முத்தகச் செய்யுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முத்தகம் என்பது தண்டியலங்காரம் கூறும் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தனியே நின்று ஒரு பொருளைத் தந்து முடிவடைந்து விடுவது முத்தகச் செய்யுளாகும். இச்செய்யுளில் சொல்ல வந்த கருத்து ஒரே பாடலில் சொல்லி முடிவடைந்துவிடும்.

சான்று[தொகு]

"என்னேய் சில மடவார் எய்தற் கெளியவோ

பொன்னே! அனபாயன் பொன்னெடுந்தோள்- முன்னே தனவே என்றாளும் சயமடந்தை தோளாம் புனவேய் மிடைந்த பொருப்பு." இச்செய்யுளில் அனபாயனது மலை போன்ற நெடுந்தோள்கள் எய்தற்கெளியவோ என்று ஒரு செய்யுளின் கண்ணேயே பொருள் முற்றுப்பெற்றதால் இது முத்தகம் என்ற செய்யுள் வகையாகும்.

உசாத்துணை[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தகச்_செய்யுள்&oldid=958287" இருந்து மீள்விக்கப்பட்டது