உருவக அணி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது
விதி:
"உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்".
எடுத்துக்காட்டு
இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்.
- பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
- மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
எடுத்துக் காட்டுகள்
- உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
- உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
- உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
- உருவக அணி - புலி வந்தான்
- உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
- உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
- உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
- உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
உருவக அணியின் வகைகள்[தொகு]
- தொகையுருவகம்
- விரியுருவகம்
- தொகைவிரியுருவகம்
- இயைபுருவகம்
- இயைபிலியுருவகம்
- வியனிலையுருவகம்
- சிறப்புருவகம்
- விரூபக உருவகம்
- சமாதான உருவகம்
- உருவக உருவகம்
- ஏகாங்க உருவகம்
- அநேகாங்கயுருவகம்
- முற்றுருவகம்
- அவயவ உருவகம்
- அவயவி உருவகம்
என 15 வகைப்படும்.