முன்னவிலக்கணி
Appearance
முன்னவிலக்கணி அல்லது முன்னவிலக்கு அணி என்பது ஒரு பொருளை விவரித்து பின் அதனை விலக்குவது (மறுப்பது) என்பதாகும்.
குறிப்பு
[தொகு]- "முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே
- மூவகைக் காலமும் மேவியது ஆகும்." என்கிறது தண்டியலங்காரம் 43-ம் பாடல்.
வகைகள்
[தொகு]இவ்வணி முக்காலத்திலும் நடக்கும் வினைகளை விலக்குவதும் உண்டு. எனவே:
- இறந்தவினை விலக்கு
- நிகழ்வினை விலக்கு
- எதிர்வினை விலக்கு
என்று எப்போது விலக்குகிறது என்பதை ஒட்டி 3 வகைப்படுத்துவர்.
முன்ன விலக்கணி மூவகைப்படும். 1.இறந்தவினை விலக்கு 2.எதிர்வினை விலக்கு 3.நிகழ்வினை விலக்கு
எடுத்துக்காட்டு
[தொகு]1.இறந்தவினை விலக்கு (எ.கா) பாலன் தன(து) உருவாய் ஏழ்உல(கு) உண்(டு) ஆல்இலையின் மேல்அன்(று) கண்துயின்றாய் மெய்என்பர் -ஆல்அன்(று) வேலைநீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ? சோலைசூழ் குன்(று) எடுத்தாய் சொல்.