இலங்கையின் கடல் வளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்

இலங்கை, சுமார் 1760 கி. மீ நீளமுடைய கடற்கரையைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 532000 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய கடற்பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இது தவிர 261000 ஹெக்டேயர் பரப்பளவுடைய உள்நாட்டு நீர் நிலைகளையும் கொண்டுள்ளது.

வளங்கள்[தொகு]

இருக்கும் இடத்திற்கும் கடற்கரைக்கும் இடையிலான தூரம், இருக்கும் இடத்தின் ஆழம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் வளங்கள் மூன்று வகைப்படும்.

  1. கரையோர வளங்கள்
  2. தூரக்கடற் பிரதேச வளங்கள்
  3. ஆழ்கடல் வளங்கள்

கரையோர வளங்கள்[தொகு]

கடல் உற்பத்தி பொருட்களில் 95 சதவீதத்திற்கும் கடற்கரையோரப் பிரதேசங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப் படுபவையாகும். இங்கு காணப்படும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கடல் வாழ் உயரினங்களாவன

  • நெத்தலி
  • சாளை மீன்
  • கீரி மீன்
  • பாரை
  • முரல்
  • இறால்
  • சிங்க இறால்
  • கணவாய்
  • சூரை
  • வன்சூரை

கரையோரத்தில் மீன் பிடிக்கப் பயன்படும் பாரம்பரிய மீன்பிடிச் சாதனங்கள்

  • கரை வலை
  • பொக்கணி வலை
  • கைத்தூண்டில்

தூரக்கடற் பிரதேச வளங்கள்[தொகு]

இங்கு மீனவர்கள் 6-7 நாட்கள் வரை தங்கி நின்று தலபத்து, சுறா, கொப்பரா போன்ற மீன்களைப் பிடிக்கின்றனர்.

ஆழ்கடல் வளங்கள்[தொகு]

நீள்தூண்டில் மூலமாக சுறா,சூரை போன்ற மீன்கள் ஆழ்கடலில் பிடிக்கப்படுகின்றன. மீன்களின் ஈரலிலிருந்து எண்ணெயை பெற்றுக்கொள்ள சுறா மீன்கள் அதிகமாக பிடிக்கப்படுகின்றன. கண்டமேடைப் பகுதியில் மீன்பிடித்த மீனவர்களுக்கு பன்னாள் மீன்பிடி காலங்கள் கிடைத்தமையால் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. இக்கலங்களில் அதிக வசதிகள் காணப்படுவதால் நீண்ட நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து அதிக விளைச்சலை பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

கடற்தாவர வளங்கள்[தொகு]

இவை கடலின் மேற்பரப்பில் மிதந்து வாழும் மிகச்சிறிய தாவரங்களாகும். இவற்றை தாவரப் பிளாந்தன்கள் எனவும் அழைப்பர். கடலில் உள்ள உணவு வலைகளில் இவை முதலுற்பத்திகளாக விளங்குகின்றன. கிளமிடோமொனசு டயட்டம் இவ்வகையை சார்ந்தது ஆகும். இவை தவிர பெரிய தாவரங்களாக கருதப்படும் அல்காகளும்,கடற்புற்களும் இங்கு காணப்படும். அவற்றில் சில பின்வருமாறு :

  • பச்சை அல்கா - உல்வா -சலாது வகைகள் தயாரித்தல்
  • கபில அல்கா - சாகசம் - சாய வகைகள் தயாரித்தல்
  • சிவப்பு அல்கா - கிளசிநேரியா - எகார் உற்பத்தி

கடற்சாதாளை[தொகு]

ஆழ்கடலில் காணப்படும் வேர், தண்டு, இலை என நன்கு வியத்தமடைந்த வித்துக்களை உற்பத்தி செய்யும் தாவரங்களே கடற்சாதாளைகள் எனப்படும். ஏனைய தாவரங்களும் விலங்குப் பிளாந்தன்களும் கடற்சாதாளைகளில் ஒட்டி வாழும்.இவ்வாறான கடற்சாதாளைகள் அதிகம் காணப்படுகின்ற பிரதேசங்கள் அதிக உற்பத்திக் கொள்ளளவைக் கொண்டிருப்பதால் கடற்சாதாளைகள் வளர்புப்பற்றி இலங்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் கூட்டமாக வளரும் முருகைக்கற்பாறைகள் மிக அழகாகக் காட்சியளிக்கும். இவை 4 m – 5.5m ஆழமான கடற்கரையை அண்மித்த பிரதேசங்களிலேயே வளர்கின்றன. இலங்கையில் முருகைக்கற்பாறைகள் காணப்படும் இடங்களாவன: மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், காலி, மன்னார்.

களப்பு[தொகு]

தரைப் பிரதேசத்தை நோக்கிக் கடல் நீண்டிருத்தல் களப்பு எனப்படும்.நீர்கொழும்பு,மட்டக்களப்பு,புத்தளம்,புத்தளை,றக்கவை ஆகிய களப்புக்கள் இதற்கான உதாரணங்களாகும்.

ஆற்றுக் கழிமுகம்[தொகு]

இலங்கையில் உள்ள ஆற்றுக்கழிமுகங்களுக்கு உதாரணமாக பெந்தோட்டைக் கழிமுகம், கலா ஓயாக் கழிமுகம், மாதுறு ஓயாக் கழிமுகம் என்பவற்றைக் கூறலாம்.

பவளப்பாறைகள்[தொகு]

இலங்கையின் கடல்பகுதியில் காணப்படும் பவளப்பாறைகள், இலங்கைக்கு சுற்றுலா வருபவர்களைக் கவர்கின்றது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_கடல்_வளம்&oldid=3666186" இலிருந்து மீள்விக்கப்பட்டது