ஒப்புமைக் கூட்டவணி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒப்புமைக் கூட்டவணி அல்லது ஒப்புமைக் கூட்டம் அணி என்பது தான் சொல்ல வந்த கருத்திற்கு ஒப்பாக பல பொருட்களை ஒன்றாக்கிக் கூறுவதாகும். ஒரு நபரின் அல்லது பொருளின் பல சிறப்புகளை ஒன்றாக தொகுத்துரைப்பது இவ்வணியின் தனிச்சிறப்பு.
குறிப்பு
[தொகு]- "கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்(து)
- ஒருபொருள் உரைப்ப(து) ஒப்புமைக் கூட்டம்." என்கிறது தண்டியலங்காரம் 79-ம் பாடல்.
வகைகள்
[தொகு]ஒப்புமைக் கூட்டவணி இரண்டு வகைகளென பின்வரும் தண்டியலங்காரம் 80-வது பாடல் விளக்குகிறது:
- "புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே,"
எனவே, ஒப்புமைக் கூட்டவணியின் வகைகளாவன:
- புகழ் ஒப்புமைக்கூட்டம் அணி
- பழிப்பு ஒப்புமைக்கூட்டம் அணி
எடுத்துக்காட்டு
[தொகு]திரிகடுகம் என்னும் நூலில் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று வகை மூலிகைகள் ஒன்றிணைந்து உடல்நலத்தினை சேர்ப்பது போல், ஒவ்வொரு செய்யுளிலும் 3 கருத்துக்களை இணைத்து வைத்து இவ்வணியினை சிறப்பாக கையாண்டுள்ளார் இதன் ஆசிரியர் 'நல்லாதனார்'. எடுத்துக்காட்டாக:
- தன்குணம் குன்றாத் தகைமையும், தாஇல்சீர்
- இன்குணத்தார் ஏவின செய்தலும், நன்குணர்வின்
- நான்மறையாளர் வழிச் செலவும், இம்மூன்றும்
- மேல் முறையாளர் தொழில்." --- 2-வது செய்யுள், திரிகடுகம்
இதன் பொருளானது: தனது குடியின் குணத்திற்கேற்ப குறையாத ஒழுக்கமும், இனிய குணமுடையோர் ஏவியவற்றைச்செய்து முடிப்பதும், நால்வகை வேதங்களின் வழிநடத்தலும் மேன்மை மிக்கவர் செய்யும் தொழிலாக கருதப்படுகிறது என்று புகழ் ஒப்புமைக்கூட்டம் அணியாக திகழ்கிறது.