தண்டியலங்காரம்
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். காவிய தர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்களில் ஒன்று. இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார். தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் (946-1070)
அமைப்பு[தொகு]
பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ள இந்நூலில், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.
பொதுவியல்[தொகு]
பொதுவியல், முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் எனும் நான்கு வகையான செய்யுள்கள் பற்றி விளக்குகிறது. தொடர்நிலைச் செய்யுள் வகை பற்றிக் கூறும்போது அதன் வகைகளான பெருங்காப்பியம், காப்பியம் என்பவற்றின் இலக்கணங்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது.
பொருளணியியல்[தொகு]
பொருளணியியலில்,
- தன்மையணி
- உவமையணி
- உருவகவணி
- தீவக அணி
- பின்வருநிலையணி
- முன்னவிலக்கணி
- வேற்றுப்பொருள் வைப்பணி
- வேற்றுமையணி
- விபாவனை அணி
- ஒட்டணி
- அதிசய அணி
- தற்குறிப்பேற்ற அணி
- ஏதுவணி
- நுட்ப அணி
- இலேச அணி
- நிரல்நிறை அணி
- ஆர்வமொழியணி
- சுவையணி
- தன்மேம்பாட்டுரை அணி
- பரியாய அணி
- சமாகிதவணி
- உதாத்தவணி
- அவநுதியணி
- மயக்க அணி
- சிலேடையணி
- விசேட அணி
- ஒப்புமைக் கூட்டவணி
- ஒழித்துக்காட்டணி
- விரோதவணி
- மாறுபடுபுகழ்நிலையணி
- புகழாப்புகழ்ச்சி அணி
- நிதரிசன அணி
- புணர்நிலையணி
- பரிவருத்தனை அணி
- வாழ்த்தணி
- சங்கீரணவணி
- பாவிக அணி
ஆகிய 37 அணிகளுக்காண இலக்கணம் கூறப்பட்டுளளது.
சொல்லணியியல்[தொகு]
சொல்லணியியல், மடக்கு, சித்திரகவி, வழுக்களின் வகைகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.