நடுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடுப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636905

நடுப்பட்டி (Nadupatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643548.[1] இது மஞ்சவாடி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 183 குடும்பங்களும் 767 மக்களும் வாழ்கின்றனா். இதில் 389 ஆண்கள் 378 பெண்கள் ஆவா். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 49.7 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள்[தொகு]

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Nadupatti Village , Pappireddipatty Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுப்பட்டி&oldid=3611943" இலிருந்து மீள்விக்கப்பட்டது