தொடர்நிலைச் செய்யுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடர்நிலைச் செய்யுள் என்பது செய்யுட்கள் தம்முள் பொருளால் தொடர்ந்து வருவதும், சொல்லால் தொடர்ந்து வருவதுமாகும். பொருளால் தொடர்ந்து வருவது பெருங்காப்பியம் , சிறு காப்பியம் என இரு வகைப்படும். சொல்லால் தொடர்ந்துவருவது அந்தாதியாகும்.

சான்று:

பொருள் தொடர்நிலைச் செய்யுள்[தொகு]

செய்யுள்கள் தம்முள் பொருளால் தொடர்ந்து வருவது பொருள் தொடர்நிலைச் செய்யுளாகும். இது பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இருவகைப்படும். பெருங்காப்பியத்தில் வாழ்த்து, அறமுதல்,நாற்பொருள், மலை முதலிய வருணனை எனப் பொருள் பல தொடர்ந்து வரும். சிறு காப்பியத்தில் பிள்ளைத்தமிழில் காப்பு முதலிய பருவப் பொருள்களும், உலாவில் பேதை முதலிய பருவப் பொருள்களும், பரணியில் கடை திறப்பு முதலிய பலவகைப் பொருள்களும் தொடர்ந்துவரும்.

சொற்றொடர்நிலை[தொகு]

செய்யுள்கள் தம்முள் சொல்லால் தொடர்ந்து அந்தாதியாக வருவது சொற்றொடர் நிலைச் செய்யுளாம்.

  1. இரட்டைமணி மாலை,
  2. கலம்பகம்.
  3. யமகவந்தாதி,
  4. திரிபந்தாதி

என்பன போல அந்தாதியாக வரும் சிற்றிலக்கியங்கள் யாவும் சொற்றொடர் நிலைகளாகும்.

உசாத்துணை[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968