அஞ்செட்டி துர்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்செட்டி துர்கம்
சிற்றூர்
அஞ்செட்டி துர்கம் மலை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 113

அஞ்செட்டி துர்கம் (Anchettidurgam) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சிக்கு அருகில் உள்ள, போடிச்சிப்பள்ளி ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூராகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், கெலமங்கலத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 307 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

ஊருக்கு அருகில் உள்ள மலையும் இதே பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3192 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இந்த மலையில் சேதமுற்ற நிலையில் கோட்டை உள்ளது. மலையில் ஒரு சிறிய சிவன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு இயற்கையான குளம் ஒன்றும் காணப்படுகிறது. மலைப் பகுதியில் பழங்காலத்தைச் சேர்ந்த நிறைய பானையோடுகள் காணப்படுகின்றன. 18ஆம் நூற்றாண்டில் இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் கீழ் இருந்தது. இக்கோட்டையை 1791 1791 காலத்தில் நடந்த ஆங்கிலேய-மைசூர்ப் போர்களின்போது கைப்பற்றினர்.[2]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Anchittydurgam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.
  2. கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 129. {{cite book}}: Check date values in: |year= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்செட்டி_துர்கம்&oldid=3659134" இலிருந்து மீள்விக்கப்பட்டது