ளேன். புதிய கட்டுரை எழுதப்படும்போது, இலங்கையின் கடல் வளம் பற்றியும் அங்கே குறிப்பிட்டு, இந்தக் கட்டுரையை முதன்மைக் கட்டுரையாக அங்கே கொடுக்கலாம். வழிமாற்றின்றி நகர்த்தியதால், உங்கள் பயனர் பக்கத்திலுள்ள நீங்கள் தொடங்கிய கட்டுரைகள் பட்டியலில், அந்தக் கட்டுரை இணைப்பு சிவப்பாக உள்ளது. எனவே அதனையும் மாற்றி விடுகின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 10:24, 18 மே 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி கலையரசி அவர்களே.ஏற்கனவே நான் இதைக்கண்டதால் நகர்த்தக் கொரியிருந்தேன்.நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி --ஆதவன் (பேச்சு) 13:41, 18 மே 2013 (UTC)[பதிலளி]

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Aathavan jaffna/தொகுப்பு!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:10, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

விக்கிப்புயல் பதக்கம்
ஆதவன், சூன் மாதம் பாதி முடிந்த நிலையில் கட்டுரைப் போட்டியில் சீறிப் பாய்ந்துச் செல்வதைக் கண்டு மகிழ்ந்து இந்தப் பதக்கத்தை அளிக்கிறேன். இலங்கையில் உள்ள பள்ளிகளில் கட்டுரைப் போட்டி நடத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தப் போட்டியைப் பற்றியும் உங்கள் உறவினர், நண்பர்களுக்கு எடுத்துச் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இரவி (பேச்சு) 17:55, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நிச்சயம் ரவி.என்னொரு புயல்.என் சக மாணவன் பிரபன்.பார்க்கவும் பயனர்:wolvorine piraban([[1]]) --ஆதவன் (பேச்சு) 02:31, 16 சூன் 2013 (UTC)[பதிலளி]
வோல்வரின் என்ற பெயருடன் ஒருவர் நேரடியாக கட்டுரைப் போட்டியில் குதித்த போதே நினைத்தேன் :) மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி. --இரவி (பேச்சு) 12:55, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் உண்மையிலேயே குட்டிப்புலி பதினாறடி வேகமாகத்தான் பாய்கிறது.;) தங்களின் பங்களிப்பு தொடர எனது வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18
22, 15 சூன் 2013 (UTC)
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 00:13, 16 சூன் 2013 (UTC)[பதிலளி]
ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.புத்துணர்ச்சி அளிக்கிறது.--ஆதவன் (பேச்சு) 02:31, 16 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 02:32, 16 சூன் 2013 (UTC)[பதிலளி]

பல்வேறு துறைசார் கட்டுரைகளை எப்படி தனி ஆளாக தொகுக்கின்றீ்கள் என்று ஆச்சிரியமாக உள்ளது. கட்டுரைப் போட்டியின் வெற்றி என்பதைத் தாண்டி உங்களது உழைப்பு பாராட்டுக்குறியது. வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:05, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:44, 28 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஒட்டகம் கட்டுரை[தொகு]

ஆதவன், அண்மையில் நீங்கள் ஒட்டகம் கட்டுரையில் வேறு வலைப்பதிவில் இருந்து உரைப்பகுதிகளை அப்படியே சேர்த்திருந்தீர்கள். அவ்வாறு செய்வது விக்கிப்பீடியாவின் காப்புரிமைக் கொள்கைக்கு மாறானது. தவிர, ஒட்டகப்பாலில் இன்சுலின் உள்ளது என்பது போன்ற மிக முக்கிய தகவல்களை வலுவான (நூல், ஆய்விதழ்) சான்றுகளின்றி சேர்க்க முடியாது. சில இடங்களில் ஏற்கனவே வந்த வரிகளை மீண்டும் இணைத்திருந்தீர்கள். அவற்றை ஓரளவு திருத்தியுள்ளேன். அருள்கூர்ந்து தொடர்ந்து அவ்வாறு செய்ய வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 15:36, 18 சூன் 2013 (UTC)[பதிலளி]

சரி சுந்தர்--ஆதவன் (பேச்சு) 15:38, 18 சூன் 2013 (UTC)[பதிலளி]

பாக்டீரியா[தொகு]

பாக்டீரியா பற்றிய விந்தையான தகவல் ஒன்றை பாக்டீரியா கட்டுரையில் வழங்கி உள்ளீர்கள். மிகவும் நன்று. நீங்கள் இணைத்த பின்னர்தான் அவ்வாறு சம்பவம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவந்தது. இவ்வாறான அபூர்வமான தகவல்களை வழங்கியமைக்கு பாராட்டுகள்!

நீங்கள் வழங்கிய தகவல் முதலில் ஒரு செய்தி இணைய தளத்தில் வெளியாகி, பின்னர் பல செய்தித் தளங்களில் பிரதி எடுக்கப்பட்டு வெளியாகி இருக்கின்றது. நீங்களும் அதனை அப்படியே பிரதி செய்து இங்கு சேர்த்துள்ளீர்கள். அக்குறிப்பிட்ட இணைய தளத்தில் வெளிவரும் பல அறிவியல் செய்திகள் சான்றுகள் ஏதும் அற்றவையாக அல்லது திரிபு படுத்தப்பட்டவையாகத் தோன்றுகிறது. இவற்றை விக்கிபீடியாவில் "நம்பகத்தன்மை" உடைய தகவல்களாக இடுதல் நன்றல்ல. எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் உண்மை நிலையை அறிய ஆங்கிலத்தில் கூகிளில் தேடிப்பார்ப்பது மூலம் தகவலின் மூலப் பிரதியை அறியலாம். (இதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் ஏனைய விக்கிப்பீடியர்களிடம் கேட்கலாம்.)

