உள்ளடக்கத்துக்குச் செல்

இனியா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இனியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இனியா
Iniya
நடிகை இனியா
பிறப்புசுருதி சாவந்த்[1]
கேரளா,  இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005 – தற்சமயம்

சுருதி சாவந்த் (ஆங்கிலம்:Shruthi Sawant) இவர் இனியா என்னும் பெயரைக் கொண்டு நன்கு அறியப்படுபவர், இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். மேலும் இவர் பல மலையாள தொலைக்காட்சி தொடர், ஆங்கில குறும்படம் மற்றும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி படங்களில் நடித்துள்ளார்.[2] மேலும் 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார்.[3] 2010 ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான யுத்தம் செய் திரைப்படத்தில் சேரனின் சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு பல விருதுகளையும் பெற்றுத்தந்தது. இப்படத்தைத் தொடர்ந்து அருள்நிதியுடன் ‘மௌனகுரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் தங்கர்பச்சானின் இயக்கத்தில் அம்மாவின் கைபேசி என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா வாகை சூட வா படத்தில் இனியாவின் நடிப்பைப் பார்த்து வியந்து தான் இயக்கிவரும் திரைப்படமான அன்னக் கொடியும் கொடி வீரனும் என்றப் படத்தில் அமீரிருக்கு சோடியாக நடிக்க கையெழுத்திட்டார். பின்னர் அமீருக்கும், பாரதி ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு காரணங்களால் அமிர் படத்தில் இருந்து நீக்கப் பட்டார் ஆகையால் இனியாவும் இத்திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.[4]

திரைப்பட வரலாறு

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2005 சைரா மலையாளம்
2006 தி சேக்ரட் பேஸ் ஆங்கிலம் குறும்படம்
2009 டலாமர்மரன்கால் மலையாளம்
2010 பாடகசாலை தமிழ்
2011 யுத்தம் செய் சாரு தமிழ்
உம்மா மலையாளம்
வாகை சூட வா மதி தமிழ் சிறந்த அறிமுக நடிகைக்கான எடிசன் விருது[5]
பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த நடிகைக்கான விஜய் விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது
மௌன குரு ஆர்த்தி தமிழ்
2012 பூபாததில் இல்லாத ஓரிடம் பாமா மலையாளம்
அம்மாவின் கைப்பேசி செல்வி தமிழ்
2013 ஒமிகா.இஎக்ஸ்இ அலீனா அந்தோணி மலையாளம்
ரேடியோ சுவேதா மலையாளம்
சென்னையில் ஒரு நாள் தமிழ்
கண் பேசும் வார்தைகள் ஜனனி தமிழ் பிந்தைய தயாரிப்பு
நுகம் தமிழ் தயாரிப்பில்
நாகபந்தம் சக்கரா மலையாளம் படபிடிப்பில்
என்டெ ஒர்மய்ல் மலையாளம் படபிடிப்பில்
மாசாணி மாசாணி தமிழ் படபிடிப்பில்
2014 நான் சிகப்பு மனிதன் தமிழ்
2014 காக்கா முட்டை தமிழ்

ஆதாரம்

[தொகு]
  1. "Iniya goes places in Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708065733/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-26/news-interviews/30447323_1_sarkunam-vaagai-sooda-vaa-iniya. 
  2. "வாகை சூட வா திரைப்படத்தின் இனியா". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சினிமாவில் கவர்ச்சி மீறவும் கூடாது, குறையவும் கூடாது! இது இனியா பாலிஸி!!". தின மலர். பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "என்னது பாரதிராஜா படத்துல நான் இல்லியா? - இனியா ஷாக்". ஒன் இந்தியா. Archived from the original on 2013-02-24. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Vijay bags Rajini Award!!". Superwoods.com. 2012-02-15. http://superwoods.com/news-id-vijay-rajini-award-15-02-121071.htm. பார்த்த நாள்: 2013-11-03. 

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனியா_(நடிகை)&oldid=3931740" இலிருந்து மீள்விக்கப்பட்டது