உள்ளடக்கத்துக்குச் செல்

கருவணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நுகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முட்டையும், அதில் நிகழும் கலப்பிரிவினால் உருவாகும்கருமுட்டையின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளும்

கருமுட்டை அல்லது நுகம் (Zygote) என்பது பாலின இனப்பெருக்கம் வழியாக ஆண் பாலணுவும், பெண் பாலணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிர்கலம் ஆகும். பல்கல உயிரினங்களில் இந்த உயிர் க்கலமே கருமுட்டை வளர்ச்சியின் தொடக்க நிலையாகும். ஒருமடிய நிலையில் உள்ள இரு பாலணுக்கள் இணைவதனால், கருமுட்டை அல்லது முளையம் இருமடியமாக இருக்கும். அத்துடன் இரு பெற்றோரில் இருந்தும் மரபியல் தகவல்களைப் பெற்றிருக்கும்.

மாந்தரில் பெண்ணின் கருப்பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான தொடக்கநிலைத் தோற்றப்பாடே “கருமுட்டை”அல்லது “முளையம்” எனப்படுகின்றது. பெண்ணின் பாலணுவான அண்டமும், ஆணின் பாலணுவான விந்துவும் இணைவதனால் உருவாகும் கருமுட்டை பின்னர் குழந்தையாக வளரும். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற உறுப்பிலேயே கருமுட்டை வளர்வதனால் அந்த உறுப்பு கருப்பை என்று அழைக்கப்படுகின்றது. கருமுட்டை உருவாகும்போது, பெண்ணில் கருத்தரிப்பு நிகழ்கின்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. Cohen, Glenn; Daley, George Q.; Adashi, Eli Y. (January 11, 2017). "Disruptive reproductive technologies". Science Translational Medicine. 9 (372). doi:10.1126/scitranslmed.aag2959. Retrieved January 16, 2017. "In vitro gametogenesis (IVG)—the generation of eggs and sperm from pluripotent stem cells in a culture dish. Currently feasible in mice, IVG is poised for future success in humans and promises new possibilities for the fields of reproductive and regenerative medicine."
  2. Harrison CJ, Alvey E, Henderson IR (2010). "Meiosis in flowering plants and other green organisms". J. Exp. Bot. 61 (11): 2863–75. PubMed. doi:10.1093/jxb/erq191.
  3. Mirzaghaderi G, Hörandl E (2016). "The evolution of meiotic sex and its alternatives". Proc. Biol. Sci. 283 (1838). PMC 5031655 Freely accessible. PubMed. doi:10.1098/rspb.2016.1221.
முன்னர் மாந்த வளர்ச்சிக் கட்டங்கள்
கருமுட்டை
பின்னர்
கருக்குழவி


"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவணு&oldid=3745422" இலிருந்து மீள்விக்கப்பட்டது