எடுத்துக்காட்டாக,

நீங்கள் இணைத்த செய்தி:[தொகு]

//சுத்தமான 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடிய பக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.அப்போது திரவ தங்கத்தை உருவாக்கக் கூடிய "கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ்” என்ற பக்டீரியாவைக் கண்டுபிடித்தனர்.இந்த பக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர்.ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக(தங்கக் கட்டி) மாறியிருந்தது.//

இவ்வாறான செய்திகளை ஆராய நான் பயன்படுத்தும் முறை:[தொகு]

இங்குள்ள செய்தியில் இருந்து gold, bacteria, make, Michigan, 24 karat எனும் திறவுச் சொற்களை எடுத்துக்கொள்ளலாம். இப்போது அவற்றை இட்டு கூகிளில் தேடும்போது, "http://msutoday.msu.edu/news/2012/gold-loving-bacteria-show-superman-strength/" எனும் செய்தி கிடைக்கின்றது. இதுவே அதனது மூலமாக இருக்கலாம். ஆனால், கிடைத்த அம்மூல செய்தித் தளமும் உண்மையான தகவலை வழங்கும் என்பதை ஆணித்தரமாகக் கூற முடியாது. நான் மேலே குறிப்பிட்ட இணையம் மிச்சிகன் பல்கலைகழகத்தின் இணையம் என்று தெளிவாகின்றது. எனவே தகவல் உண்மையென ஏற்றுக்கொள்ள முடிகின்றது.

செய்தி வெளியிட்ட திகதி முக்கியம்; இங்கு Oct 1, 2012 வெளியிடப்பட்டுள்ளது. இரு வெவ்வேறு இணையதளங்களில் ஒரே மாதிரியான செய்தி உள்ளபோது எது மூலப்பிரதி என்பதைத் தீர்மானிக்க வெளியிட்ட திகதி உதவுகின்றது.

மிகவும் உறுதியான சான்று எனும் போது, அந்த ஆராய்வு வெளியிடப்பட்ட சஞ்சிகை முக்கியமானதாக அமைகின்றது. அக்குறிப்ப்பிட்ட சஞ்சிகை அனைத்துலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இருக்கிறது. இதனை அறிய ஆராய்வில் ஈடுபட்ட பல்கலைக்கழகம், ஆராய்ச்சியாளர் பெயர், ஆராய்வு என்பனவற்றை இட்டுத் தேடுவதன் மூலம் கிடைக்கலாம். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் (அதாவது ஆய்வு இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை எனும் சந்தர்ப்பத்தில்) முதன்மைச் செய்தித் தளத்தை சான்றாகக் கருதலாம். பின்னைய நாட்களில் ஆய்வின் முன்னேற்றமும் பெறுபேறுகளும் மாறுபடுவதைப் பொறுத்து மேலும் சான்றுகள் சேர்க்கலாம்.

சில சந்தர்ப்பங்களில் இவ்வகை ஆய்வுகள் ஏற்கனவே வேறு ஆய்வாளர்களால் தொடக்கி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் வேறு ஆய்வாளர்களால் அவை முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையில் Cupriavidus metallidurans எனும் இந்த பக்டீரியா முன்னர் Ralstonia metallidurans என அழைக்கப்பட்டது. (en:Cupriavidus metallidurans) இதைப் பற்றிய ஆய்வு 2006இல் ஏற்கனவே நடாத்தப்பட்டுள்ளது. (http://www.sciencemag.org/content/313/5784/233.abstract) இந்த பாக்டீரியாவை ஒத்த மற்றொரு பக்டீரியா Delftia acidovarans ஆகும்.

இப்போது தமிழில் வெளியிடப்பட்ட செய்தின் நம்பகத்தன்மையைப் பார்த்தால், ///இந்த பக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர்./// இவ்வசனத்தில் இருந்தே எதோ ஒரு குழப்பம் தெரியவில்லையா? இந்த பக்டீரியா, நீர்ம (திரவ) நிலையில் உள்ள தங்கத்தை (அல்லது தங்கத்தின் பயனற்ற வடிவத்தை = தங்க குளோரைடு) திண்ம நிலைக்கு (நானோ துணிக்கைகளாக) மாற்றுகிறது. இது ஆய்வுகூடத்தில் தங்கக் கட்டியை உருவாக்க தங்கக் கரைசல் தேவை. முதலாவதாகக் குறிப்பிட்ட தகவல், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறாகும்.

உங்கள் இடுகையைத் திருத்தி உள்ளேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்; அதனைத் தீர்க்கத் தெரிந்தால் உதவுகிறேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 20:00, 18 சூன் 2013 (UTC)[பதிலளி]

நன்றி செந்தி.இது எனக்கு மிகவும் உதவும்.--ஆதவன் (பேச்சு) 09:02, 19 சூன் 2013 (UTC)[பதிலளி]