தேவராஜபாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவராஜபாளையம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636904

தேவராஜபாளையம் (Devarajapalayam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643529.[1] இது மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 281 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 320 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°56'16.0"N 78°18'49.5"E[2] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 629 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2747 ஆகும். இதில் ஆண்கள் 1414 பெண்கள் 1333 ஆவா். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 39.4 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள்[தொகு]

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
  3. "Devarajapalayam Village , Pappireddipatty Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவராஜபாளையம்&oldid=3611861" இலிருந்து மீள்விக்கப்பட்டது