நூருல் இசா அன்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூருல் இசா அன்வார்
Nurul Izzah Anwar
نور العزة أنور
மலேசிய நிதி அமைச்சு: சிறப்பு ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 பிப்ரவரி 2023
மலேசியப் பிரதமர் துறையில் பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான மூத்த ஆலோசகர்
பதவியில்
3 சனவரி 2023 – 12 பிப்ரவரி 2023
மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 சூலை 2022
மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில்
28 நவம்பர் 2010 – 17 டிசம்பர் 2018
மலேசிய மக்களவை மசோதாக்கள் தேர்வுக் குழுவின் தலைவர்
பதவியில்
4 டிசம்பர் 2018 – 18 சூலை 2019
[[மலேசிய நாடாளுமன்றம் நாடாளுமன்றம்]]
for பெர்மாத்தாங் பாவ்
பதவியில்
9 மே 2018 – 19 நவம்பர் 2022
பெரும்பான்மை15,668 (2018)
[[மலேசிய நாடாளுமன்றம் நாடாளுமன்றம்]]
for லெம்பா பந்தாய்
பதவியில்
8 மார்ச் 2008 – 9 மே 2018
பெரும்பான்மை2,895 (2008)
1,847 (2013)
மலேசிய மக்களவை
2008–2018மக்கள் நீதிக் கட்சி
2018–2022பாக்காத்தான் ஹரப்பான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நூருல் இசா பிந்தி அன்வார்
Nurul Izzah binti Anwar

19 நவம்பர் 1980 (1980-11-19) (அகவை 43)
கோலாலம்பூர், மலேசியா
அரசியல் கட்சிமக்கள் நீதிக் கட்சி (பிகேஆர்)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் ராக்யாட்
(2008–2015)
பாக்காத்தான் ஹரப்பான் (PH)
(2015 முதல்)
துணைவர்(s)
ராஜா அகமது சாரிர் இசுகந்தர் ராஜா சலீம்
(தி. 2003; ம.மு. 2015)

இன் சாவோ லூங் (தி. 2022)
பிள்ளைகள்2
பெற்றோர்(s)அன்வர் இப்ராகீம் (தந்தையார்)
வான் அசிசா வான் இஸ்மாயில் (தாயார்)
வாழிடம்(s)பண்டார் சுங்கை லாங், சிலாங்கூர்
முன்னாள் கல்லூரிதேசிய தெனாகா பல்கலைக்கழகம் (BE)
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (MA)
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்www.nurulizzah.com
புனைப்பெயர்(s)மறுமலர்ச்சியின் இளவரசி
(Princess of Reformasi)
2008-ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் சந்திப்பு

நூருல் இசா அன்வார் (ஆங்கிலம்: Nurul Izzah Anwar; மலாய்: Nurul Izzah binti Anwar; சீனம்: 努鲁依莎) (பிறப்பு: 19 நவம்பர் 1980) என்பவர் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி; மலேசிய நிதி அமைச்சின் சிறப்பு ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர் (Co-chairperson of the Secretariat of the Special Advisory Body) பதவியை வகித்த மலேசிய அரசியல்வாதி;[1] மற்றும் இவரின் தந்தையார் அன்வர் இப்ராகீம் தற்போதைய மலேசியப் பிரதமர் ஆவார்.

2018 டிசம்பர் 4-ஆம் தேதியில் தொடங்கி 2019 சூலை 18-ஆம் தேதி வரையில் மலேசிய மக்களவை மசோதாக்கள் தேர்வுக் குழுவின் தலைவர் (Consideration of Bills Select Committee of Malaysia) பதவி; 2023 சனவரி முதல் 2023 பிப்ரவரி மாதம் வரையில்; அவர் பதவி துறப்பு செய்யும் வரையில் பிரதமர் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான மூத்த ஆலோசகராகவும் (Senior Advisor on Economics and Finance) பணியாற்றினார்.[2][3]

2008 மார்ச் 8-ஆம் தேதியில் இருந்து 2018 மே 9-ஆம் தேதி வரையில்; ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு லெம்பா பந்தாய் (Lembah Pantai Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகவும்; 2018 மே 9-ஆம் தேதியில் இருந்து 2022 நவம்பர் 19-ஆம் தேதி வரையில்; பெர்மாத்தாங் பாவ் (Permatang Pauh Federal Constituency) நாடாளுமன்ற உறுப்பினராகவும் சேவை செய்தவர்.

பொது[தொகு]

பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) எனும் முந்தைய பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க்கட்சிக் கூட்டணியின் ஓர் அங்கமான மக்கள் நீதிக் கட்சி (People's Justice Party) கட்சியில் நவம்பர் 2010 முதல் 2018 டிசம்பர் வரை; மற்றும் சூலை 2022 முதல் தற்போது வரையில் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

நூருல் இசா அன்வார், தம்புன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் (Tambun Federal Constituency) மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம்; மற்றும் பண்டார் துன் ரசாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான (Bandar Tun Razak Federal Constituency) வான் அசிசா வான் இஸ்மாயில் (Wan Azizah Wan Ismail); ஆகியோரின் மூத்த மகள் ஆவார்.

