உள்ளடக்கத்துக்குச் செல்

தசகுமார சரிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசகுமார சரிதம் (பத்து இளைஞர்களின் கதை) (தேவநாகரி: दशकुमारचरित) என்பது தண்டியலங்காரம், அவந்தி சுந்தரி, காவிய தர்சனம் போன்ற நூல்களை இயற்றிய தண்டி என்பவர் சமஸ்கிருத மொழியில் எழுதிய 10 இளைஞர்களின் உரைநடைக் காதல் காவியம் ஆகும். இக்காவியம் எட்டாம் நூற்றாண்டு வரை செழித்து வளர்ந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், அதன் உரை மரபு, ஆசிரியரின் அடையாளம் மற்றும் இயற்றப்பட்ட காலம் குறித்து தெளிவின்மை உள்ளது.

நூலின் கட்டமைப்பு

[தொகு]

தசகுமார்சரிதா நூல் கையால் எழுதப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட பதிப்புகளில் பொதுவாக மூன்று பகுதிகள் உள்ளன-[1]

  1. ஆரம்ப அல்லது பூர்வாங்க பகுதி, ஐந்து அத்தியாங்களைக் கொண்டது. இதனை பூர்வபீடிகை என அழைக்கப்படுகிறது
  2. நடுப் பகுதி எட்டு அத்தியாங்களைகொண்டது. இதில் தசகுமாரசரிதம் கூறப்படுகிறது.
  3. இறுதி அல்லது பிற்சேர்க்கை பகுதியை உத்தரப்பீடிகை என அழைக்கப்படுகிறது.

இவற்றில் எட்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் நடுப்பகுதி மட்டும் தண்டியின் மூலப் படைப்பாகக் கருதப்பட்டாலும், இராஜவாகனன் பற்றிய முழுமையற்ற கதையும், ஏழு நண்பர்களின் கதைகளும் அடங்கியிருப்பதால் அது முழுமையடையாது உள்ளது. மீதமுள்ள பகுதிகள், அதாவது பூர்வ பீடிகை மற்றும் உத்தர பீடிகை ஆகியவை பிற எழுத்தாளர்களின் தொகுப்புகளாகும், அவை முறையே மூல உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் காலப்போக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

தண்டி முழு நூலையும் முதலில் இயற்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர், ஆனால் பின்னர், சில காரணங்களால், அந்த பகுதிகள் அழிக்கப்பட்டது. தண்டியின் மூல நூலில் எட்டு குமாரர்களின் கதை மட்டுமே உள்ளது. பின்னர் புஷ்போத்பவன் மற்றும் சோமதத்தன் ஆகிய இரண்டு குமார்களின் கதையைச் சேர்க்கப்பட்டதால், பத்து குமார்களின் எண்ணிக்கை நிறைவடைகிறது. அதுபோல மூல நூலின் எட்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள முழுமையடையாத விஷ்ருதன் சரிதம் உத்தராபீடிகையில் முடிக்கப்பட்டுள்ளது. தசகுமாரசரிதையின் தொடக்கத்திலும், முடிவிலும் சில உரைகள் காணாமல் உள்ளது; எனவே பத்து கதைகளில் எட்டு மட்டுமே உள்ளது. மேலும் தசகுமாரர்களில் முதல்வனான ராஜவாகனன் மற்றும் விஷ்ருதனின் கதைகள் முழுமையடையாது உள்ளது.. 1வது மற்றும் 3வது அத்தியாயத்தின் பல்வேறு எழுத்தாளர்களால் பின்னர் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது

நூலின் சுருக்கம்

[தொகு]

மகத நாட்டைச் சேர்ந்த இளவரசர்கள் மற்றும் அமைச்சர் மற்றும் படைத்தலைவர்களின் மகன்களான பத்து இளைஞர்களின் வீரதீர சாகசங்களை விவரிக்கிறது. தேவதைகள், பேய்கள், விபச்சாரிகள், சூதாட்டக்காரர்கள், வினோதமான பெண்களின் சூழ்ச்சிகள், வியக்க வைக்கும் தற்செயல் நிகழ்வுகள், சேவல் சண்டைகள், மானுடச்சண்டைகள், சூனியம், கொலை, கொள்ளைகள் மற்றும் போர்கள் போன்றவற்றின் நிகழ்வுகளாள் இக்ககதை நிரம்பியுள்ளது. எடுத்துக்காட்டாக, இக்காவியத்தின் ஆறாவது அத்தியாயத்தில், தனது வருங்கால கணவருக்கு சாதம் மற்றும் காய்கறிகளின் நறுமண உணவை நேர்த்தியாகத் தயாரிக்க்கும் ஒரு இளம் பெண்ணின் உடற்கூறியல் அம்சங்கள் அனைத்தும் மிகவும் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ளது. இதன் ஏழாவது அத்தியாயத்தில் இளைஞன் மந்திர குப்தனின் காதலி, காதல் மிகுதியால் மந்திர குபதனின் உதடுகளை பல முறை கவ்வி சல்லாபம் மேற்கொண்டதால், மந்திர குப்தனின் உதடுகள் வீங்கியதால் உதட்டை மூடும் போது வேதனை உள்ளது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்..

தச குமாரர்களின் பெயர்கள்

[தொகு]
  1. இராஜவாகனன் (राजवाहन)
  2. சோமதத்தன் (सोमदत्त)
  3. புஷ்போத்பவன் (पुष्पोद्भव)
  4. அபகார்வர்மனன் (अपहारवर्मन)
  5. உபகார்வர்மன் (उपहारवर्मन)
  6. அர்த்தபாலன் (अर्थपाल)
  7. பிரமதி (प्रमति)
  8. மித்திரகுப்தன் (मित्रगुप्त)
  9. மந்திரகுப்தன் (मंत्रगुप्त)
  10. விஷ்ருதன் (विश्रुत).

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

ஆதார நூற்பட்டியல்

[தொகு]
சமசுகிருத நூல்கள்
  • Wilson, H. H. (1846). The Dasa kumara carita: or Adventures of ten princes. London: Society for the Publication of Oriental Texts.
  • N.B. Godabole and K. P. Parab, ed. (1906). The Dasakumaracharita of Dandin: with three commentaries. Bombay: Nirnaya Sagara Press.
  • Agashe, G. J. (1919). The Dasakumaracarita of Dandin. Bombay Sanskrit Series.
மொழி பெயர்ப்பு நூல்கள்
ஆய்வுக் கட்டுரைகள்
  • Gupta, D.K. (1972). Society and culture in the time of Dandin. Delhi: Meharchand Lachhmandas Publications.
  • Pankaj, N. Q. (2002). Dasakumaracarita: a cultural study. Kala Prakashan.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசகுமார_சரிதம்&oldid=3846171" இலிருந்து மீள்விக்கப்பட்டது