சுவையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுவையணி அல்லது சுவை அணி என்பது கவிஞர்கள் தாம் சொல்ல வந்த கருத்தினை எட்டு சுவைகள் தோன்றப்பாடுவதாகும்.

குறிப்பு[தொகு]

"உள்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே" - என்கிறது தண்டியலங்காரம் 69-ம் பாடல்.

எட்டு வகை சுவைகள்[தொகு]

மேலே கூறிய எட்டு வகை சுவைகளானது இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது:

 1. வீரம்
 2. அச்சம்
 3. இழிவு
 4. வியப்பு
 5. காமம்
 6. அவலம்
 7. சினம்
 8. நகை (உவகை, மகிழ்ச்சி)

இதனை

"வீர மச்ச மிழிப்பொடு வியப்பே
காம மவல முருத்திர நகையே."
- என்று உரைக்கிறது தண்டியலங்காரம் 70-ம் பாடல்.

அணியின் வகைகள்[தொகு]

எட்டு வகை சுவைகளைக்கூறும் செய்யுள்கள் தாம் உரைக்கும் சுவையைப்பொருத்து அணியின் வகைகளாகின்றன. எனவே சுவையணியின் வகைகள் பின்வருமாறு:

 1. வீரச்சுவையணி
 2. அச்சச்சுவையணி
 3. இழிவுச்சுவையணி
 4. வியப்புச்சுவையணி
 5. காமஞ்சுவையணி
 6. அவலஞ்சுவையணி
 7. சினஞ்சுவையணி
 8. நகைச்சுவையணி

பரதக்கலையுடன் தொடர்பு[தொகு]

சுவை என்பதன் வடமொழி சொல் "ரசம்" (रस). நவரசங்களை பரதம் பழகுவோர் பல்வேறான உணர்ச்சிகளை வெளிப்படுத்த கற்பர். இவற்றுள் சாந்தம் என்பது எந்தவொரு வேறு எட்டு சுவைகளும் இல்லாதிருத்தல் என்பதனால் இதனை சுவையாக கணக்கிட மாட்டார்கள்.

தண்டியலங்கார சுவை நவரசங்களின் ரசம்
வீரம் வீரம் (वीरं)
அச்சம் பயானகம் (भयानकं)
இழிவு பிபாத்ஸம் (बीभत्सं)
வியப்பு அத்புதம் (अद्भुतं)
காமம் சிருங்காரம் (शृङ्गारं)
அவலம் காருண்யம் (कारुण्यं)
சினம் ரௌத்திரம் (रौद्रं)
நகை ஹாஸ்யம் (हास्यं)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவையணி&oldid=1397856" இருந்து மீள்விக்கப்பட்டது