நூருல் இசாவின் தந்தையார் அன்வர் இப்ராகீம்; தாயார் வான் அசிசா வான் இஸ்மாயில்; இருவருமே மலேசியாவின் துணைப் பிரதமர்களாக பதவி வகித்தவர்கள்.[5]

கல்வி[தொகு]

நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பு இருந்தே, நூருல் இசா, மனித உரிமைச் செயல்பாடுகளுக்கு ஆதரவாளராக இருந்துள்ளார். இவர் மலேசிய தெனாகா பல்கலைக்கழகத்தில் (University Tenaga Nasional) இருந்து 2003-இல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

பின்னர் அவர் ஐக்கிய அமெரிக்காவில் தம் மேல்படிப்பைத் தொடர்ந்தார். ஜான்ஸ் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் (Johns Hopkins University) பன்னாட்டு உறவுகளில் தென்கிழக்கு ஆசியா எனும் தலைப்பில் ஆய்வுகள் செய்து முதுகலைப் பட்டம் பெற்றார்.

தேர்தல்[தொகு]

2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், நூருல் இசா கோலாலம்பூரில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியைத் தன் தந்தையிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் அவர் தேர்தலில் நின்றார் என்ற ஊகமும் இருந்தது. ஆனாலும் நூருல் இசா அத்தகைய ஊகங்களை நிராகரித்தார். இந்தக் கட்டத்தில் இவரின் தந்தையார் அன்வர் இப்ராகீம், மலேசியாவில் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்திய அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்குகளில் இருந்து விடுதலையான காலக்கட்டமாகும்.[5]

பாரிசான் நேசனல் அரசாங்கத்தில் மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சராக (Minister for Women, Family and Community Development) இருந்தவரும்; மூன்று முறை லெம்பா பந்தாய் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் இருந்த அமைச்சர் சரிசாத் அப்துல் ஜலீல் (Shahrizat Abdul Jalil), 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், லெம்பா பந்தாய் தொகுதியைத் தற்காத்தார்.[5]

28 வயதில் மக்களவை உறுப்பினர் பதவி[தொகு]

சரிசாத் அப்துல் ஜலீல் அந்த இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்வார் என்று அரசியல் ஆய்வாளர்கள் பலர் எதிர்ப்பார்த்தனர். அவர் அந்தக் கட்டத்தில் மலேசியாவில் ஒரு பிரபலமான அமைச்சராக விளங்கினார். இவர் 2004-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் 15,288 பெரும்பான்மையுடன் லெம்பா பந்தாய் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டவர் ஆகும்.[5][6]

இருப்பினும், 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், நூருல் இசா 21,728 வாக்குகளைப் பெற்றார். சரிசாத் அப்துல் ஜலீல் 18,833 வாக்குகளைப் பெற்றார். 2,895 வாக்குகள் வித்தியாசத்தில் லெம்பா பந்தாய்க்கான புதிய மக்களவை உறுப்பினராக நூருல் இசா தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது நூருல் இசாவுக்கு வயது 28.

சக்திவாய்ந்த அமைச்சர் தோல்வி[தொகு]

2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் நடைபெற்ற பல வியப்பான நிகழ்ச்சிகளில், ஒரு புதிய முகத்தால் சக்திவாய்ந்த அமைச்சருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியும் ஒரு வியப்பான நிகழ்ச்சியாகும். அந்தத் தேர்தலில், நாடளாவிய நிலையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு நாடாளுமன்றத் தொகுதி இழப்புகள் ஏற்பட்டன.[7]

அதன் பின்னர் நவம்பர் 2010-இல், மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக நூருல் இசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] அதன் பின்னர் 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் அவர் குறுகிய பெரும்பான்மையில் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார்.

இரு மூத்த அமைச்சர்கள் தோல்வி[தொகு]

ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி, அப்போதைக்கு ஓர் உயர்மட்ட அரசியல்வாதியாக இருந்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் சைனல் அபிடின் (Raja Nong Chik Zainal Abidin) என்பவரை நூருல் இசாவுக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் நிறுத்தியது. அதன் மூலம் நூருல் இசா குறிவைக்கப் பட்டார். இருப்பினும் நூருல் இசா அறுதிப் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றார். அந்த வகையில் லெம்பா பந்தாய் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரு மூத்த அமைச்சர்களும் தோல்வி கண்டனர்.

மே 2018-இல், பினாங்கில் உள்ள பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியிடம் தோல்வி அடையும் வரையில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nurul Izzah invited to co-chair secretariat of finance advisory panel". Free Malaysia Today. 12 February 2023. பார்க்கப்பட்ட நாள் 12 February 2023.
  2. "Nurul Izzah is PM's senior advsier on economics, finance". Free Malaysia Today. 29 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 February 2023.
  3. "Six new select committees announced, Anwar heads reforms caucus". Malaysiakini. 4 December 2018. https://www.malaysiakini.com/news/454684. 
  4. "Nurul Izzah returns as PKR veep". The Star. 21 July 2022. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.
  5. 5.0 5.1 5.2 5.3 [https://www.reuters.com/article/worldNews/idUSKLR26715720080228?pageNumber=2&virtualBrandChannel=0 Anwar's daughter steps into political wilderness, Ahmad Pathoni, Reuters, 28 February 2008
  6. Shahrizat hails challenge, Joceline Tan, The Star (Malaysia), 13 February 2008
  7. From outcast to future Prime Minister? பரணிடப்பட்டது 12 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம், Jessinta Tan, Today (Singapore newspaper), 10 March 2008
  8. PKR polls results officially announced The Star, 28 November 2010

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூருல்_இசா_அன்வார்&oldid=3698108" இலிருந்து மீள்விக்கப்பட்டது