சோழ நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:08, 9 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சோழ நாடு
Chola Nadu
அடைபெயர்(கள்): தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
நாடுஇந்தியா
மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு, புதுச்சேரி
மாவட்டம்காரைக்கால் (புதுச்சேரி)
நாகப்பட்டினம்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருச்சி
திருவாரூர்
அரியலூர்
கடலூர்
கரூர்
பெரம்பலூர்
பெயர்ச்சூட்டுசோழர்
பரப்பளவு
 • மொத்தம்7,524 km2 (2,905 sq mi)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்51,91,035
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
609-614xxx,620xxx
வாகனப் பதிவுTN 45,46,48,51,68,82,55,47,50,49.
மொத்த மாவட்டங்கள்10
முக்கிய நகரங்கள்திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், புதுக்கோட்டை, மன்னார்குடி, அரியலூர், பெரம்பலூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், மணப்பாறை, துறையூர், வேதாரண்யம், திருவாரூர், நாகப்பட்டினம், குளித்தலை

சோழ நாடு (Chola Nadu, Cauver Delta) என்பது தற்போதைய இந்தியாவின், தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென்னிந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப்பாக ஆளப்பட்டது. சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மற்றும் வைணவ மதத்தை பின்பற்றினார்கள்.[சான்று தேவை]

இது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம் ஆகும்.[1]

சோழ அரசர்களின் பட்டியல்

அரசன் பெயர் ஆட்சியாண்டுகள்(கி.பி) தந்தை தலைநகரம்
விசயாலய சோழ வம்சம்
விசயாலய சோழன் 848-871 சுராதிராஜன்[2] தஞ்சாவூர்
ஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்
முதலாம் பராந்தக சோழன் 907-950 ஆதித்த சோழன் தஞ்சாவூர்
கண்டராதித்த சோழன் 950-955 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்
அரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்
இரண்டாம் பராந்தக சோழன் 957-973 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்
ஆதித்த கரிகாலன் 957-969 இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் காஞ்சிபுரம்
உத்தம சோழன் 970-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்
முதலாம் இராசராச சோழன் 985-1014 இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்
முதலாம் இராசேந்திர சோழன் 1012–1044 முதலாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் இராசாதிராச சோழன் 1018–1054 முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசேந்திர சோழன் 1051–1063 முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன் கங்கைகொண்ட சோழபுரம்
வீரராசேந்திர சோழன் 1063–1070 இரண்டாம் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
அதிராசேந்திர சோழன் 1070 வீரராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
சாளுக்கிய சோழர்கள்
முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120 முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் கங்கைகொண்ட சோழபுரம்
விக்கிரம சோழன் 1118–1136 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசராச சோழன் 1146–1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசாதிராச சோழன் 1163–1178 இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் குலோத்துங்க சோழன் 1173–1218 இரண்டாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராசராச சோழன் 1216–1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராசேந்திர சோழன் 1246–1279 மூன்றாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்

இருப்பிடம்

இந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும், தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.[3]

கி.பி 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் சோழர்கள் ஆட்சி செய்தனர்.உறையூர் (தற்போது திருச்சிராப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதி) ஆரம்பகால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் இடைக்கால சோழர்களால் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது. பின்னர் சோழ மன்னர் இராசேந்திர சோழன் 11 ஆம் நூற்றாண்டில் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.

மலை, காடு, விலங்குகள்

இந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.

நதிகள்

கர்னாடகதேசத்தின் தெற்குபகுதியில் ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதியானது, திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.

வேளாண்மை

இந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.

சிறப்பு

இந்த சோழதேசம் சோநாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.[4]

கருவி நூல்

சான்றடைவு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. அபிதான சிந்தாமணி.பக்.1611
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 269 -
  4. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 270-
  • "History of the Chola Empire or Chola-mandalam". Louis Gerber.
  • S. Gajrani (2004). History, Religion and culture of India. Gyan Publishing House. p. 5. ISBN பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8182050596, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182050594.
  • Eugene F. Irschick (1994). DIalogue and history: constructing South India, 1795-1895. University of california Press. p. 105.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழ_நாடு&oldid=2844518" இலிருந்து மீள்விக்கப்பட்டது