தண்டி (வடமொழிப் புலவர்)
தண்டி என்னும் புலவர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தார்.[1] இவர் வடமொழியில் ‘தண்டியலங்காரம்’ என்னும் நூலை இயற்றினார். இந்த நூலைத் தழுவித் தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் தோன்றியது. தமிழில் எழுதப்பட்ட இந்த நூலும் தண்டியலங்காரம் என்னும் பெயரைப் பெற்றது. தமிழில் தண்டியலங்காரம் செய்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
தண்டி எழுதிய வடமொழி நூல்கள் மூன்று
- தண்டியலங்காரம்
- காவ்யாதர்சம் (கவிதைக் கண்ணாடி)
- அவந்தி சுந்தரி (வசனக் கதை)
காலம்[தொகு]
- வடமொழித் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் எட்டாம் நூற்றாண்டு.
- வடமொழித் தண்டியலங்காரத்தை இணைத்து ஐந்திலக்கண நூல் வீரசோழியம். இதன் ஆசிரியர் பௌத்த துறவி புத்தமித்திரர் காலம் (1060-1090) பதினோராம் நூற்றாண்டு
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ பாரவி என்பவர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த மற்றொரு வடமொழிப் புலவர்.