அதியமான் கோட்டை (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதியமான் கோட்டை
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636807

அதியமான் கோட்டை (Adiyamankottai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரில் ஒரு காலத்தில் அதியமான் கோட்டை இருந்ததால் கோட்டையில் பெயரிலேயே ஊரும் அழைக்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நல்லம்பள்ளியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 298 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2410 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 9610 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4670 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4940 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 67.0 %ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதியமான்_கோட்டை_(ஊர்)&oldid=3600627" இலிருந்து மீள்விக்கப்பட்டது